நினைத்துப் பார்க்க வேண்டிய பெருமகன் பொன்.இராமநாதன் அவர்கள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .. அவுஸ்திரேலியா

 

  மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தப் பெருமான்


நமக்கெல்லாம் நம்பி க்கையினை விதைத்திருக்கிறார்.அந்த நம்பிக்
கையினை எத்தனை பேர் உண்மையாக்கி இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்பது மிகவும் அவசியமல்லவா ! " மனித்தப் பிறவி யும் வேண்டுவதே இந்த மாநிலத்தே " என்று அப்பர் பெருமான் பிறப்பின் முக்கியத்தை அதாவது மனிதாக இந்த மாநிலத்தில் பிறப்பதையே வியந்து பார்ப்பதையும் மனமிருத்து வதும் முக்கியமாகும்.மாநிலத்தில் பிறக்கின்ற அத்தனைபேரும் - தங்களின் வாழ்வினை எப்படி அமைத்துக் கொள்ளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் பிறப்பின் உன்ன தம் வெளிப்பட்டு வெளிச்சமாய் அமைகிறது எனலாம்.பிறந்த பிறப்பினைப் பயனுடைய தாக்கி சமூகத்தால் இன்று வரை போற்றி மதிக்கப்பட்டு கெளரவிக்கப்படும் நிலையில் ஒரு பெருமகன் வாழ்ந்தார். அவரை நினைத்துப் பார்ப்பது மிகவும் அவசியமேயாகும். அப்படி நினைத்துப் பார்க்க வேண்டிய பெருமகானார்தான் ஈழத்தின் சொத்தாகிய பொன் னம்பலம் இராமநாதன் அவர்கள்.

  தலை நகராம் கொழும்பில் பிறக்கின்றார்.கற்றறிந்தவர்கள்


குடும்பம். வசதிகள் நிறைந்த குடும்பம்.செல்வாக்கு மிக்க குடும்பம். வசதிகள் நிறைந்து இருந்தும் - கல்வியைக் கருத் தில் கொண்ட குடும்பமாக அவரின் குடும்பம் இருந்தது என்பதைக் கருத்திருத்தல் முக்கிய மாகும். வசதிகள் நிறைந்தால் அதில் மூழ்கி அதனை அனுபவித்து  வாழ்வினை வாழ்பவ ர்கள் பலர் இருப்பதையே காணமுடிகிறது. ஆனால் பொன் . இராமநாதன் வசதிகளைப் பெற்றிருந்தும் வாழ்க்கைக்குக் கல்விதான் சிறப்பினை அளிக்கும் என்ற நிலையில் - கல் வியைக் கண்ணாய்க்கருதி இலங்கையிலும் கற்றார். இந்தியாவிலும் கற்றார்.

  அன்னைத் தமிழினை அரவணைத்தார். ஆங்கிலத்தைக் கற்றார். சைவத்தைப் போற்றி னார். வேத.  உபநிடதம் ,  நிறைந்த வடமொழியையும் கற்றார்.சிங்களம் கிரேக்கம் லத்தீன் எனப் பல மொழிகளையும் கற்றவராகவும் விளங்கினார்.சட்டம் பயின்றார். கூடவே தத்து வமும் பயின்றார். அவரின் சிந்தனைசெயற்பாடுகள் யாவும் பரந்து விரிந்ததாகவே அமை ந்தது எனலாம். கற்ற கல்வியையும் பெற்ற பதவியையும் - சமூகத்துக்குப் பயனுடைய தாக்கிட வேண்டும் என்னும் உயரிய உன்னத எண்ணமே அவரிடம் குடிகொண்டிருந்தது என்பதால்த்தான் அவரை நினைத்துப் பார்ப்பது அவசியமாயிருக்கிறது.

  பொன். இராமநாதனுடைய காலம் 1851- 1930 ஆண்டுகளாகும். அவர் அறியும் வண்ணம் அவருக்கு முன்பாக நல்லைநகர் நாவலர் பெருமான்வள்ளலார், இராமகிருஷ்ண பரமஹ ம்சர்ஷீரடிபாபா ஆகியோரும் - அவருக்குப் பின்னால் இரவீந்திரநாத் தாகூர்சுவாமி விவே கானந்தர்காந்திஜி அரவிந்தர்ரமண மகிரிஷிபாரதியார்சுவாமி விபுலானந்தர் ஆகியோ ரும் வருகின்றார்கள்.இவர்கள் அனைவருமே சமூகத்தை நேசித்தவர்கள். கல்வியையும் நேசித்தவர்கள். அதே வேளை கல்வியினை  ஆன்மீகத்துடன் இணைத்தே பார்த்தவர்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.ராஜாராம் மோகன்ராய் இந்தியாவில் துணிந்து சீர்தி ருத்தத்தில் ஈடுபட்டவர். அவரால் அக்காலத்தில் சமூகத்தில் பல புரட்சிகரமான மாற்றங் கள் ஏற்பட வழி ஏற்பட்டது. ஆனால் அவர் பொன். இராமநாதன் பிறக்க முன்பே மறைந்து விட்டார்.

  தமிழ்நாட்டில் இருந்த பெரியார்களின் தாக்கம் பொன்.


இராமநாதனையும் பற்றியிருக்கும் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. இராமநாதனின் கல்வி சென்னையில் இடம் பெற்ற காரணத்தால் அவரின் இளம் மனதில் பல நல்ல கருத்துக்கள் அதாவது ஆன்மீகம் சம்பந்தமான கருத்துக்கள் வேரூன்றின எனலாம். அந்தக் கருவானது பின்னர் அவரின் சிந் தனையையும் செயலையும், சிறப்பாக்கிடத் துணையாக இருந்தது என்பது மறுப்பதற்கி ல்லை.அதே வேளை இராமநாதனை  ஒருவர் உற்று உற்று நோக்கியபடி இருந்தார். இராம நாதனால்த்தான் தான் விரும்பிய விடயங்கள் சிறப்பாய் நிறைவேறும் என்றும் நம்பினார். அதனால் இராமநாதனை அவரின் கை சுட்டிக் காட்டியது. இராமநாதனை வருங்கால விடி வெள்ளியாய் கண்டவர் கையினால் சுட்டிக் காட்டியவர் வேறு யாருமல்ல ... எங்களின் நல்லைநகர் நாவலர் பெருமான்தான். நாவலர் பெருமான் தான் கண்ட கனவை நனவாக் கிட யார் வருவார் என்று ஏங்கியபடி இருந்தார். அவரின் கனவினை நனவாக்க வந்து நின்றார் பொன். இராமநாதன் அவர்கள்.நாவலர் பெருமானின் எண்ணங்களை வண்ணங் களாக்கி நிற்கும் வகையில் இராமநாதன் அவர்கள் விளங்கினார் என்பதை யாவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்.

  சைவத்தைத் தலைமேற் கொண்டார் நாவலர் பெருமான். அதே


வேளை தமிழையும் தலைவணங்கி நின்றார்.  ஒழுக்கத்தை உயிராக எண்ணினார் நாவலர். இவையனைத்தும் இணைந்த கல்வியையும் கொடுக்க வேண்டும் என்று பேராவலும் கொண்டார்.அவரின் காலத்துச் சூழலுக்கு ஏற்ப அவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. நாவலர் பெருமான் தான் எடுத்துக் கொண்ட முயற்சியைச் செவ்வனவே செய்தார். செய்வதில் உறுதியும் கொண்டு விளங்கினார். தான் தொடங்கிய இந்த உன்னதமான பணியினைச் சுமந்து செல் வதற்கு உரிய ஒருவரை நாவலர் பெருமான் தேடியபடியே இருந்திருக்கிறார்.  "தேடிக் கண்டு கொண்டேன் " என்பது போல அவரின் தேடலாய் வந்து நின்றவராய் பொன். இரா மநாதன் வந்தமைகிறார் என்பதுதான் உண்மையாகும்.நாவலர் பெருமான் மரபின் வழியில் பொன். இராமநாதன் வந்து அமைகிறார் என்பதை மறுத்துரைத்து விடல் முடியாது.

  " கண்ணுடையர் என்போர் கற்றோர் " , " கற்கக் கசடறக் கற்க " ," கற்றதனால் ஆய பயன் வாலறிவன் நற்றாள் தொழல் " இவை அனைத்தையும் அகத்தில் அமர்த்தினார் நாவலர் பெருமான். இதனையே இராமநாதனும் இருத்தினார் தன்னகத்தில் என்பதுதான் உண்மையாகும்.கல்வியைக் கொடுக்க வேண்டும். அதுவும் ஆன்மீகம் கொண்ட கல்வியாய் அமைதல் வேண்டும் என்பதுதான் பொன். இராமநாதனின் எண்ணமாய் இருந்தது எனலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே அவரால் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான ,கற் பித்தல் , தொடர்பான திட்டங்கள் அனைத்தும்


செயற்படுத்தப்பட்டன என்பதைத்தான்  காணுகின்றோம்.இந்தியாவில் கல்வியைக் கற்றதன் பயன்தான் ஆன்மீகம் நாட்டத்துக்கு வழிவகுத்தது எனலாம். சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் வழிகாட்டல், சுவாமி அருட்பரானந்தாவின் சந்திப்பு , சென்னையில் கிடைத்த அனுபவம், தமிழ்நாட்டில் வாய்த்த ஆசிரியர்கள், நட்புகள் , அனைத்துமே இராமநாதன் அவர்களின் ஆன்மீக நாட்டத்துக்கு பெரு வலுவூட்டியது என்பதுதான் உண்மையாகும்.வசதிகள், வாய்ப்புகள், எல்லாமே வாய் த்திருந்தும் இராமநாதன் அவர்கள் பிற்காலத்தில் ஒரு ஞானியாகவே தனது வாழ்க்கைப் பாதையினை வகுத்துக் கொண்டார் என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தாகும். இதற்கு அடிப்படையே அவரின் அகத்தில் ஆழமாகப் பதிந்திட்ட ஆத்மீகம் என்றுதான் எண்ணிட வைக்கிறது.

   சைவம் தழுவிய ஒழுக்கமான கல்வியினையே இராமநாதன் விரும்பினார். அந்தக் கல் வியூடாக நல்லதொரு சமூகம் உருவாகும் என்றும் அவர் நம்பினார்.அப்படியான கல்வியி னைப் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று சிந்தித்து அதனைச் செயற்படுத்தியும் நின் றார். இல்லம் சிறக்க பெண்களே முக்கியம் என்பதை முழுதாக இராமாநாதப் பெருமகன் மனத்தில் பதித்து வைத்திருந்தார். அந்தப் பெண்கள் கல்வி கற்றவராகவும் , சமய , ஒழுக் கம் நிறைந்தவர்களாகவும் ,தமிழ்ப்பற்று மிக்கவராகவும்,  இருக்க வேண்டும் என்றும் பெரி தும் ஆசைப்பட்டார். அந்த நல்லாசையினால் எழுந்ததுதான் 1913 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் தோற்றம் பெற்ற மருதனார்மடம் மகளிர் கல்லூரியாகும்.இன்று அக்கல்லூரி இராமநாதன் மகளிர் கல்லூரி என்னும் மகுடத்துடன் கல்வி கற்றிட விளையும் பெண்க ளுக் கெல்லாம் பெரும் பொக்கிஷமாய் திகழ்கிறது.பெண்களுக்கான கல்லூரியினை நிறுவி யதோடு - சைவத்தமிழைப் போதிக்கும் ஆசியர்களை உருவாக்கும் பயிற்சியையும் இங்கு ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதும் நோக்கத்தக்கது.

  யாழ்மண்ணில் சைவத் தமிழ் பரப்பிட ஆன்மீகச் சிந்தனை மிகுந்த பொன். இராமநாத னால் முதலில் தொடக்கப்பட்டது பெண்களுக்கான கல்லூரியேயாகும். யாழ்மண்ணில் ஆண்களுக்காகவே பல பாடசாலைகள் தொடங்கப்பட்டன. இந்துக் கல்லூரிகள் தொடங்க ப்பட்டாலும் அவைகளும் ஆண்களை மையப்படுத்தியே தொடங்கப்பட்டன. இதனை மனங் கொண்ட காரணத்தாலத்தான் சைவத் தமிழ்க் கல்லூரியைப் பெண்களுக்கு அமைத்திட வேண்டும் என்னும் எண்ணம் வள்ளல் இராமநாதன் உள்ளத்தில் முதலாவதாக எழுந்தது எனலாம். அதுவே இராமநாதன் மகளிர் கல்லூரியாய் மலர்ந்தது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சைவத் தமிழ் பண்பாட்டில் வளரவேண்டும் என்று வள்ளல் இராமநாதன் ஆசைகொண்டார். அவரின் ஆசை திருநெல்வேலியில் பரமேஸ்வ ரன் பெயரினைத் தாங்கிய கல்லூரியாக 22-08-1921 ஆரம்பிக்கப்பட்டது.சைவத் தமிழ்ப் பண் பாட்டுடனான கல்வி இங்கு வழங்கப்பட்டது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். இங்கு கற்பித்த ஆசியர்கள்- சிறந்த தகுதியுடையவராயும் , ஒழுக்க சீலர்களாகவும் , ஆன்மீகச் சிந்தனை மிக்கவர்களாகவும்  விளங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  வள்ளல் இராமநாதனைவிட மூத்தவர் நாவர் பெருமான்.வயதாலும் மூத்தவர். வாண்மை யாலும் மூத்தவர். அந்த மூத்தவர் மனத்துதித்த சிந்தனைகளைச் செயலாக்குவதில் இராம நாதன் அவர்கள் முன்னின்றார் என்பதுதான் முக்கியம். கற்றவர்களைப் பயிற்றுவிப்பதும் பட்டமளித்து சமுதாயத்தில் அவர்களையும், தமிழ்க் கல்வியினையும்,உயர்த்துதல் வேண் டும் என்பது நாவலர் பெருமானின் மனத்துதித்த பேரெண்ணமாகும். அதனை தன்னுடைய அகத்திருத்தி அதற்குச் செயல் வடிவம் கொடுக்கு முகமாக - திருநெல்வேலியில் அமைந்த கல்வி வளாகத்தினுள்ளே - தமிழ் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, பண்டிதர்களுக்கான பயி ற்சியினை நல்கிடும் கலாசாலை , ஆகியவற்றை அமைத்து நாவலர் பெருமானின் பேரார் வத்தை நிறைவேற்றி வைத்தார் என்பது நோக்கத்தக்கதாகும்.

  நாவலர் பெருமான் கல்விக்கூடங்களை நிறுவும் பொழுது ஆலயத்தையும் அங்கு அமை த்தார். அவ்வழியில் இராமநாதனும் தான் நிறுவிய கல்விச் சாலைகளில் ஆலயம் அமை த்து அறிவுடன் அருளும் , ஆன்மீகம் இணைந்துவிடச் செய்தார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி இரண்டிலும் எம்பெரு மான் ஆலயங்கள் அமைந்திருப்பதை நாம் காணுகிறோம் அல்லவா ! கற்பது மட்டுமல்ல அதனுடன் கடவுளைப்பற்றியும் எண்ண வேண்டும். கல்வியின் பயன் கடவுளைத் தெரிந்து கொள்ளுவது.படித்தால் மட்டும் போதுமா ? படைத்தவனை மறந்திடும் கல்வியால் பயனி ல்லை என்னும் எண்ணம் வள்ளல் இராமநாதன் மனத்தில் நிறைந்தே இருந்தது. இப்படி இருந்ததற்கு நாவலர் பெருமானும் ஒரு முக்கிய தூண்டுகோல் என்றும் கொள்லலாம் அல்லவா !

  நாவலர் பெருமான் ஈழத்திலும் இந்தியாவிலும் சைவப் பிரசங்கங்கள் செய்து தன்னை அடையாளப்படுத்தினார். பொன்னம்பலம் இராமநாதன் இங்கிலாந்து , அமெரிக்கா , இந் தியா , போன்ற இடங்களில் எல்லாம் சென்று தன்னுடைய ஆற்றலுடை வார்த்தைகளால் ஆன்மீகக் கருத்துக்களையெல்லாம் கேட்பார் பிணிக்கும் வண்ணம் வழங்கி பயனுறச் செய் தார்.அவரிடம் காணப்பட்ட பன்மொழி ஆற்றல், அவரிடம் அமைந்திருந்த தத்துவ நாட்டம், அவரிடம் அமைந்திருந்த தன்னொழுக்கம் அத்தனையும் அவரை இன்றும் நினைத்துப் பார்க்கவே வைத்திருக்கிறதல்லவா !

 உயர்ந்த குறிக்கோளுடன் அவரால் தொடங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று உயர் கல்வியினைக் கொடுத்திடும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக ஆகியிருக்கிறது. பெண்க ளுக்காக அமைக்கப்பட்ட இராமநாதன் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தின் நுண்கலைப் பீடமாய் மிளிர்ந்து நிற்கிறது.சைவசித்தாந்தம் , இந்துக் கலாசாரம் ,சமஸ் கிருதம் , தமிழ் மொழி , அத்தனையையும் அளிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலை க்கழகம் - பண்பாட்டுப் பல்கலைக்கழகமாகவே திகழ்கிறது. இராமநாதன் கண்ட கனவினை நனவாக்கும் வகையில் யாழ்ப்பானப் பல்கலைக்கழகம் வளர்ந்து வருகிறது என்பது யாவ ரும் மனமிருத்த வேண்டியதே.

 கல்வியொடு நிற்காமல் - காலங்காலமாய் நிலைத்து நின்றிட எங்கள் சைவம் காத்திட , ஆகம முறைப்படி ஒழுங்காகப் பூஜை நிகழ்ந்திட , வேதமும் , திருமுறையும் , முறை யாய் ஒலித்திட தலைநகராம் கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் சான்றா கி நிற்கிறது.இந்த ஆலயம் ஒரு கலைக்கூடம்.கருங்கல்லினாலாகிய கலைக்கூடம்.தென் னிந்தியக் கோவில்களுக்கு நிகராக நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இதுவாகும். இதுபோன் றதொரு ஆலயத்தை இலங்கையில் எங்குமே காணவே முடியாது.

 அரசாங்கத்தில் உயர்பதவியை அலங்கரித்தவர்.அரசாங்க சபையில் உறுப்பினாராக இருந் தவர். ஆட்சியாளர்களால் பெரிதும் மதிப்பட்டவர்.ஒரு காலத்தில் ஆடம்பரமாய் வாழ்ந்த வர். அறிஞர். எழுத்தாளர். பேச்சாளர்.ஆனாலும் பொன்னம்பலம் இராமநாதன் உள்ளத்தில் ஆன்மீகம் என்னும் உணர்வு எப்படியோ எழுந்து விட்டது. அந்த ஆன்மீக உந்தலால் அவ ரிடம் காணப்பட்ட ஆடம்பரம் அத்தனையும் அகன்றது. ஆண்டவனின் நினைப்பும், அறவழி நாட்டமும், அவரின் நிறைவில் நிறைந்தே இருந்தது.குறை குடமாக இருக்காமல் நிறை குடமாகவே அவர் காணப்பட்டார். அவரின் வாழ்வும் வளமான வாழ்வாகவே அமைந்தது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவராய் பொன்னம்பலம் இராமநாத வள்ளல் விளங்குவ தால் அவரை யாவருமே நினைத்துப் பார்க்க வேண்டும்.


No comments: