.
ஐம்பது வருடத்திற்கு முன் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் ஒரு கண்ணேட்டம்.
தேவகி கருணாகரன்
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் திரைப்படம் தயாரிக்கும் முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. அங்கே தமிழ் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு அது ஒரு முக்கிய துறையாக வளராவிட்டாலும் அப்படி ஒரு துறையை உருவாக்க கனவோடு உழைத்தவர்களின் கதை ஒரு சோக வரலாறு.தமிழ் ஈழப் போருக்கு முந்திய காலகட்டத்தி;ல் திரைப்படத்துறை கலையில் ஆர்வம் கொண்ட சில கலைஞ்சர்கள் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்த போதும் அவை எதிர்பார்த்த பலனை தரவில்லை. அந்தப் படங்கள் சரியாகப் பேணப்படாததாலும் இனக்ககலவரங்களால், எரிவுண்டு போனதாலும், அழிந்துபோன நிலையால் அவற்றிற்கான சாட்சியங்களும் மறைந்து போய்விட்டன.
அப்படித் தப்பியிருக்கும் ஒரே ஒரு திரைப்படம், கட்டிடக் கலைஞர் வீ எஸ் துரைராஜாவினால் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்குத் திரைப்படமாகும். 1972ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம் இலங்கையின் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் விசேடம் என்ன வென்றால் படத்தின் பேச்சு முறை முழுக்க முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தின் கலைஞ்சர்கள், தொழில்நுற்ப விற்பனர்கள் அனைவரும் ஈழத்தை சேர்ந்தவர்கள. இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நுறு நாட்கள் ஓடி நுறாவது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
டபிள்யூ எஸ் மகேந்திரன் படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு காலம் சென்ற ஈழத்து ரெத்தினம் பாடல்களை எழுத, ஆர் முத்துசாமி இசை அமைத்துள்ளார்.
ஆதியில் இலங்கை முழுவதையும் ஈழம் என்று அழைக்கப்பட்டது. அப்போது தமிழ் ஈழம், சிங்கள ஈழம் என இரண்டு தேசங்கள் இருந்தன. இந்த இரண்டு தேசங்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்தன. சுிங்களம் சிங்கள ஈழத்திலும், தமிழ் தமிழிழத்திலும் பேசப்பட்டன. இவ்வுண்மையை குத்து விளக்கு படத்தின் ஆரம்ப பாடல் விளக்குகிறது
பாட்டு ‘ஈழத்திருநாடே என்னருமைத்தாயகமே
வாழும் இனங்களிங்கு பேசும் மொழியிரண்டு
செங்தமிழும், சிங்களமும் செல்வியுன் இருவிழயாம்’
இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிப்பரப்புவதை அடிக்கடி கேட்டோம் மகிழ்ந்தோம். ஆனால் 1980 இன் நடுப்பகுதியிலிருந்து, பாடலின் ஈழம் என்ற சொல்லின் நிமித்தம் இந்தப்பாடலுக்கு தடை போடப் பட்டது.
இப் பாடலை கேளுங்கள். நிச்சயமாக ரசிப்பீர்கள். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போலிருக்கும்.
இப்பாடலை பாடியவர் எம் ஏ குணசீலனாதன்
தயாரிப்பாளர், காலம் சென்ற வி எஸ் துரைராஜா இந்தக் கதையின் கருவை எழுதி கொடுக்க காலம் சென்ற கவிஞர், ஈழத்து ரத்தினம் படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார் படத்தின் கதையை அறிய ஆவலாகயிருப்பீர்கள் என நம்புகிறேன். சுருக்கமாக கூறுகிறேன்.
வேலுப்பிள்ளை வானம் பார்த்த பூமியை நம்பி வாழும் ஒரு ஈழத்து விவசாயி. வானம் கை விட்டதால் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாமல் கடன் படுகிறார். மனமுடைந்து பக்கவாதம் வந்து படுக்கையில் கிடக்கிறார். அவர் மனைவி இலட்சுமி அப்பம் சுட்டு விற்று கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றுகிறாள்.
கடன்பட்டு மூத்த பிள்ளை சோமுவை பட்டாதாரி ஆக்க வேண்டும் என்கிற கனவையும் நனவாக்குகிறாள் இலட்சுமி.
இவர்களின் மகள் மல்லிகா பக்கத்து வீட்டு பணக்காரப் பிள்ளை செல்வராசாவை காதலிக்கிறாள். அவர்கள் காதல் கிணத்தடி வேலியின் பொட்டுக்கூடாக வளர்கிறது.
பணத்தாசை கொண்ட செல்வராசாவின் தாய், நாகம்மா, இவர்களின் காதலை அறிந்ததும் சீதணமாக பத்தாயிரம் ருபாய் கொடுத்தால் அவர்கள் கல்யாணத்திற்கு சம்மதிப்பதாக கூறுகிறாள்.
தங்கை மல்லிகாவும் பட்டதாரியான அண்ணன் உழைத்து சீதனப் பணம் கொண்டு வருவான் என காத்திருக்கிறாள்.
சோமு வேலை கிடையாது கட்டிட வேலை நடக்கும் இடத்தில் கூலி வேலை செய்கிறான். அங்கு மோலதிகாரி, “பட்டம் பெற்றவர்கள் எல்லாம் அரசாங்க உத்தியோகம் வேணுமென தேடி அலையாமல் கமத் தொழிலையோ கைத்தொழிலையோ செய்ய வேணும.; இது தான் இனிமேல் நம்
நாட்டிற்கும் நன்மை தரும்,” என கூறுகிறார். அதில் இருந்த உண்மையை உணர்ந்த சோமு வன்னிக்குச் செல்கிறான். காட்டை அழித்து கழனியாக்குகிறான். நவீன விவசாயக் கருவிகளைக் கொண்டு கமம் செய்து நிறைய பணம் சம்பாதிக்கிறான்.
இது தெரியாது செல்வராசாவின் தாய், மகனுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடு செய்து, கல்யாணமும் நடக்கவிருக்கிறது. இவ் வேளையில் சோமுவுக்கு அரசாங்கத்திடமிருந்து வேலை அழைப்பு கடிதம் வருகிறது. கடிதத்தைக் கொண்டு தாய் சந்தோசத்துடன் வன்னிக்குப் போகிறாள். அங்கு மகன் செய்யும் புனித தொழிலைக் கண்டதும் கடிதத்தை கிழித்து எறிகிறாள். சோமுவும் தான் சீதணப் பணத்தை சேர்த்து விட்டதாகவும் தங்கையை விரும்பியவனுக்கே கட்டிக் கொடுத்திலாம் என தாயுடன் ஆவலோடு ஓடி வருகிறான்
இதற்கிடையில தன் காதலனுக்கு கல்யாணம் நடப்பதை அறிந்து மனமுடைந்த மல்லிகா, நஞ்சுண்டு உயிரை மாய்த்து கொள்கிறாள். வீட்டிற்கு வந்த சோமு, அவன் தங்கை மல்லிகா - அவர்கள் குடும்பத்தின் குத்து விளக்கு - அணைந்து போய் கிடப்பதைக் கண்டு கதறுகிறான். எனக்கு ஏன் இந்தப் பணம் என வீசி எறிகிறான்.
இந்தப் படம் ஈழத்தமிழ் விவசாயி படும் கஷ்டங்கள், பிள்ளைகள் படித்து பட்டாதாரியாக வேண்டும் என ஏங்கும் தாய் தந்தையர், சாதிக் கொடுமை, சீதணக் கொடுமைகளாகியவற்றைத் துல்லியமாக விளக்குகிறது.
இன்றைய சூழ்நிலையில், எங்கள் தாய் மண்ணில் வாழமுடியாது புலம் பெயர்ந்திருககிறேம். எமது இரண்டாவது முன்றாவது சந்ததியினர் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத அந்தக் காலத்து செல்லச் சந்நிதி கோயிலின் தேர்த்திருவிழாவை இந்தத் திரைப் படத்தில் பார்க்கலாம். நுரற்றுக் கணக்கான பக்தர்களின் அங்கப்பிரதட்சனை, செடில் குத்தி ஆடும் காவடி ஆட்டம், கற்பூரகச் சட்டி தலையில் வைத்து கரகாட்டம் ஆடும் பெண்கள,; இந்தக் கண்கொளா காட்சியின் போது ஆர் முத்துசாமி பாடும் பாடல் எம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.
பாட்டு - ஆதி சிவன் பெற்ற அன்புக்குமரன் பேர்நுரறு
மேற்படிப்புக்காகச் சென்ற அண்ணனின் கைச் செலவுக்கு தன் நகைகளை எல்லாம் கழட்டி கொடுக்கிறாள் மல்லிகா. உழைத்து சீதணப்பணத்தோடு வருவான் என அண்ணனை நம்பியிருக்கிறாள். இந்த கட்டத்தில் மால்லிகா எல்லா வீட்டு வேலைகளையும் செய்தபடி தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தையும் சொல்லி பாடுகிறாள். பாடல் மிகவும் உருக்கமாகவிருக்கிறது. பாட்டை பாடியவர் மீனா மகாதேவா.
பாட்டு – உன்னை நம்பி ஒரு தங்கை இருக்கும்
5. நேயர்களே ஐம்பது வருடங்கள் பின்னோக்கி போயிருப்பீர்கள் என நம்புகிறேன். எமது ஈழநாட்டிலே இப்படி ஒரு திரைப்படம் வெளி வந்தது என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். முக்கியமாக எமது இளம் சந்ததினருக்கு. இதை மனதில் கொண்டு 2001 ஆம் ஆண்டு குத்துவிளக்கு திரைப்படம் ஒலித்தட்டில், அதாவது டி.வி. டி யில் ஏற்றப்பட்டது. இந்த
டீ.வி. டி ஒரு காலதில் சிட்னியிலும் விற்பனைக்கு இருந்தது.
No comments:
Post a Comment