வானொலி மாமா நா.மகேசன் அவர்களின் நினைவரங்கம் Sep 03 2023

 .

காலம் சென்ற வானொலி மாமா நா.மகேசன் அவர்களின் நினைவரங்கம் செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி 2023 ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வென்வேத் வில்லில் அமைந்திருக்கும் community centre மண்டபத்திலே மாலை 4 மணிக்கு இடம் பெற்றது. இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சி மூலம் தனது சமூகப் பணியை ஆரம்பித்து வானொலி மாமா என்று அழைக்கப்பட்ட நா.மகேசன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் பல ஊடகங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் தனது இறுதிக் காலம் வரை சேவையாற்றியவர். சிறுவர்களுக்கான கதைகள் கவிதைகள் நாடகங்கள் உரைநடை விளக்கங்கள் போன்றவற்றை எழுதி நெறியாள்கை செய்தவர் சமய முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தி நடைமுறை விளக்கத்தையும் நூலாக தந்தவர். இலக்கியப் பணி கல்விப் பணி சமூகப்பணி வானொலி இப்படி பல்வகை பணிகளை இறுதி வரை ஆற்றி மறைந்த நா.மகேசன் அவர்களுக்கான இந்த நினைவரங்கு இடம்பெற்றது.


பல சமூக பெரியவர்கள் கலந்து கொண்டு நா.மகேசன் அவர்களுடைய நினைவுகள் பற்றியும், அவரோடு சேர்ந்து பயணித்த விடயங்கள் பற்றியும், அவருடைய சமூகப் பணிகளில் சேர்ந்து பயணித்த விதம் பற்றியும் தங்களுடைய கருத்துக்களை வழங்கியிருந்தார்கள். அன்பாகவும் இனிமையாகவும் பண்பாகவும் பழகிய திரு நா மகேசன் அவர்களுடைய இந்த நிகழ்வை கம்பன் கழக பேச்சாளரும் எழுத்தாளரும் தமிழ் பாடசாலை அதிபருமான திரு திருநந்தகுமார் அவர்களும், வானொலியாளர் கவிஞர், எழுத்தாளர் சௌந்தரி கணேசன் அவர்களும் சமூகப் பணிகள் ஆற்றிக் கொண்டிருக்கும் திரு சிவகுமார் அவர்களும் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தார்கள்.





இந்த நிகழ்விற்கு வானொலி மாமாவின் குடும்ப உறுப்பினர்கள் முன்வரிசையிலே அமர்ந்திருக்க திரு திருநந்தகுமார் அவர்கள் தலைமையிலே நிகழ்வு இடம்பெற்றது. மாமாவின் மகள் உமா கேதீசன் அவர்களும் அவருடைய கணவர் கேதீசன் அவர்களும் குத்து விளக்கை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள.  நிர்மல் ஈஸ்வரர் குழுக்கள் அவர்களின் ஆரம்ப உரையோடு நிகழ்வு ஆரம்பமானது தொடர்ந்து டாக்டர் மனமோகன் அறிவகம் சார்பாகவும், மவுண்ட்றுயிட் தமிழ் பாடசாலை மாணவன் வானொலி மாமாவின் கவிதையையும், சைவ மன்றம் சார்பாக நடராஜா சிதம்பரநாதன் அவர்களும், ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவியின் கவிதையும், கலாநிதி காந்தராஜா அவர்களது உரையும் அதைத் தொடர்ந்து கோம்புஸ் பாடசாலை மாணவ மாணவிகளின் கவிதை, கம்பன் கழக நிறுவனர் ஜெயராம் ஜெகதீசன் அவர்களுடைய உரை, ஓபன் தமிழாலய பாடசாலை மாணவி விபூதா சசி அவர்களுடைய கவிதை, சிட்னி முருகன் ஆலயத்திலிருந்து தணிகை குமரன், வென்ற்வேத்வில் பாடசாலை மாணவர்களுடைய கவிதை, தமிழ் முரசு அவுஸ்திரேலியா சார்பாக செ .பாஸ்கரன் அவர்களின் உரை, தமிழ் முழக்கம் சார்பாக விக்டர் ராஜகுலேந்திரன்,




அமைப்பாளர்களில் ஒருவரான சௌந்தரி கணேசன் அவர்களின் கவிதை, டாக்டர் கேதீஸ் அவர்களுடைய உரை, திரு அருச்சுனமணி அவர்களின் உரை, பத்மினி சௌதிராஜா அவர்களுடைய உரை, சைவ மன்ற முன்னை நாள் தலைவர் பவராஜா அவர்களுடைய உரை, அவுஸ்திரேலியதமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபன நிறுவனர்களில் ஒருவரான ஈசன் கேதீசன், கார்த்திகா கணேசன் அவர்கள், இலக்கிய பேச்சாளர் மாமாவின் நண்பர் திரு தனபாலசிங்கம் அவர்களின் உரை , சிட்னி சைவ மன்றத்தில் இருந்து ஜனனி ஜெகன்மோகன் ஆகியோரின் உரையும் இவற்றைத் தொடர்ந்து திரு திருனந்தகுமார் நா மகேசன் பற்றிய தனது பார்வைகளை குறிப்பிட்டு இருந்தார் அதை தொடர்ந்து நா மகேசன் அவர்களின் புதல்வன் கேதீஸ் அவர்கள் நன்றி உரையை வழங்கியிருந்தார். சிட்னியில் வாழ்வாங்கு வாழ்ந்த திரு மகேசன் மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட வானொலி மாமாவினுடைய அஞ்சலி சிறப்பாக இனிதே நடைபெற்றது.



































































No comments: