யூனியன்கல்லூரி, 1816 ஆம் ஆண்டளவில் வட அமெரிக்காவிலிருந்து மதம் பரப்ப வந்த திருச்சபையினர் வடபகுதியில் ஆரம்பித்த முதல் ஆங்கிலப்பாடசாலை ஆகும். இந்தப்பாடசாலையின் அமெரிக்க வெள்ளை முதல்வர்களை அடுத்து வந்த முதல் சுதேச அதிபர் ஐ.பி.துரைரத்தினம். நான்காவது அதிபர் கதிர்.பாலசுந்தரம். இவர் ‘Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், அறுபதுகளின் நடுப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைப் பட்டதாரியானார். லண்டன் பல்கலைக்கழக இடைக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இலங்கையின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தொழில்கள் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்.
வரலாறு என்று பல்துறையிலும் தடம் பதித்த எழுத்தாளர். இவர் எழுதி நெறிப்படுத்திய நாடகங்களில் ‘விஞ்ஞானி என்ன கடவுளா?’, ’சாம்பல் மேடு’, ‘விழிப்பு’ என்பவை வித்தியாசமான சமூகப்பார்வை கொண்டவை. ‘விஞ்ஞானி என்ன கடவுளா?’, ‘விழிப்பு’ என்ற நாடகங்கள் வானொலி நாடகங்களாக வந்து பாராட்டுப் பெற்றவை. எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின. ஆங்கிலமொழியிலும் எழுதும் இவர் ‘அந்நிய விருந்தாளி’ சிறுகதைத் தொகுப்பு, ‘மறைவில் ஐந்து முகங்கள்’, ‘கனடாவில் ஒரு நவீன சாவித்திரி’, ‘சிவப்பு நரி’ நாவல்கள், ‘அமிர்தலிங்கம் சகாப்தம்’, ‘சாணக்கியன்’ வாழ்க்கைச் சரிதைகள் , ’சத்தியங்களின் சாட்சியம்’ ஆய்வு நூல் மற்றும் ‘The Five Hidden Faces’, ’His Royal Highness, The Tamil Tiger’ என்ற ஆங்கிலநாவல்களையும் படைத்துள்ளார்.
’அமிர்தலிங்கம் சகாப்தம்’, ‘சாணக்கியன்’ என்ற புத்தகங்களின் மூலம்
இரு அரசியல் தலைவர்களது சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். ’சாணக்கியன்’ என்னும்
நூல் – தமிழ் அரசுக்கட்சியின் ஆரம்பகால வரலாற்றைச் சொல்லும் – தமிழ் அரசுக்கட்சியை
வளர்த்த வன்னியசிங்கம் அவர்களைப் பற்றிப் பேசும் நூல்.
எழுத்தாளரான இவர் தனது 96வது வயதில் கனடாவில் (01.06.2024) காலமானார். மனித உரிமைவாதி (Human Rights Defender) என்ற அளவில் அமையும் இவரது நூல்கள் இலக்கிய உலகில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
No comments:
Post a Comment