ஐனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் பிசு பிசுக்குமா!!!

 January 5, 2024

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதி நான்கு நாள் விஜயமாக வடக்கிற்கு வந்துள்ளார்,

யாழ் மாவட்டத்தில் தங்கியுள்ள ரணில் வடக்கின் ஏனைய மாவட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்.

கெலியில் வந்திறங்கியவுடன் கடற்தொழில் அமைச்சர் மாத்திரம் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்த அனுமதித்தனர் ரணிலின் பாதுகாப்பு பிரிவினர், வடக்கு ஆளுநர் வெற்றிலையை நீட்டிய போது பாதுகாப்பு தரப்பினர் பறுத்தெடுத்தனர் அதுமட்டுமல்லாது ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் திருமதி மகேஸ்வரனின் பிரதிநிதிகளும் ஐனாதிபதியை வரவேற்ற சென்றிருந்தனர் ஆனால் அவர்கள் கெலி கொப்ரருக்கு அருகில் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை,

2010 ம் ஆண்டு காலத்தில் ரணில் விக்கிரம சிங்கா எதிர்கட்சித் தலைவராக இருந்த போது மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சி நிலவியது

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ரணிலை துணிந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தது மட்டுமல்ல தீவு பகுதிக்கு செல்பவர்கள் திரும்பி வருவார்களா என்ற சந்தேகம் நிலவிய ராணுவ துணைக்குழுக்களின் கோட்டையாக இருந்த நெடுந்தீவுக்கு கூட அழைத்துச் சென்ற பெருமை யாழ் மாவட்ட. ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்திருமதி மகேஸ்வரனையே சாரும்,,

தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஏன் வடக்கில் 4 நாள் தங்கி இருக்கின்றார்??

2024 ம் ஆண்டு தேர்தல் ஆண்டு, எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்று தெரியாவிட்டாலும் இந்த ஆண்டு தேர்தல்கள் இடம் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே

வடக்கு மக்களின் முகத்தில் தான் தென்பட்டு மக்களிடம் வாக்கு கேட்பதற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க
யாழில் 20ஆயிரம் வாக்கு கூட எடுக்க முடியாத, மக்களால் கொலையாளி என கறை பூசப்பட்ட கடற்தொழில் அமைச்சருடன் உலா வந்து அவரின் ஏற்பாட்டில் கூட்டங்களை நடத்துகின்றார் இது எந்தளவுக்கு ரணிலின் நகர்விற்கு கைகொடுக்கும் என்பது சந்தேகம்,,

மஹிந்தவுக்கு ஏன் வடக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் மகிந்த ஒரு இனப்படுகொலையாளி என சித்தரிக்கப்படுகின்றார் அதனால் மகிந்தகுடும்பத்துக்கு வடக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்,

அதேபோல தானே இந்த கடற்தொழில் அமைச்சரும்,,
யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்களுன் தொடர்பு பட்டவர் கடற்தொழில் அமைச்சரே என்பது யாழ் மக்களின் எழுதப்படாத வாசகமாக உள்ளது,

யாழ்ப்பாண மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் தான் கடற்தொழில் அமைச்சரை வைத்திருக்கின்றார்கள்,

கடற்தொழில் அமைச்சருடன் திரிந்து ரணில் யாழ்ப்பாண மக்களின் வாக்கினை பெறுவது இலகுவான காரியமா???????   நன்றி ஈழநாடு 






No comments: