ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது
நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ். விஜயம்
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தருக்கு சிலை
யாழ்.மாநகரசபையின் பவளவிழா
ஜனாதிபதி முன்னிலையில் பாடல் பாடிய கில்மிஷா
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
- நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி
யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் பயணமாக நேற்று (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
அந்நிலையில் நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார்.
யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன்
யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது
பிரபல பாடகர் பாலக்காடு ஸ்ரீராம்
யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் என்பது நிறைய நாள் ஆசை. தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது என இந்தியாவின் பிரபல பாடகரும், புல்லாங்குழல் இசை கலைஞருமான பாலக்காடு ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் சினிமாவில் பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளேன். யாழ்ப்பாணத்தில் எனக்கு இசைத்துறை சார்ந்த நண்பர்கள் உண்டு. அவர்களுடன் கச்சேரிகளில் பாடியுள்ளேன்.
எனக்கும் யாழ்ப்பாணம் வர வேண்டும் என நீண்ட நாள் ஆசை, தற்போது அது நிறைவேறியுள்ளது.
யாழ்ப்பாண உணவு பழக்க வழக்கங்கள், மக்கள் எல்லாம் பிடித்திருக்கிறது என தெரிவித்தார்.
(யாழ். விசேட நிருபர்) - நன்றி தினகரன்
நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ். விஜயம்
அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இன்று பங்கேற்பு
லோரன்ஸ் செல்வநாயகம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வடக்கிற்கு பயணமாகவுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ள வுள்ளதுடன் அந்த மாவட்டங்களின் கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும்
மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
அதேவேளை, இன்றைய தினம் வடக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர் விநியோகத் திட்டத்தையும் அவர்,ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளன.
பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடங்களின் விரிவுரையாளர்களுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வ மதத் தலைவர்கள் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நன்றி தினகரன்
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தருக்கு சிலை
அடிக்கல் நாட்டப்பட்டது
மட்டக்களப்பின் புதிய கல்லடிப் பாலத்துக்கு அருகில் ராமகிருஷ்ணமிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தருக்கு உருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) நாட்டப்பட்டது.
ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் நூற்றாண்டு நிறைவு விழா தொடரையிட்டு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், மட்டக்களப்பு ராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் ராமகிருஷ்ணமிஷன் உதவி பொது முகாமையாளர், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் கணேசராசா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
விபுலானந்த அடிகளாரினால் ஸ்ரீராமகிருஷ்ணமிஷனின் இலங்கை கிளை ஸ்தாபிக்கப்பட்டது. நன்றி தினகரன்
யாழ்.மாநகரசபையின் பவளவிழா
யாழ்.மாநகரசபையின் 75 ஆவது ஆண்டு பவளவிழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்.மாநகரசபை முன்றலில் யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 75 ஆண்டுகளில் யாழ்.மாநகரசபையில் பணியாற்றிய 28 கெளரவ முதல்வர்கள் 17ஆணையாளர்களில் தற்போது வாழ்ந்து வரும், 04 மாநகரசபை முதல்வர்கள், 06ஆணையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மாநகரசபை முதல்வர்களாக தெரிவான செல்லன் கந்தயன், ப.யோகேஸ்வரி பற்குணராஜா, இமானுவேல் ஆர்னல்ட் மற்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர்களுக்கும் ஆணையாளராக கடமை புரிந்த சி.வி.கே.சிவஞானம், வே.பொ.பாலசிங்கம், மற்றும் பொ. வாகீசன் ஆகியோர் நினைவு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை மூன்று ஆணையாளர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சமூகம் தரவில்லை எனத்தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை பிரதி ஆணையாளர்
வே.ஆயகுலன், செயலாளர் த.தயாளன், பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா உள்ளிட்ட மாநகரசபை பதவிநிலை அதிகாரிகள், சுகாதார , உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன்
ஜனாதிபதி முன்னிலையில் பாடல் பாடிய கில்மிஷா
நன்றி தினகரன்
No comments:
Post a Comment