அன்பாலயத்தின் இளம் தென்றல் 2023 ஒரு பார்வை - செ பாஸ்கரன்

.

 

ஆஸ்திரேலியாவில் இலங்கையில் இருக்கின்ற ஈழத் தமிழர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அன்பாலயம் அமைப்பானது "இளம் தென்றல் 2023" என்ற நிகழ்ச்சியை சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி 2023 அன்று சிட் னியில்  அமைந்திருக்கின்ற பகாய் சென்ரர் மண்டபத்தில் வருடாந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.


 மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. அதேபோல் மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது நிகழ்வு ஆரம்பிக்கப்படுகின்ற போது மண்டபத்தினுள் மக்கள் குறைவாக இருந்தாலும் கூட சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என்ற அவர்களது குறிக்கோள் சரியாக 6 மணிக்கு அந்த நிகழ்வை ஆரம்பித்தார்கள். சற்று நேரம் செல்லச் செல்ல மண்டபம் நிறைவாக காணப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற இளைஞர்கள், யுவதிகளை ஊக்குவிப்பதற்காகவும், நிதி சேகரிப்பதற்காகவும் என இரு  நோக்கங்களை கொண்டதாக வருடம் தோறும் அமைகின்ற ஒரு நிகழ்வாக்கும். இது ஆஸ்திரேலியாவில் சிட் னியில் இருக்கின்ற மக்களுக்கு நன்றாகவே தெரியும். 

அன்பாலயத்தின் பொறுப்பாளர் திரு ரமேஷ் நடராஜாவும் அவரோடு இணைத்து பயணிக்கும் குழுவினரும் பல வருடங்களாக இதற்காக உழைத்து வருகின்றார்கள்.


பாடல் நிகழ்வு சக்தி இசைக் குழுவின் இசையிலே ஆரம்பமானது. சக்தி இசைக் குழு வருடம் தோறும் அன்பாலயத்திற்காக இசை அமைத்து சிட் னியில்  இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகளை  பாடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதடற்காக,  உள்ளூர் கலைஞர்களை  ஊக்குவிப்பதற்காக,  இசைக்கருவிகளை மீட்டுவதற்காக, சந்தர்ப்பங்களை வழங்கி இந்த இசையை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோல் உள்ளூர் நடன ஆசிரியர்களுடைய நடன நிகழ்வுகளும் இடையிடையே நிகழ்த்தப்படும். அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த நிகழ்வு.  இந்தியாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ  பாடகர்களை அல்லது மிகப்பெரிய இசை குழுக்களை அழைத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்துவதில்லை. அதில் செலவு செய்யப்படும் பணத்தை சேகரிக்கவும்,  உள்ளூர் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கவும் முடியாது என்ற காரணத்தினால் அதை இவர்கள் தவித்துக் கொள்ளுங்கள்.


 நிகழ்வு மிக சிறப்பாக ஆரம்பித்தது முதலிலே தமிழ் வாழ்த்து , ஆஸ்திரேலியா தேசிய கீதம் போன்றவைகள் இசைக்கப்பட்டு அதைத் தொடர்ந்து சக்தி இசைக் குழுவின் உடைய இசையிலே பாடகர் வினோதன் எட்டுத்திக்கும் என்ற பாடலோடு மேடைக்கு வந்தார். அதனை தொடர்ந்து நித்தியா நிமலன் கொஞ்சும் மைனாக்களே என்ற பாடலை மிக அருமையாக கொடுத்திருந்தார். இப்படி தொடர்ந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. ரோஹித் பரமேஸ்வரன் மின்னலே நீ வந்தது என்னடி என்ற பாடல். அதைத் தொடர்ந்து அண்மையிலே மறைந்த  இந்திய திரை உலக பாடகி இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்களுக்கு ஒரு கௌரவ நிகழ்வாக வாணி ஜெயராமினுடைய பாடலை கேஷிகா  அமிர்தலிங்கம் யாரது  சொல்லாமல் நெஞ்சள்ளி போனது என்ற பாடலோடு அந்த அஞ்சலி நிகழ்வு வழங்கப்பட்டது.




 வாத்தியங்கள் இசைத்துக் கொண்டிருக்கின்ற இளைஞர்களை அறிமுகப்படுத்தினார்கள் ஆரம் சஞ்சீவன் கீபோர்ட் அபிதேவ்  குகஸ்ரீ கிட்டார்,  வெங்கடேஷ் ஸ்ரீதரன் புல்லாங்குழல், அகல்யா பாவலன் வயலின் இப்படி சிலரை அறிமுகப்படுத்தி மீண்டும் பாடல்கள் ஆரம்பித்த போது  சௌமியா தன்னுடைய அருமையான குரலிலே பல மேடைகளை கண்டவர் மக்களை இசையிலே கட்டி போட கூடியவர் அவர் பூவே வாய் பேசும் போது என்ற பாடலோடு மிக அருமையாக பாடி இருந்தார் இவரோடு சுதாகர் சிவபாலன் இணைந்து கொண்டார். 


அது மட்டும் அல்லாமல்  ஒரு விசேட விடயமாக இலங்கையிலே இருக்கின்ற சாரங்கா இசைக் குழுவிலே பங்கு பெற்றுக் கொண்ட பானு தேவன் வரதராஜன் ஒக்ரோபட் இசை கலைஞராக இங்கே பங்குபற்றி  இருந்தார். சிட்னிக்கு வருகை தந்திருந்த அவரை அன்பாலயம் இந்த சந்தர்ப்பத்திலே அவரையும் பயன்படுத்திக் கொண்டது. என்ன அற்புதமான ஒரு இசைக் கலைஞராக அவர் இருக்கின்றார். அத்தனை வாத்தியங்களையும் வாசித்துக் காண்பித்தார் சபையினர் ரசிக்கும் படியாக அந்த நிகழ்வை அவர் செய்து காட்டியது ஒரு இளம் இலங்கை கலைஞர் இந்த இசை கலைஞர்களோடு இணைந்து இந்த இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்தது எல்லோராலும் வரவேற்கப்பட்டிருந்தது. நிச்சயமாக பானு தேவனுக்கு நன்றி பாராட்ட வேண்டும்.


 இதனை தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது  சிட்னியிலே அல்லது ஆஸ்திரேலியாவில் தங்களுடைய திறமைகளை வெளிகாட்டி ஆஸ்திரேலியா அரசிடம் பாராட்டுக்கள் அல்லது பரிசில்கள் பெற்ற இளைஞர் யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வுதான் இந்த நிகழ்வு அந்த வகையிலே பலர் கௌரவிக்கப்பட்டார்கள் இந்த கௌரவிப்பை விஜி அக்கவுண்டிங் மஹிந்தன் அவர்கள்  அவர்களை அழைத்து அவருடைய கைகளினால் அந்த விருதுகள் வழங்கப்பட்டது 


 அதனை தொடர்ந்து சந்தான பகிரதன் காதல் கொஞ்சம் என்ற பாடலை மிக அற்புதமாக பாடியிருந்தார் அரண்மொழி அம்மாடி அம்மாடி என்ற பாடலை பாடி சபையோரின் பலத்த கரகோஷங்களை பெற்றுக் கொண்டார்.  சஹானா அருணகிரி உனக்குள் நானே என்ற பாடலையும் திசா உன்னாலே எந்நாளும் என்ற பாடலையும் பாடி அசத்தினார்கள். அபிஷாயினி பத்மஸ்ரீ கிள்ளாதே கொல்லாதே என்ற பாடலை மிக அருமையாக பாடினார் இவரோடு பின்னணியாக நயனி குரல் கொடுத்திருந்தார் சபையினரின் கரகோஷம் அவர்களை உற்சாகப்படுத்தியது. 


 தொடர்ந்து இசைக் கலைஞர்கள் சிட்னி மேடைகளிலே அதிகமான மேடைகளிலே நாம் காணுகின்ற இசைக் கலைஞரான பிரணவன் ஜெயராசா ஒக்டோபாட்  கலைஞராக  இசைத்துக்கொண்டிருந்தார் அவரோடு பானு தேவன் இன்னும் ஒரு  ஒக்டோபாட் கருவியை இசைத்துக்கொண்டிருந்தார்.


 இதனை தொடர்ந்து கேசிகா  அமிர்தலிங்கமும் ஜனகன் இணைந்து என்னை கொஞ்சம் காற்றில் என்ற பாடலை மிக அருமையாக தந்தார்கள்.  அகல்யா  வயலின் இசையை மிக அற்புதமாக இசைக் குழுவில் மீட்டிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல்  பாடலையும் அவர் பாடியிருந்தார் அகல்யாவோடு  இணைந்து ரோகித் பரமேஸ்வரன் பெண் மானே சங்கீதம் பாடவா என்ற பாடலை பாடி சபையினரின்  பலத்த கரகோஷத்தை பெற்றுக் கொண்டார்கள்.  அதனை தொடர்ந்து பல புதிய பாடகர்கள் அறிமுகப் பாடல்களாக வந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அன்பாலயத்தின் மேடைக்கு புதியவர்களாக இருந்தார்கள் அஸ்விதா செந்தில்குமரன் அடி ஆத்தே இது என்ன என்ற வாத்தி  திரைப்படத்தில் இடம் பெற்ற புதிய பாடலை மிக அற்புதமாக பாடி இருந்தார். 



 சிறப்பு விருது வழங்கப்பட்ட போது  டாக்டர் அனுஷ் இளம் சாதனையாளர் என்ற விருதை பெற்றுக் கொண்டார் அதனை தொடர்ந்து இடைவேளை கொடுக்கப்பட்டது. எட்டு முப்பது மணி அளவில் இந்த இடைவுகளை வழங்கப்பட்டது. அதுவரை நிகழ்வை எல்லோருமே ரசித்துக்கொண்டிருந்தார்கள் ஒருவருமே எழுந்து வெளியே செல்லாமல் இருந்தது. சபையை இசைக் குழுவும் இசை கலைஞர்களும் எப்படி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்று கூறத்தான் வேண்டும்.  இந்த இசை நிகழ்விலே இடையிடையே தனிநபர் நடிப்பாக அல்லது சில நகைச்சுவை கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தார் அன்றைய நிகழ்ச்சியிலே அறிவிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த சஞ்சீவன் அவர்கள் சஞ்சீவன் பல மேடைகளிலே இலக்கியங்கள் பேசி பார்த்திருக்கின்றோம் ஆனால் முதல் முதலாக எம்சியாக பார்த்ததும் தனிநபர் நடிப்பாக அல்லது ஸ்டாண்டிங் காமெடியாக அவர் மக்களை கவர்ந்து கொண்டிருந்ததும் நான் முதல் தடவையாக பார்த்து இருந்தேன்.


 அதனை தொடர்ந்து உணவுகள் விற்பனையாகிக் கொண்டிருந்தது சுவையான உணவுகளை எல்லாம் மக்கள் சுவைத்துவிட்டு மீண்டும் மண்டபத்திலே வந்த போது நடன நிகழ்வு இடம் பெற்றது. இந்த  நடன நிகழ்வுகளை ஜசோதர பாரதி சிங்கராஜாவின் உடைய மாணவிகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் நடனங்கள் அங்கே கொடுக்கப்பட்டது ரசிக்க கூடியதாக இருந்தது.  இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள் அதனை தொடர்ந்து அன்பாலயம் செய்கின்ற பணி பற்றிய பற்றிய வீடியோ காண்பிக்கப்பட்டது அவர்கள் என்னென்ன விடயங்கள் எங்கெங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றிய ஒரு காணொளியாக அது இருந்தது 



அதனை தொடர்ந்து நடன நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது பொன்னி நதி என்ற அந்த பாடல் பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல்  மிக அருமையாக நடனம் புரிந்தார்கள் அதனுடைய உடைகள் அந்த நடன அசைவுகள் எல்லாம் மிக அருமையாக இருந்தது. நடன  நிகழ்வைத் தொடர்ந்து அபிநயனி  சுதாகர் சிவபாலன் ஆகியோர் இணைந்து உனக்காக வாழ நினைக்கிறேன் என்ற பாடலை மிக அருமையாக தந்தார்கள் ரசிக்கக் கூடியதாக இருந்தது. ரோகித் காதலின் தீபம் ஒன்று என்ற பாடலை பாடிய போது உண்மையிலேயே இந்திய பின்னணிப் பாடகர்கள் பாடுவது போன்று இருந்தது என்று தான் கூற வேண்டும்.  அபிஷாயினி சுதாகர் இணைந்து மரங்கொத்தியே என்ற பாடலை பாடி அசத்தி விட்டார்கள்.  அதேபோல் கேஷிகா விமலன் அவர்களோடு பின்னணி பாடகிகள் பலர் இணைந்து றண்டக்க  ண்டக்க  பாடல் சபையை அதிர வைத்து  விட்டது எல்லோருமே மிகப்பெரிய கரகோஷத்தை வழங்கினார்கள்.  பவதன் கிருஷ்ணகுமார் உடைய பாடல் தாய்க்கிழவி அனுருத்தினுடைய  இசையிலே வந்த அந்த பாடல் முதலிலேயே இது எப்படி இருக்க போகின்றது என்று ஒரு கலக்கம் இருந்தாலும் பின் பவதன் கிருஷ்ணகுமார் மற்றும் இரண்டு பாடகர்கள் இணைந்து கொண்டு அந்த தாய்க்கிழவி பாடலுக்கு உயிரூட்டி சபையை கலங்க வைத்தார்கள்.


 இந்த நிகழ்வு அன்பாலயத்தின்  இளம் தென்றல் 2023 என்ற நிகழ்வு மிக நீண்ட நேரம் என்று தான் கூற வேண்டும் அதற்கு அறிவிப்பாளராக பணியாற்றியவர் நாளை விடுமுறை நாள் நாளை மறுநாளும் விடுமுறை நாள் ஏனென்றால் சிட்னியிலே  Long Weekend  என்று கூறப்படுகின்ற நீண்ட விடுமுறை நாளாக இருந்த காரணத்தினால் இந்த நிகழ்வும் சற்று நீண்டு  கொண்டு தான் போயிருந்தது என்று கூற வேண்டும் 

 சக்தி இசைக்குழு இந்த நிகழ்வுக்கு மிக அருமையாக இசையமைத்து உள்ளூர் கலைஞர்களை வைத்து அருமையாக இசையை தந்தார்கள் என்று தான் கூற வேண்டும்.  அது மட்டுமல்லாமல் சக்தி இசை குழுவின் பொறுப்பாளராக இருக்கின்ற டேவிட் செல்வன் அவர்கள் பாடிய தென் பாண்டி சீமையிலே என்ற இளையராஜா பாடல் மெய் சிலிர்க்க வைத்தது.  




எல்லா விடயங்களிலும்,  நேர கட்டுப்பாடு இவை எல்லாம் ஒழுங்காக இருந்தாலும் எனக்கு ஒரு விடயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்ற அவாவும் இருக்கின்றது. இது பற்றி பல அமைப்புக்களிடம் கூறியும் இருக்கின்றேன். இவர்களுக்கும் சொல்லுகின்றேன் நீங்கள் அங்கே துன்பப்படுகின்ற மக்களுக்கு படிப்பதற்கு கஷ்டப்படுகின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு இப்படி எல்லா வகையிலும் உதவி புரிகின்றீர்கள் இது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒரு பெரிய விடயம் அதற்காக உங்களை பாராட்டுகின்றேன். அதேபோல வலது கை கொடுப்பதை இடது கை அறியாத கர்ம  வீரன் என்று கர்ணனைப் பற்றி கூறியிருப்பார்கள் அவன் கொடை வள்ளலாக இருந்த போதும் கூட அவன் கொடுக்கின்ற கொடையைப் பற்றி மற்றவர்களுக்கு கூறுவதோ அல்லது பேசித் திரிவது கிடையாது என்பது தான் அதனுடைய பொருள்.  இங்கே அந்த மக்களுக்காக நிதி சேகரிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்கின்ற விடயங்களை பற்றி பேசுங்கள் அல்லது எடுத்துக்காட்டுங்கள் ஆனால் தனி நபர்களுடைய காணொளிகளை போட்டு  அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு இந்த அமைப்புகள் எப்படி எல்லாம் எனக்கு உதவி செய்திருக்கின்றது என்பது போன்ற விடயங்களை தயவு செய்து காண்பிக்காதீர்கள் பிஞ்சு உள்ளங்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என்று பலரையும் இந்த காணொளி மூலம் உலகெங்கும் காட்டுகின்றீர்கள்.  எங்களுடைய மக்கள் எங்களுடைய தமிழ் இனம் கையேந்தி வாழ்ந்த இனம் அல்ல தலை நிமிர்ந்து வாழ்ந்த இனம் ஏதோ சாபக்கேட்டினால் சிறிது காலமாக இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்று தான் கூற வேண்டும். அது மட்டும் அல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு உதவி  செய்கின்றோம் ஆனால் அதை தயவு செய்து தனி நபர்களை காட்டுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ஒரு பாடசாலையாக அல்லது ஒரு அமைப்பாக வேண்டுமானால் காட்டுவது பரவாயில்லை என்று எண்ணலாம் ஆனால் தனி நபர்கள் பிச்சை எடுப்பது போன்ற ஒரு காணொளியை காட்டுவது என்னுடைய மனதை புண்படுத்துகின்றது அவர்களும் ஒருநாள் நல்ல நிலைக்கு வருவார்கள் அப்போது இது அவர்களுடைய மனதிலே ஒரு காயம் போல் இருக்கும். தயவுசெய்து உங்களுக்கும் நான் இதை அறிவுறுத்துகின்றேன் நீங்கள் செய்கின்ற கொடை மிகப் பெரியது ஆனால் அந்த தனி நபர்கள் உடைய காணொளிகளை தயவு செய்து எதிர்காலத்திலே காட்டாதீர்கள் என்ற அன்பான கோரிக்கையையும் வைத்துக் கொள்கின்றேன்.









 































































1 comment:

Anonymous said...

மிகவும் அருமையான ஓர் பதிவு
நிகழ்ச்சியை பற்றி உங்கள் விரிவான பதிவிற்கும் புகைப்படங்கள் எடுத்து உதவியமைக்கும் மனமார்ந்த நன்றிகள்

அந்த வீடியோ பதிவு உங்களையும் உங்களை போல் வேறு யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். வருங்காலங்களில் தவிர்த்து விடுகிறோம்.

ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி

அன்பாலய நிர்வாகக் குழு