மூத்த தமிழ் ஆளுமை அவ்வை நடராசன் அவர்கள் தனது 86 வது
அகவையில் 21.11.2022 இவ்வுலகை விட்டு மறைந்தார் என்ற செய்தி தமிழுலகத்தை மிகுந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழுணர்வாளர்கள், அரசுத் தலைவர்கள் வரிசையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவ்வை நடராசன் அவர்களது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களோடு பழகி, இலக்கியம் பேசித் தொடர்ந்த நட்பைப் பேணிய வாழ்நாள் நட்பு திரு நந்தகுமார் அவர்கள் அவ்வை நடராசனார் குறித்து ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கிய நினைவேந்தலை இங்கு பகிர்கிறேன்.
https://www.youtube.com/watch?
அவ்வை நடராசன் அவர்களது இழப்பில் துயருறும் குடும்பத்தவர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஐயாவின் ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறோம்.
கானா பிரபா
22.11.2022
2 comments:
தம்பி நீங்கள் தயரித்து அளித்த திரு திரு நந்தகுமார் அவர்கள் அவ்வை நடராஜன் அவர்களுக்கு வழங்கிய நினைவேந்தல் நிகழ்வு கேட்டேன் . இந்த இடத்திலே அவ்வை நடராஜன் அவர்கள் எனது பேச்சுப் காட்சிபடுத்தலுமா ஒரு நிகழ்ச்சியை அவர் தமிழ் வளர்ச்சி துறை தலைவராக இருந்த போது ஒழுங்கு செய்தார் .இது சென்னை மியூசியம் அரங்கில் 1986இல் நடை பெற்ற .இதற்கு காரணமாக இருந்து எனது தமிழ் பல்கலை கழக பரிசே. இதை அடுத்து அவர் தமிழ் பல்கலை கழக தலைவராக பொறுப்பேற்ற போது என்னை அங்கு ஆய்வாளராக பணி புரிய அழைத்தார் .ஆனால் மூன்றே அங்கத்தவர் கொண்ட குடும்பம் எமது . எனது கணவர் சென்னை நான் தஞ்சை மகன் டெல்லி என குடும்பம் பிரிய முடியாது என போகவில்லை. ஆனால் இலங்கையில் இருந்தபோதே கைலாசநாத குருக்கள் அவர்களிடம் நான் தனியே போய் தங்கி சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் ஆய்வு செய்யலாமா என கேட்டேன் அவர் தனி ஒரு பெண்ணாக தஞ்சாவூரில் தங்கும் எண்ணத்தை கைவிடுங்கள் என்றார் . ஏதோ தோன்றியது பகிர்ந்து கொண்டேன்
மிக்க நன்றி உங்கள் பெறுமதியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு.
Post a Comment