- டைட்டில் தொடர்பில் புத்தாண்டு அன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு
வாரிசு, லியோ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த விஜய், அடுத்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் மைக் மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, இவானா, அஜ்மல், மாளவிகா ஷர்மா, யோகி பாபு, பிரேம்ஜி எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
வாரிசு, லியோ திரைப்படத்தை போல தளபதி 68ம் படமும் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகிறது.
தற்போது கிடைத்த தகவலின் படி, தளபதி 68 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் வேகமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தான் விஜய் 68 படத்தின் டைட்டில் அப்டேட் விரைவில் வருகிறது என டுவிட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா. பாஸ் என்ற டைட்டில் செய்தி வைரலாக அந்த பெயர் கண்டிப்பாக கிடையாது என்று டுவிட் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர். மேலும், புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வலம் வருகிறது. அதாவது இந்த படத்தில் காமெடியனாக கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 16 வருடங்களுக்கு பிறகு கஞ்சா கருப்பு விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்பு விஜய்யுடன் சிவகாசி மற்றும் அழகிய தமிழ் மகன் படங்களில் நடித்திருந்தார்.
இப்படத்தில் Deaging தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும், பகவதி, யூத் படத்தில் இருந்த விஜய் தோற்றம் இப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment