.
தரிசனம் அமைப்பு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி 2023 ஆம் ஆண்டு இளையநிலா பொழிகிறதே என்ற நிகழ்ச்சியை நடாத்தி இருந்தது. மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றது. போமன் ஹோல் பிளாக்டவுனில் இந்த நிகழ்வு இரவு நிகழ்வாக இடம் பெற்றிருந்தது.
இலங்கையில் கல்விக்காக உதவி நாடும் பாடசாலைகளின் மேம்பாட்டிற்கான நிகழ்வு என்று இந்த நிகழ்வை குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக மலையக மாணவர்களின் தேவைகளை அறிந்து உதவி வரும் இந்த அமைப்பு தரிசனம் நிகழ்வை வருடம் தோறும் நடத்தி வருகின்றார்கள். குறிப்பாக கூற வேண்டுமானால் இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து இந்த நிகழ்வை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இசை துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இதிலே ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் முழுமூச்சாக இந்த நிகழ்ச்சிக்காக மற்ற இளைஞர்களையும் ஒன்றிணைத்து தரிசனத்தினுடைய நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றார்.
அமிர்தலிங்கம் , சாரதா அமிர்தலிங்கம் நேரடியாக இலங்கை சென்று மாணவர்களுக்கான உதவிகள் புரியும் காணொளியும், பல பாடசாலைகள் பயன் பெற்ற நிகழ்வும் காண்பிக்கப்பட்ட்து.
மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது பல உள்ளூர் கவிஞர்கள் இந்த நிகழ்ச்சியிலே பாடினார்கள். அதுமட்டுமல்ல இசை குழுவினரும் உள்ளூர் இசை கலைஞர்களே இந்த இசை குழு இனிமையான இசையை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இருந்து வருகை தர இருந்த இரண்டு பாடகர்கள் சில காரணங்களினால் வர முடியாமல் போயிருந்தாலும் கூட இசை நிகழ்ச்சியும் கர்நாடக இசை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல சிறுவர் சிறுமியர் இந்த கர்நாடக இசைக்க கச்சேரியில் பங்குபற்றினார்கள்.
No comments:
Post a Comment