இன்று வெளியிடப்பட்ட ஈழவாணியின் "மூக்குத்திப்பூ" திரைப்பட முன்னோட்டம் .

 .

இலங்கை தமிழர்களின் திரைப்படங்கள் பல அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்போது R . தினேஷின் "எதுவும் கடந்து போகும்" திரைப்படம் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப் பட்டு Reading cinema வில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அத்தோடு ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' திரைப்படமும் 

ஓடிக்கொண்டிருக்கின்றது. நல்லது அல்லது சரியில்லை என்பவற்றிற்கு அப்பால் இலங்கைத் தமிழர்களின் திரைப்பட துறையும் மீண்டும் உயர முயல்கின்றது. நீண்ட காலங்களாக முடங்கிக் கிடந்த இந்த துறையானது இப்போது ஆர்வத்தோடு எழுகின்றது. பல இளைஞர்களும் யுவதிகளும் பல துறைகளிலும் இதனால் வேலை வாய்ப்பை பெறுகின்றார்கள் . 

                                               R . தினேஷின் "எதுவும் கடந்து போகும்"
இந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் ஆதரவை வழங்கியவர்கள் இலங்கைத் தமிழர்கள். இப்போது இலங்கைத் தமிழர்களின் திரைப்படங்களுக்கும்  தங்கள் ஆதரவை தருவார்கள் அந்த துறையில் உள்ளவர்களை  உயர்த்தி விடுவார்கள் என்பது எமது நம்பிக்கை. இலங்கையின் பெண் இயக்குனரான ஈழவாணி  பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஓரு நெறியாளர். அவரது லூசி பலராலும் பேசப்பட்டது தற்போது ஜூன் மாதம் 6ம் திகதி அவரின் இன்னுமொரு திரைப்படமான " மூக்குத்திப்பூ"  திரைக்கு வருகின்றது. உலகில் பல நாடுகளில் வெளிவர இருக்கும் இந்தத் திரைப் படம் அவுஸ்திரேலியாவில் திரையிடப் பட இருப்பதாக அறிகின்றோம். பூவரசி வெளியீடாக அமைந்த இத்திரைப் படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றது. இன்று வெளியிடப்பட்ட விளம்பர நறுக்கை பாருங்கள். 

                                                R . தினேஷின் "எதுவும் கடந்து போகும்"No comments: