November 18, 2023
பொங்கல் போட்டிக்கு ஏற்கனவே தமிழ்த் திரைப்படங்கள் பல வரிசை கட்டிக் காத்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படமும் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கௌரவத் தோற்றத்தில் சுப்பர் ஸ்டார் நடித்திருக்கும் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சி.யின் அரண்மனை 4 மற்றும் தனுஷின் கெப்டன் மில்லர் ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய் சேதுபதி, பொலிவுட் கதாநாயகி கத்ரினா கைஃபுடன் இணைந்து நடித்திருக்கும் மெரி கிறிஸ்மஸும் களமிறங்குகிறது.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை, தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.
பதல்பூர் மற்றும் அந்தாதூன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment