ஆசியாக்கண்டம் பரந்தது விரிந்தது. ஆசியாக்கண்டத்தில் காணப்படும் கலாசாரத்தின் அடிநாதமாக மெய்யியல் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள். இந்த மெய்யியல் பல சோதனைகளுக்கும் வேத னைகளுக்கும் ஆளாகி இருப்பதை வரலாற்றால் அறிய முடிகிறது. சோதனைகளையும் வேதனைகளை யும் எதிர் கொண்டாலும் மெய்யியலை மட்டும் இழந்துவிட விரும்பாத நிலையில் சூழலுக்கு ஏற்ப ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தி அதனை வளர்ப்பதற்கும் அதனை வாழ்வுடன் இணைத்து நிற்பதற்கும் முயற்சி கள் நடைபெற்றதையும், அதற்கு தலைமை ஏற்பதற்கு தகுதியானவர் வந்த நிலையினையும் காண முடி கிறது.இந்த வகையில் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்-தமிழையும் சமய இலக்கியத்தையும் சேர்த் துக் கொண்டு வீறுபெற்று ஒரு தனித்துவமான கலாசாரம் எழுந்தது. அதனை யாவரும் போற்றினர்.கண் டவர் வியப்புற்றனர். அப்படி யாவரையும் வியக்கும் வண்ணம் செய்தது முகிழ்த்ததுதான்
ஆசியநாட்டில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். சமயம் , இலக்கியம்
தமிழ் இலக்கிய நூல்களும் சமய இலக்கிய நூல்களும் இந்தியாவின் பொக்கிஷங்கள் என்பது மிகவும் பெருமைதான். ஆனால் ஈழத்துத்தமிழர்கள் தமிழ் சமய இலக்கியங்களில் காட்டும் ஈடுபாடும் உறுதிப் பாடும் அங்கு காணப்படும் நிலை சற்று தளப்பமாய் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். அதற்கு அங்கு காணப்படும் சமூகநிலையும், அரசியல் நிலையும் காரணமாகக் கூட இருக்கலாம். என்றாலும் இந்தியாவின் அங்கீகாரம் குறிப்பாக தமிழகத்தின் அங்கீகாரம் பெரிய அங்கீகாரமாக அன்றும் தேவை ப்பட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்து எனலாம்.
சமணத்தாலோ , பெளத்தத்தாலோ , வை
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்,
சைவத்தைக் கடைப்பிடித்து தமிழ் சமய இலக்கியங்கியங்களை உயிரென்று எண்ணி வாழ்ந்தவர்கள் அன்னியச் சூறாவளியினால் அவதிக்கு ஆட்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கோவில்கள் தோறும் கந்தபுராணம் படிக்கப் பட்டது. கந்தனுக்குரிய விரதங்களை மக்கள் மிகவும் பக்குவமாக அனுட்டித்து வந்தார்கள். தமிழும் சமயமும் மலர்ந்தும் விரிந்தும் நல்லதொரு பண்பாடு ஒளிவிட்டு இருந்தது.ஆனால் அவையாவுமே கேள்விக்குறியாகியதால் மக்கள் திசையறியா கலமாக இருந்தார்கள்.
சமணத்தை நன்கு கற்று அதன் தலைமைப் பீடத்தில் இருந்தவர்தான் நாவுக்கரசர். அதே நாவுக்கரசர் தான் சைவத்தைக் காத்திட உழவாரப் படையினை கையில் ஏந்தி சமணத்தை எதிர்த்து சைவத்தின் காவலனாக வந்து நின்றார். இதன் காரணத்தால் திருநாவுக்கரசு நாயனாராக சைவத்தமிழ் உலகில் இன்று வரை போற்றுதலுக்கு உரியவராக நிற்கிறார்.அப்பர் பெருமான் என்று சைவர்கள் அவரை அழைப்பதில் அகநிறைவு எய்துகிறார்கள் எனலாம்.
அப்பரைப் போல ஒருவராக ஆறுமுக நாவலரும் அக்கால யாழ்ப்பாண நிலையில் சைவத்தைக் காத்திட வந்து நிற்கிறார். நாவர் ஆங்கிலத்தில் கற்றார். கிறீத்தவ சூழலில் அவர் கற்றல் நிகழ்ந்தது. கிறீத்தவத்தை நன்கு தெரிந்தவர் ஆகிறார். அதனால் கிறீத்தவ வேதாகம நூலான பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றலையும் பெற்று நிற்கிறார். முழுக்க முழுக்க கிறீத்தவ சூழலில் நின்ற ஆறுமுகநாவலர் மனம் முழுவதும் சைவமே நிறைந்து நின்றது. இதனால் சைவத்தை காத்திட சைவ தமிழ் இலக்கியங்கியங்களை காத்திட நாவலர் வீறுகொண்டு எழுகின்றார். அந்த எழுச்சி தந்த கலாசாரமே யாவராலும் " கந்தபுராண கலாசாரம் " என்று போற்றுதலுக்கு உரியதாக விளங்கிறது எனலாம்.
தமிழ் இலக்கியங்களை தமிழ் இலக்கணத்தை சைவ இலக்கி யங்களை ஆராத காதலுடன் ஐயமகற் றியே ஆறுமுக நாவலர் கற்றார். ஆறுமுகம் என்னும் பெயர்கொண்டவர் தமிழ்நாடு சென்று ஆற்றிய சொற்பெருக்கை கண்ணுற்ற திருவாவடுதுறை ஆதீனமே " நாவலர் " என்னும் பட்டத்தை அளித்து ஆறுமுகத்தை அங்கீகாரம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆறுமுகமாக சென்றவர் " ஆறுமுக நாவலர் " என்னும் கெளரவத்துடன் திரும்புகின்றார். தமிழகத்தின் அங்கீகாரத்துடன் அவரின் பணிகள் ஆரம்பிக்கப் படுவதும் மனங்கொள்ளத் தக்கதாகும். அங்கீகாரம் பெற்றாலும் யாழ்ப்பாணத்தில் அவரினால் மேற்கொள்ளப் பட்ட பணிகள் ஈழம் முழுவதற்குமே பெரும் பயனை வழங்கியது என்பதை மறுத்துவிட முடியாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலுள்ள ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளை நாவலர் காலம் என்று குறிப்பிடலாம். பொதுவாக இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டிலும் சிறப்பாக ஈழத்திலும் நிலவிய சூழ்நி லையே ஆறுமுக நாவலரைத் தோற்றுவித்தது எனலாம். பல இலட்சம் தமிழ்ச் சைவர்கள் ஆறுமுகநா வலரின் காலத்தில் வாழ்ந்தார்கள்.ஆனால் தமிழ்ச் சைவர்களில் ஒருவரே ஆறுமுகநாவலர் ஆகிவிட முடிந்தது. இங்குதான் நவலரின் பெருமை புலப்பட்டு நிற்கிறது எனலாம்.
பல்லவர் , பாண்டியர், சோழர்,
இந்தியாவின் செல்வாக்கு ஈழத்தில் காணப்பட்டாலும் ஈழத்தின் சமூகநிலை இந்தியா போன்று இல்லாத காரணத்தால் இங்கு உருவான பண்பாடும் வித்தியாசமானதாகவே அமையும் நிலை ஏற்பட்டது எனலாம். புராணங்களில் கந்தபுராணத்தைப் போற்றும் மனப்பாங்கு தமிழ்நட்டைவிட யாழ்ப்பாணத்தில் நிறை ந்தே இருந்தது எனலாம். கந்தபுராணத்தைச் சொந்த புராணமாக இங்குள்ள சைவர்கள் போற்றினார்கள். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தைப் படித்து அதன் விளக்கத்தை விபரமாக எடுத்துரைக்கும் ஒரு பணி தெய்வீகப் பணியாக யாழ்ப்பாண மக்களால் மேற்கொள்ளப் பட்டுவந்தது.
போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர்
தமிழ் படிக்க முடியாத நிலை. சைவத்தை கைக்கொள்ள முடியாத நிலை. திருமுறைகளை ஓத முடியாத நிலை. விரதங்களை அனுட்டிக்க முடியாத நிலை. சைவர்களாய் தமிழர்களாய் வாழுவதே மிகவும் கஷ்ட மாய் ஆகிவிட்ட நிலை. " வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க ஒரு குழந்தை புனிதவாய் மலர்ந்து அழுதது", "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என்று ஒரு குரல் எழுந்து நின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் அவ்வேளை ஒரு குரல் எழுந்தது. அந்தக்குரல்தான் ஆறுமுகநாவலர் குரலாகும்.
நாயன்மார்கள் ஊர்கள்தோறும் சென்று பக்திப் பரவசம் நல்கும் பாடல்களைப் பாடி மக்களிடம் சமய நல்லுணர்வையும் நல் வாழ்க்கை முறைகளையும் சேர்ப்பித்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பால் மக்களிடம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. புத்துணர்ச்சி உருவானது. பக்தியென்னும் இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. தமிழும் வளர்ந்தது. சமயமும் வளர்ந்தது. சமூகத்திலும் நல்லதொரு மாற்றமும் விளைந்தது. கலங்கிய சமூகம், தடுமாறிய சமூகம், நிதானம் அடைந்தது. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கையும் பிறந்தது. நற்றமிழை நாவாரப் பேச வேண்டும். நற்றமிழால் இறை வனை துதிக்க வேண்டும். நற்றமிழும் சமயமும் இரண்டு கண்கள் என்னும் உணர்வும் எல்லோர் மனதிலும் ஊற்றெடுக்க வைக்கப் பட்டது.
நாயன்மார்கள் காலம் பாடல்கள் கோலோச்சிய காலம். அதனால் எதைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு வழி பாடல் என்னும் ஊடகம்தான். ஆனால் நாவலர் காலம் அப்படியானது அன்று. அதனால் நாவலர் அவர்கள் தனது சமய தமிழ் சமூகப் பணிகளுக்கு உரைநடையினையே உறுதுணை ஆக்கினார். பேச்சு, எழுத்து, விளக்கம், யா
அன்று யாழ்ப்பாணம் இருந்த சூழலில் ஆறுமுகநாவலர் மட்டும் உருவாகி இருக்காவிட்டால் இன்று ஈழத்தில் சைவமே இருந்தி ருக்காது. தமிழும் அதுசார்ந்த பண்பாடும், தமிழ் சைவ இலக்கியங்களும் காணாமலேயே போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம்.
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
இந்தப்பாடலே இதற்குத் தக்க சான்றாகி நிற்கிறது அல்லவா !
இந்தியாவில் தோன்றிய முனிவர்கள் கண்ட பழைமையான கலாசாரம் பண்பாடு சில நெருக்கடிகளால் தெற்கு நோக்கி நகரத்தொடங்கியது. அக்கலாசாரம் சற்று தங்கி இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்த தென் றால் அது யாழ்ப்பாணம் என்பதுதான் பொருத்தமாகும். அதற்குக் காரணம் நாவலர் பெருமானால் உருவாக்கப்பட்ட கந்தபுராண கலாசாரம் என்றேதான் சொல்லலாம்.
" இந்தக் கந்தபுராணத்தை விதிப்படி மெய்யன்போடு நியமமாகக் கேட்பவர்கள் , நோய்நீக்கம், செ
நாட்டுக்கு வருகின்ற இடையூறுகளினின்றும் சைவத்தையுந் தமிழையும் பாதுகாத்திட உதவியது.பாது காத்தது. பாதுகாத்து வைக்கின்றது. கந்த புராணம் ஒரு கற்பதரு , அது வேண்டுவார் வேண்டுவதை எந்தக் காலத்திலும் ஈவதற்கு ஆயத்தமாயிருக்கிறது. விலங்கு நிலையிலிருக்கும் மனிதனை மனத னாக்கி மனிதர்களுக்கு மேலே தேவர்களுக்கும் அப்பாலே வழி நடப்பதற் கும் வழி செய்வது கந்த புரா ணம்.
இப்படிப்பட்ட கந்தபுராணம் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு சைவாலயத்திலும் மடாலயங்களிலும் வருடந்த்தோறும் விதிப்படி படித்துப் பொருள் சொல்லப் பட்டுவந்தது. வருடத்தில் மூன்று மாதங்கள் கந்தபுராண காலமாக இருக்கும்.ஆண்களும் பெண்களும் காப்புக்கட்டி விரதம் இருந்து கந்தபுராண த்தைக் கேட்பார்கள். ஊர்கள் தோறும் இருக்கும் கோவில்களில் எல்லாம் இதனை கண்டு கொள்ளக் கூடிய ஒரு நிலை காணப்பட்டது. சைவசமயத்தில் துறைபோனவர்கள், தமிழில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற வர்கள், சிவதீட்சை பெற்றவர்கள் , ஆசாரசீலர்கள், கந்
அன்னியரின் வருகையால் யாழ்ப்பாணத்தின் நிலையே தலைகீழானது. மக்களின் கோலங்கள் அலங்கோலங்கள் ஆகின. இந்த வேளை இறைவனின் அனுக்கிரகத்தால் ஆறுமுகநாவலர் ஆறுதலாய் தேறுதலாய் அங்கு வந்து நின்றார். ஏற்கனவே கந்தபுராணம் என்பது பரம்பரையில் ஊறிய காரணத்தால் அந்தப் பரம்பரையில் வந்துநின்ற நாவலரின் இரத்தத்திலும் ஊறியே காணப் பட்டது. கந்தபுராணம் யாழ்ப்பாணத்தவர்களை மீண்டும் காப்பாற்றும் வல்லமை மிக்கது என்று ஆறுமுகநாவலர் எண்ணினார். ஆகவே சொந்தப் புராணமாக கந்தபுராணத்தையே நாவலர் பெருமான் துணையாக்கி அதன் வழியில் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டைக் காத்து உயிர்ப்புறச் செய்யும் பணியில் உழைக்கத் தொடங்கினார். அவரின் உழைப்பினால் யாழ்ப்பாணத்தின் பண்பாடு காப்பாற்றப் பட்டது. அந்தப் பண்பாட்டினைக் காத்திட அவர்கையாண்ட வழிமுறைகளினால் முகிழ்த்து வந்ததுதான்.
" கந்தபுராண கலாசாரம் " ஆகும்.
" இந்தியாவிலே சைவ சமயிகளுள்ளும் சைவசமயத்தில் உடபற்றில்லாத வர்கள் பலரேயாக வும்,இவ்வியாழ்ப்பாணத்திலே கிறிஸ்து மதத்திற் புகுந்தவருள்ளும் சைவ சமயத்தில் உட்பற்றற்றவர் அரியர் ஆதலாகிய இத்துணை விசேடத்துக்குக் காரணந்தான் என்னை எனிற் கூறுவதும் :
" எத்துணைக் காலந் திருப்பித் திருப்பிப் படிக்கினும் கேட்கினும் எட்டுணையுந் தெவிட்டாது தித்தி த்தமுதூறும் அத்தியற்புத அதிமதுரத் திவ்விய வாக்கியம் கந்தபுராணத்திலுள்ள பதியிலக்கணத் திருவிருத்தங்களை கேட்டல் சிந்தித்தல்களினால் இவர்கள் உள்ளத்து ஊற்றெடுத்த மெய்யுணர் வேயாம் ,
" இந்தியாவிலே சிவபுராணப் பிரசங்கம் செய்யும் கோயில்கள் மிக அரியன; இத் தேசத்திலே அது செய்யப்படாக் ( யாழ்ப்பாணத்தில் ) கோயில் இல்லை. இந்தியாவிலே வித்துவான்கள் சைவ சமய குருமார் முதலியோர்களுள்ளும் கந்தபுரா
பெரியபுராணத்தைக் கோவில்கள் தோறும் சென்று பிரசங்கம் செய்தவர் நாவலர் பெருமான் அவர்கள். பெரியபுராணத்தை யாவரும் படிக்க வேண்டும் என்னும் பேரவாவினால் அதனை வசனநடையில் ஆக்கியும் அளித்திருக்கிறார்.
ஆனால் அவர் கையிலெடுத்தது கந்தபுராணத்தையே ஆகும். அதற்கு என்ன காரணம் என்பதும் ஆராயப்படவேண்டியதே. தேவர்களை
அசுரர்கள் துன்புறுத்தி பல தொல்லைகளைக் கொ
கந்தபுராண கலாசாரம் என்பது ஆறுமுகநவலருடன் நின்றுவிடவில்லை. அவரின் மரபைக் கைக்கொள் ளும் பாரிய பரம்பரையினையே உருவாக்கி விட்டது எனலாம். ஆறுமுக நாவலரின் பணிகள் பன்முகப் பட்டன. பழைய நூல்களைப் பதிப்பித்தமை. காலத்துக்கு ஏற்ப தமிழ் இலக்கியங்களை குறிப் பாக சைவ இலக்கியங்களை வசனநடையில் ஆக்கியமை.இலக்கணத்தை இக்காலத்தவர்களும் இலகுவாக விளங் கும் வண்ணம் நூல்களை ஆக்கியமை.பாடசாலைகள் நிறுவி சைவத்தையும் தமிழ் பண் பாட்டையும் வருங்கால சந்ததியினருக்கு பதியச் செய்தமை. தமிழுக்கென்று நல்லதோர் வசன நடை யினை அறி முகம் செய்து வசனநடை கைவந்த வல்லாளர் ஆகியமை.பாடத்திட்டங்களை ஆக்கி இளையோர் நன்னெறிவழியில் வளர்வதற்கு வழி சமைத்தமை. அச்சுக்கூடங்களை நிறுவி எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் நூல்களை அச்சிட்டு வெளியிட்டு சாதனை காட்டியமை.
அஞ்சாமை, தூங்காமை, களங்கங்
No comments:
Post a Comment