சிட்னியில் சிலப்பதிகாரவிழா – 27/05/2023

 

சிலப்பதிகாரவிழா மே மாதம் 27ம் திகதி சனிக்கிழமை மாலை 6:15 மணி அளவில் சிட்னி துர்க்காதேவி மண்டபத்தில் மங்களவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது. 
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களால் தமிழ்மொழியும்,  அவுஸ்திரேலியா தேசிய கீதமும் பாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேள நாதஸ்வர இசையுடன் இளங்கோ அடிகளுக்கு மாலை அணிவித்தல் இடம்பெற்றது.  இதில்  Strathfield  Mayor Karen Pensabene,    Ms Jodi Mckay (Former Leader of the Opposition in the New South Wales), பாலா பாலேந்திரா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்

மீண்டும் மண்டபத்தில் நிகழ்ச்சிகள் அவுஸ்திரேலியா தமிழ்க் கலைகள் சிட்னி குழுவின் பறையோடு ஆரம்பமானது. 

செயலாளர் திரு பஞ்சாட்சரம் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருமதி. பாலம் லட்சுமணன்அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது.  

சிலப்பதிகாரம்தமிழரின் தேசிய காப்பியம் என்ற தலைப்பில் தலைவர் திரு. இ. மகேந்திரன் அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது.  


 பல்வைத்தியர் கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்களின்  வாழ்த்துப்பா நிகழ்ச்சிக்கு பின்னர் திருமதி சிவரதி கேதீஸ்வரனின் மாணவர்கள் சிலப்பதிகார தமிழிசையை மிகவும் இனியே இசைத்தார்கள்.

தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய திருக்குறள் மனனப் போட்டிகள் மற்றும் ஸ்ரீ துர்க்காதேவி

தேவஸ்தான சைவ சமய அறிவுப் போட்டிகள் ஆகியவற்றின்  பரிசளிப்பு நிகழ்ச்சியும் இடப்பெற்றது.

செல்வன். கோகுலரமணன் முரளிதரனின் பேச்சைத் தொடர்ந்து 

திருக்குறள் மனனப் போட்டி மத்திய பிரிவில்  பங்குபற்றிய சிறந்த மாணவர்கள் விபுதா சசிகுமார், வினிஸ்கா உத்தரகுமார்  ஆகியோரின் பேச்சும் இடப்பெற்றது.

இறுதி நிகழ்ச்சியாக சுருதி சயந்தவி தயாசீலனின் நடனத்தோடு விழா இனிதே முடிவடைந்தது.  

  











































































































































































































No comments: