சித்திரை வருடப்பிறப்பு - 14/04 /2023
"ஆன்மீக செல்வன்" தனாசிவம்

சிட்னி, அவுஸ்திரேலியா.
 

            
சோபகிருது வருடப்பிறப்பு

சோப கிருதுதன்னிற் றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ் - சோபனங்கள்
உண்டாகு மாரி யொழியாமற் பெய்யுமெல்லா
முண்டாகு மென்றே யுரை

இந்த சோபகிருது வருடத்தில் பூமியில் மக்கள் நோய்நொடிகள் இன்றி சுக வாழ்வு வாழ்வர். மண்வளம் செழிப்புற மழை உண்டு.நெல் விளைச்சல் மிகு.

இராஜா - புதன்
மந்திரி - சுக்கிரன்
சேனாதிபதி - வியாழன்


*நேரம் - சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1ம் நாள் (14.04.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.03 மணியளவில் பிறக்கிறது.

* புண்ணிய காலம் -சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1ம் நாள் (14.04.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.03 மணி முதல் பிற்பகல் 6.03 மணி வரை உள்ளது.

* மருத்துநீர் - சிரசில் கொன்றை இலையும், காலில் புன்கிலையும் வைத்து ஸ்தானம் செய்தல்.

* வருடப்பிறப்பு நிறம் - வெள்ளை நிறமுள்ளது அல்லது வெள்ளைக்கரையமைந்த ஆடைகள் அணியலாம்.(வெண்மை - தூய்மை )

இந்த வருடப்பிறப்பு சகல செளபாக்கியங்களையும் நலன்களையும் பெற்று தருவதோடு மக்களுக்கு நல்புத்தியும் சிறந்த பக்தியும் ஞானத்தையும்(நல்லறிவு நற்பண்புகள் நல்லொழுக்கம்  அனுபவம்) தந்து தூயதவத்தாற் பெற்ற மானிடப் பிறவியில் இனிது சிந்தித்து மங்களகரமாக வாழக்கடவர்.

ஆதாய பலன்
*****************
மேடம் -                5      5     சமசுகம்
இடபம் -             14    11    சுகம்
மிதுனம் -            2    11    பெருநஷ்டம்
௧ர்க்கடகம்-        2    2      சமசுகம்
சிங்கம்-             14    2       அதிகலாபம்
கன்னி-                2    11     பெருநஷ்டம்
துலாம்-              14   11     சுகம்
விருச்சிகம்-       5    5       சமசுகம்
தனு-                      8   11      நஷ்டம்
மகரம்-                 11   5       லாபம் 
கும்பம்-               11   5        லாபம் 
மீனம்-                    8   11      நஷ்டம்

"இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!!!"

No comments: