கு.ப.ராவின் ‘விடியுமா?’ (கன்பரா யோகன்)கு..ரா என்று அறியப்பட்ட கு. .ராஜகோபாலன் அவர்கள் எழுதிய சிறுகதையொன்றை  அண்மையில் வாசித்தது பற்றிய சிறு குறிப்புகளே இவை.

தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவர் என்று

இவரைக் குறிப்பிடுகிறார்கள்.  42 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மறைந்த கு..ரா வின் சில சிறுகதைகளை வலைத்தமிழ் என்ற இணையத் தளத்தில்  அண்மையில் காண முடிந்தது.

 'விடியுமா?'  என்ற கதை எழுதப்பட்டு எப்படியும் இப்போது  80 வருடங்கள் கடந்திருக்க வேண்டும். ஏனென்றால் கு.ப.ரா 1944 யிலேயே இறந்து விட்டார்.

தந்திகள் அவசரச் செய்திகளைத் தாங்கி வந்த காலத்தை நினைவூட்டுகிறது கதை. தந்திச் செய்தியைக் கேட்டு கதை சொல்லி தனது தமக்கையுடன்  ரயிலில் பயணிக்கும் பின்னணியில் கதை நகருகிறது.

 கதை சொல்லிக்கு விடிந்து விட்டது என்ற பொருளில் கதையை முடிக்கிறார் கு..ரா. அதே வேளை அவர் இன்னொரு பக்கத்தை வேண்டுமென்றே சொல்லாமல் தவிர்த்து விடுவது அதில் இரு வகை ஊகங்களும் சாத்தியம் என்பதாலோ, அல்லது கலையின் அழகியல் என்ற இலக்கணத்தை நிறுவ முயன்றதாலோ என்று தெரியவில்லை. எப்படியாயினும் கதையின் முடிவுக்குப் பிறகு வாசகர்களை  சிந்திக்க வைக்கும் உபாயம்தான் அது.

 இப்போது நானும் இத்துடன் இந்தக் குறிப்பை நிறுத்தி உங்களைக் கதையை வாசிக்க விடுவதே தகும்.

 சிறுகதையின் இணைப்பு கீழே

 https://www.valaitamil.com/vidiyumo_1684.html


No comments: