அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் - தமிழ் இலக்கிய வகுப்புகள்

 தமிழ் இலக்கியங்களைக் கற்கவும்,


தமிழ் வாய்மொழித் தொடர்பாடலை வளர்க்கவும்,
தமிழ்ப் பேச்சுக் கலையில் மேம்படவும்,
பெற்றோர் - உங்கள் பிள்ளைகளை, இளையோர் - உங்களை, அன்போடு அழைக்கின்றோம்.

கம்பன் வகுப்பு மாணவர்தம் ஆற்றல்களை, கம்பன் விழாக்கள், பாராளுமன்றப் பேச்சுகள், வெல்லும் சொல், நாநலம்,
தமிழ்ப் பள்ளி மற்றும் ஊக்குவிப்புப் போட்டிகள், போன்ற பல நிகழ்வுகளில் கண்டு மகிழ்ந்து பலரும் பாராட்டியிருக்கின்றனர். தாங்களும் பயன்பெற வேண்டும் என்பது எம் அவா!

எம் இளைய தலைமுறையினர், தமிழ்ப் பாடசாலைகளில் கற்கும்போதும், தம் கற்கைகளை அங்கு நிறைவு செய்தபின்பும்,
தமிழ் இலக்கியங்களோடு, சக ஆர்வம்கொண்ட நண்பர்களோடு பயணிக்க, கம்பன் வகுப்புகள் நல்லதொரு தளம். வகுப்புகள் அனைத்தும் தற்போது Zoom வாயிலாக நடைபெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம். சிட்னியில், மீண்டும் நேரடியாக வகுப்புகள் ஆரம்பிக்கவிருக்கின்றன.
இணைந்து கொள்ளுங்கள்.

இவ் வேண்டுகோளை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து உதவுங்கள்
குறிப்பு: சிட்னி - மெல்பேர்ண் நேரப்படி, இணைக்கப்பட்டுள்ள மடலில் வகுப்புகளுக்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

No comments: