எனது பார்வையில் கற்பகதரு நூல் வெளியீட்டு விழா!

 ஆங்கில ஆண்டு 2024, மாதம் ஆறு திகதி இரண்டு, நேரம் பிற்பகல்


நான்கு மணியளவில்  கரம்ஸ்டவுன் சிவா விஷ்ணு ஆலயத்தின் பீகொக் மண்டபத்தில் கற்பகதரு நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.

இயற்கையின் சுழற்சியால் மெல்பனில் குளிர்காலம் தொடங்கியிருந்தது. மயக்கும் மாலைப்  பொழுது மெல் பனில் குளிர்காலத் தொடக்கத்தில் அதிக குளிரின்றி வெயில் வெண்சாமரம் வீசியது. மகிழுந்திலிருந்து இற ங்கி மண்டப த்துக்குள் நுழைந்தேன். ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த நூலா சிரியர் திரு. ஜெயராமசர்மா புன்முறுவல் தாங்கிய இன்முகத்தோடு வரவேற்றார்.

நான்கு மணியிலிருந்து மக்கள் வந்து கொண்டிருந்தனர். மங்கல

விளக்கேற்றல் மற்றும் வரவேற்புரையைத் தொடர் ந்து திரு. மாவை நித்தியானந்தன் அவர்கள் பொன்னாடை  போர்த்தி கௌரவிக்கப் பட்டார். அத ன்பின் அவர் தனது வாழ்த்துரையை வழங்கினார்.  " ஜெயராமசர்மாஎ எனக்கு நல்ல நண்பர். எங்கள் பாரதி பள்ளியின் கற்றல் , கற்பித்தல் செயற்பாட்டுக்குப் பலவழிகளில் உதவி இருக்கிறார். அவரின் ஆற்றலை , அவரின் பெறுமதியை - யாவரும் அறியாமல் இருக்கிறார்கள். அவர் அமைதியாய் தனது பணிகளை ஆற் றிக் கொண்டிருக்கிறார். அவரை நாங்கள் அனைவரும் சரியாகப் பயன் படுத்திக் கொள் ளுவது அவசியம். ஜெயராமசர்மா ஒரு நல்ல மனிதர்  " என்று   வாழ்த்துரையில் மாவை நித்தியானந்தன்  அவர்கள் சுட்டிக் காட்டிப் பேசினார்.  
தலைமையேற்ற எனக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுப் பொருளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டேன்.
அதன்பின் திரு. ஜெயராமசர்மா எழுதிய கற்பகதரு நூலை நான் வழங்க அவர் முதல் பிரதியை பெற்றுக் கொண் டார்.  அதனைத் தொடர்ந்து நான் ஆற்றிய தலைமையரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்னைத் தமிழுக்கும் ஆசான் வள்ளுவனுக்கும் இங்கு இன்பமுடன் வீற்றிருக்கும் ஈடற்ற தமிழன்பர்களுக் கும் உள்ளத்தே தோன்றி ஊற்றெனப் பெருக்கெடுக்கும் என் அன்பின் வணக்கத்தை ஏற்புடையதாக்கி வணங்குகிறேன். ஒப்பற்ற தமிழில் ஓங்குபுகழ் நீதி சொல்ல ஔவை எழுத ஏடு தந்த தரு யாதெனில் அஃதே கற்பகதரு என்பேன்.


கற்பகம் என்றால் கல்லை பகுத்தல் என்று பொருள்படும். பகுத்தல் என்றால் வெட்டுதல் அல்லது செதுக்குதல் என் றும்  பொருள்படும். கல்லில் எழுத்துக்களை வெட்டுவதால் கல்வெட்டு ஆனது. கல்லை பகுத்தலினால் தான் கற்பகம் ஆனது. இந்த கற்பகம் என்பதே மருவி நாளடைவி சிற்பம் ஆனது. இது ஆய்வுக் கருத்து.

இன்னொரு கருத்தும் உள்ளது. அது ஆன்மீக கருத்து. புராணத்தில்

கற்பகதரு என்ற ஒரு தரு இருந்ததாம். அது வேண் டுவனவற்றை எல்லாம் தருமாம். இங்கு நான் திரு. ஜெயராமசர்மா அவர்களையும் கற்பகதரு என்பேன். நான் அப் படி சொல்ல காரணம் அவரும் வேண்டுவனவற்றை கொடுப்பார். அப்படி என்னவெல்லாம் கொடுப்பார்?

கவிதை கொடுப்பார், கட்டுரை கொடுப்பார், கதை கொடுப்பார், நாவல் கொடுப்பார் நூலும் கொடுப்பார். அது மட் டுமா? அன்பைக் கொடுப்பார், பண்பைக் கொடுப்பார் நட்பையும் கொடுப்பார். இத்தகைய பன் முகத்தன்மை கொண்ட இவர் ஒருநாள் கைபேசியில் சுப்பு என்று அழைத்தார். இவர் எப்போதும் சுப்பு என்று என்னை அன்போடு அழைப்பார்.


அழைத்தவர் எனக்கு ஒரு உதவிசெய்ய முடியுமா என்றார். சொல்லுங்கள் என்னால் முடிந்தால் செய்கிறேன் என் றேன்.  நான் ஆடி கார் வாங்கப் போகிறேன். கொஞ்சம் பணம் தேவை என்றார்.

அவரின் நகைச்சுவை நமக்குத் தெரிந்ததே. நானும் அதனாலென்ன ஆடி என்ன ஃபெராரியே வாங்குங்கள் என்றேன். அதற்கு அவர் ஆடி ஆவணியெல்லாம் அப்புறம் பார்ப்போம். நான் ஒரு நூல் வெளியிடவுள்ளேன். அதற்கு தலைமை தாங்கவேண்டும் என்றார்.

மெல்பனில் தமிழறிந்த பல சான்றோர் பெருமக்கள் இருக்க என்னை தலைமதாங்க தாங்க சொன்னதை எண்ணிப் பார்த்தபோது எனக்கு ஒரு திரைப்படப்பாடல் என் நினைவில் வந்தது. இதுதான் அந்தப்பாடல்.





மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழைபோல தன்ன தந்து தியாகியாகலாம்
மெழுகுபோல உருகி ஓட ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள் இரண்டு.

மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்





என்பவைதான் அந்த இரண்டு வரிகள். அந்த இரண்டு வரிகளை நான் இங்கு சொல்லக்காரணம் பன்முகத் தன்மை கொண்ட இவருக்கு என் பால் ஒரு மனமிருந்தது. அப்படி மனமிருந்ததால்தான் கடுகுக்குள்ளே மலையைக் காண் பதுபோல் தலைமை தாங்குமாறு என்னைக் கேட்டார்.

நான் சரி என்றதும் எனக்கு வாசிக்க நூலைத் தந்தார். அந்த நூலைப் பெற்றதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று அந்நூலின் முகப்பு. மற்றொன்று கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரி. நூலின் முகப்பு பசுமை யாக நெடி துயர் ந்த பனைமரங்களோடும் பசுமாடுகளோடும் இருந்தது தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலு ள்ள எனது ஊரின் பனை மரங்களையும் பசுமாடுகளையும் நினைவூட்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி.

அடுத்த மகிழ்ச்சிக்கு காரணம் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி. நான் கோவை வேளாண்மைக் கல் லூரியில் படிக்க விரும்பி பள்ளியில் விவசாயத்தை ஒரு பாடமாக எடுத்து படித்தேன். உதவித்தொகை கிடை க்கு மளவுக்கு உயர் மதிப்பெண்களையும் பெற்றேன். ஆனால் சூழ்நிலை என்னை பொறியியலாளனாக்கியது.

இந்த நூலுக்காக கோவை வேளாண்மைக் கல்லூரியுடன் தொடர்புகொண்டு பல தகவல்களை சேகரித்துள் ளார் . நான் விரும்பிய அக்கல்லூரியில்தான் படிக்க முடியாது போனாலும் அக்கல்லூரியில் இருந்து பெற ப்பட்ட தகவல் களை சுமந்திருக்கும் நூல் வெளியீட்டிலாவது தலைமை தாங்குகிறோம் என்ற மகிழ்ச்சி.

தலைமை தாங்க ஒப்புக் கொண்ட எனக்கு தலைவாழை இலைபோட்டு அறுசுவை உணவைப் படைத்தது போன்றி ருந்தது. உணவை உண்ணலாம் என்று எண்ணியதும் என் கையைப் பிடித்துக்கொண்டு சுவை மட்டும் பார்க்கலாம் உணவை உண்ண வேறொருவர் இருக்கிறார் என்றார். நீங்கள் தலைமை தாங்குங்கள் நயவுரை சொல்ல இன்னொ ருவர் இருக்கிறார் என்றார்.

அவர் யாருமல்ல நண்பர் ஆவூரான் சந்திரன் அவர்கள்தான்.  ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்க த்தில் சேர்த்தும் விட்டார்.   துணைத் தலைவர் மற்றும் தலைவர் பகுதியை வகித்தேன். இப்போது அச்சங் கத்தில் செயற்குழுவிலும் இருக்கிறேன்.

தலைவர் நீங்கதான் நயவுரையை இன்னொருவர் வழங்குவார் என்றது திரைப்படமொன்றின் நகைச்சுவை காட் சியை நினைவூட்டியது. அதில் நகைச்சுவை நடிகர் கதாநாயகனைக் காட்டி மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டி ருக்கும் சட்டை என்னுடையது என்பதைப் போன்றிருந்தது.

சரி, அறுசுவையில் ஒன்றிரண்டை சுவைபார்க்கலாம் என்று புத்தகத்தை திறந்தால் அதனுள்ளே நாற்பது சுவை இருந்தது. இவர் பதினெண் கீழ்க்கணக்கில் வரும் இன்னா நாற்பது எழுதிய கபிலரைப் போல இனிய வை நாற்பது எழுதிய பூதஞ்சேந்தனாரைப்போல சுவை நாற்பது எழுதியிருக்கிறாரே என்று புத்கத்தின் முகப்பு அட்டையை திருப்பிப் பார்த்தேன். கற்பகதரு என்றே இருந்தது. சுவை நாற்பது என்றிருந்தாலும் தப்பில்லை.

நாற்பது சுவையிருப்பதால் இரண்டு மூன்று சுவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கி றேன். முதலாவதாக முதல் அத்தியாயம்.

முதல் என்பதற்கு எப்போதுமே ஒரு தனிச் சிறப்பு உள்ளது. முதலில் பார்த்த திரைப் படம் முதலில் படித்த நூல் முதல் சம்பளம் என்பவற்றைப்போல. ஒரு நூலின் முதல் அத்தியாயமும் அதுபோலத்தான். முதல் அத்தியாயம் தொடர்ந்து படிக்கத் தூண்டும் விதமாக அமைய வேண்டும். சோர்வு தட்ட வைத்துவிடக் கூடாது.

எனவே நூலாசிரியர் அதில் மிகவும் கவனமெடுத்திருக்கிறார். தமிழ் கல்வி இயக்குனராக பணியாற்றிய இவருக்கு திட்டமிடல் கைவந்த கலை என்பதை முதல் சுவையிலேயே முகம் மலரவைத்துள்ளார். தமிழெ ன்றால் இனிமை. தமிழுக்கு இனிமை இலக்கியம் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் முதல் சுவையி லேயே இலக்கியத்தை தந்திருக்கி றார்.

பனை மரத்தின் சிறப்பைக்கூற திருக்குறளை துணைக்கு அழைத்து தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக கொள்வர் பயன் தெரிவார் என்று நன்றியின் வெளிப்பாட்டுக்கு பனையை சான் றாக்குகிறார். என்றோ நட்டு சிறிதளவே தண்ணீர் ஊற்றியிருப்பர். ஆனால் அது வளர்ந்து பெரிதானதும் என்றோ ஊற்றிய நீருக்காக எண் ணற்ற பலன்களை கொடுப்பதைச் சொல்லியிருப்பது சாலச்சிறந்து நிற்கிறது.

அது மட்டுமா? சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களின் மாலைகளைப்பற்றி சொல்லும்போது பனம்பூமாலை களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அறத்தை வலியுறுத்தும் நூலான நாலடியாரிலும் பனையின் பெருமை யை பறைசாற்றி முதல் சுவையிலேயே மனங்கவர்ந்து நிற்கிறார்.

அடுத்தது இருபதாவது சுவையைப்பற்றி சிறிது கூறுகிறேன். கல்லில் நார் உறிப்பது என்பதனை முடியாத செய லுக்கு உவமையாக கூறுவர். ஆனால் திரு. ஜெயராம சர்மா அவர்கள் கல்லில்தானே நார் உரிக்க முடி யாது நாரில் நார் உறிக்கலாம் அல்லவா என்று நாரை நன்றாகவே உரித்திருக்கிறார்.

கல் என்றால் நமக்கு கல் மட்டும்தான் தெரியும். மிஞ்சிப் போனால் பாறை மற்றும் மலை மட்டுமே தெரியும். ஆனால் ஒரு சிற்பிக்கு அது வெறும் கல்லாக மட்டும் தெரியாது. மாறாக பலவிதமான சிற்பங்களாகவே தெரியும். அதுபோல நமக்கு வெறும் நாராகத் தெரிந்த நார் இவருக்கு வேறு விதமாகவும் இருப்பது தெரிந் திருக்கிறது.

தமிழறிந்த தகைமையுடைய இவருக்கு அகநானூறு புறநானூறு தெரிந்திருப்தைப்போல் அகணிநார் புற ணிநார் என்று தெரிந்திருப்பதுடன் சோத்திநார் என்பது பற்றியும் தெரிந்திருக்கிறது. இப்படி நாரின் வகை களைப்பற்றி சொல்லியிருப்பதோடு மட்டும் விடாமல் எந்த நாரிலிருந்து என்னென்ன பொருட்களையெல் லாம் தயாரிக்கலாம் என்று பட்டியலிட்டிருபது வியப்பாக உள்ளது.

பெண்ணின் பெருமையை பற்றி குறிப்பிட்டபடியே பனைமரத்துக்கு கட்டுரையை நகர்த்துகிறார். பெண்ணு க்குத் தான் கருப்பையும் அந்தக் கருப்பையில் கருவைச் சுமந்து வளர்த்து மகப்பேறு அடையும் பேறு கிடைத் துள்ளது என்று கூறும் இவர் பெண்பனையில் மட்டுமே குரும்பைகள் வருகின்றன. குரும்பை நுங்காக மாறுவ தையும் பின் நுங்கு பனங்காயாகவும் பனம்பழமாகவும் மாறுவதை தென்னையோடு ஒப்பிட்டுக்கூறும் பாங்கை கட்டுரைக் குள் சென்றால் மட்டுமே உணர முடியும்.

நிறைவாகக நாற்பதாவது அத்தியாயத்திதை கரும்பு தின்னக்கூலி வேண்டுமா என்று தொடங்கியிருப்பது இத்தகைய நூலைப்படித்த நீங்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைக்காமல் இருக்க முடியுமா என்று நம்மை கேள் விகேட்பதுபோல் உள்ளது. உண்மையிலேயே இந்நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன். நான் நயவுரை வழங்குபவருக்காக இரண்டு மூன்று அத்தியாயங்களை பற்றிமட்டுமே மேலோட்டமாக கூறியுள்ளேன்.

சுவை என்றால் அதில் இனிப்பு இல்லாது போகுமா? இனிப்பு என்றவுடனே தேன், சீனி அல்லது சர்க்கரை நம் நினை வுக்கு வரும். அதுவும் குறிப்பாக கற்பகத்தருவை படிக்கும் போது பனச்சர்க்கரை அல்லது பனஞ்சீனி நம் நினை வுக்கு வருவதை தவிர்க்க இயலாது.

அந்த நினைவுக்கு தீனி போடுவதுபோல் பதனியிலிருந்து பனங்கட்டி, பனஞ்சீனி போன்றவை எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பவற்றையும் அதை இலங்கையில் எப்படி எப்போது எங்கெல்லால் உற்பத்தி செய்தார்கள் என்பனவற் றை தெள்ளத் தெளிவாக அள்ளித் தந்திருக்கிறார். இதற்கும் மேலாக அந்ந நூலை வாசித்து தெரிந்து கொள்ளுங் கள்.  இதற்கும்மேல் இந்த நூலைப்பற்றி சொன்னால் ஆவூரான் சந்திரன் என்னைக் கோபித்துக் கொள்வார்.
ஏனென்றால் ஒருவருக்கு கொடுத்த பணியை பிடுங்கி இன்னொருவர் செய்யக கூடாதல்லவா? எனவே எனது உரையை நிறைவு செய்யலாம் என் நினைக்கிறேன்.

அதற்கு முன் ஒரு கவிதை. திரு. ஜெயராமசர்மா அவர்களைப் பற்றியது. அதாவது பழைய பாட்டிலில் புதிய …..தப்பாக நினைக்காதீர்கள், பழச்சாறு.

கற்பகதரு என நூலினைப் படைத்து
நற்புகழ் பெற்றாரையா - ஐயா
கற்பகதரு என நூலினைப் படைத்து
நற்புகழ் பெற்றாரையா - ஐயா
கற்பகதரு என நூலினைப் படைத்து
நற்புகழ் பெற்றாரையா

பற்பலரும் படித்து பயன்பெற்றின்புறவே….
ஏ…….ஏ……
பற்பலரும் படித்து பயன்பெற்றின்புறவே
பற்பலரும் படித்து பயன்பெற்றின்புறவே

அன்புதமாய் நூல் தந்த அழகுடை நம்பி
அன்புதமாய் நூல் தந்த அழகுடை நம்பி

கற்பகதரு என நூலினைப் படைத்து
நற்புகழ் பெற்றாரையா - ஐயா
கற்பகதரு என நூலினைப் படைத்து
நற்புகழ் பெற்றாரையா!

நன்றி, வணக்கம்.

என் தலைமையுரையைத் தொடர்ந்து
திரு. சந்திரன் சண்முகம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார். சந்திரன் தனது உரையில் " கற்பகதரு நூல் ஒரு ஆராய்ச்சி நூலாகும். ஜெயராமசர்மா ஐயா அவர்கள் எப்படித்தான் இவ்வளவு தகவல்களைத் திரட்டினாரோ என்று நினைத்துப் பாஅர்க்கையில் பெரும் மலைப்பாகவே தென்படுகிறது. உதனைப் பாடப் புத்தகமாகவே வைத்தால் மிகவும் பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகின்றேன்.  ஐயா அவர்களின் கற்பகதரு நூலினை யாவரும் கட்டாயம் வாங்க வேண்டும். அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு நூல்தான் கற்பகதரு என்று ஆவூரான் சந்திரன் குறிப்பிட்டு தனது ஆய்வுரையினை வழங்கினார்" .  சிறப்புப் பிரதிகளை வழங்கியபின் திரு. ஜெயராமசர்மா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நூலை வாங்க விரும்பியவர்கள் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர். அரங்கு நிரம்பிய கூட்டம் இருந் ததால் நூலை வாங்க நின்றவர்களின் வரிசையும் நீண்டிருந்தது. நிறைவாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியுடன் காப்பி மற்றும் தேனீர் வழங்கப்பட்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது  என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.நல்ல நூல் வெளியீட்டு விழா. குளிராய் இருந்த பொழுதும் அரங்கு நிரம்பி இருந்தது. " கற்பகதரு " நூல் வெளியீட்டு விழா களிப் பாய் காத்திரமாய் அமைந்திருந்தது. 


-சங்கர சுப்பிரமணியன்.

No comments: