கலகலப்பு தீசன் கதைக்கிறார் ❤️😁













“சிரிக்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்” என்பர்.
நகைச்சுவை என்பது ஒரு கலை என்றால்,

தற்காலச் சூழ்நிலையைக் கண் கொண்டு பார்த்து அதை நகை மொழியில் கொடுப்பது என்பது ஒரு மகத்தான கலை.

அந்த மாதிரியான நுட்பம் கைவரப் பெற்றவர் கலகலப்பு தீசன்.

ஈழத்தமிழரின் அவல வாழ்க்கையை நகை முகம் கொண்டு பார்த்து

அவர் கொடுக்கும் கலகல மொழிகள் யாரையும் முகம் சுழிக்க வைக்காது சிரிப்பில் ஆழ்த்தும்.

ஈழத்தில், இணுவிலில் பிறந்தவர் “கலகலப்பு" என்ற சஞ்சிகையை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் தோழமைகளோடு இணைந்து நடத்தி ஈழம் பூராகவும் வாசக வட்டத்தை விரித்தார்கள்.

விவசாயியின் மகன் என்ற எள்ளலை அவரின் சாதனைக்கான பொறியாக எடுத்துக் கொண்டு விவசாயத்துறையில் உயர் புலமைப்பரிசில் பெற்றுத் தன் இளவயதிலேயே அமெரிக்காவுக்குப் பயணித்தவர்.

ஒரு பக்கம் புலமைத்துவத்திலும், இன்னொரு பக்கம் நகைச்சுவைப் புலத்திலுமாக இரு முகங்கள் கொண்டவர்.

கனேடிய மண்ணில் தன் நீண்ட இருப்பில் தொடர் மேடை நாடக நிகழ்வுகள், திரைப்படங்கள், பத்திரிகை எழுத்து என்று வீச்சோடு பயணிப்பவரின் காலப் பெட்டகமாக இந்தப் பேட்டியைப் பகிர்கிறார்.

கலகலப்பு தீசனின் ஐம்பது ஆண்டு கலைப்பயணத்தின் பதிவாக அமைந்தாலும் இன்னொரு முறை இன்னும் இவரிடம் அள்ள வேண்டும்.

என்னுடைய கால் நூற்றாண்டு வானொலி அனுபவத்தில் ஒரு மணி நேரம் சிரித்துச் சிரித்துப் பேட்டி எடுத்தது இதுவே முதன்முறை.



Spotify இல் கேட்க


கலகலப்பு தீசனோடு கதைத்தவர்
அதே இணுவிலில் இருந்து புலம்பெயர்ந்த


கானா பிரபா

26.07.24



 




No comments: