அவுஸ்திரேலியா மெல்பேனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்க்
கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் நரே-வொரென் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17/12/23) கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன், விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும், அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி ஸ்ருத்திகா உருத்திரகுமாருக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மேலும், பரிசளிப்பு விழாவின் இறுதியில், அவுஸ்திரேலியா மண்ணில் தமிழ் சமூகத்தின் கலை, கலாச்சார, சமய வளர்ச்சிக்கும், தமிழ் தேசியத்திற்கும், தமிழ்க்கல்வி, ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும், தாயக உதவித்திட்டங்களுக்கும் அயராது உழைத்த திரு. சாண்டி சந்திரசேகரம் அவர்களுக்கு நரே-வொரென் தமிழ்ப் பாடசாலை சமூகத்தினால் சாதனைத் தமிழன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவ்விருதினை மாண்புமிகு ஹோல்ட் பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) அவர்களினால், சாண்டி சந்திரசேகரம் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
Parents Committee – Narre Warren Tamil School
No comments:
Post a Comment