‘தங்கத் தாத்தா’வை நினைவு கூருவோம்! - இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர்              


 (மே 251878 யூலை 101953)   

தங்கத் தாத்தா எனத் தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பெற்றவர் நவாலி ஊரிலே பிறந்த சோமசுந்தரப் புலவர் ஆவர் இவர் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான செந்தமிழ்ப் பாடல்களை இயற்றி ஈழவள நாட்டிலே புலவர் பரம்பரையை இலங்கச் செய்தவர்.அவரின் பேரனான பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள்; குழந்தைகளுக்காக இயற்றிய சிறுவர் செந்தமிழப்; பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து சிறுவர்களுக்காக இப் பாடல்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

 

   இனிய கவிதைகள் சிறுவர் பாட

             இயற்றித் தந்த தாத்தா

      புனிதன் சோம சுந்தரப் புலவர்;

             புலமையைப் போற்று பாப்பா!.

  

     தமிழ்த்தாய் அருளைப்; பெற்ற எங்கள்

           தங்கப் புலவர் கோனார்

     அமிழ்தம் எனவே அளித்த தமிழை

           அள்ளிப் பருகு பாப்பா!

 

    கோயில் தோறும் உயிர்ப்பலி செய்யும்

          கொடுமைச் செயலைச் சாடியே

    வாய்பே சாத ஆடு சேவல்

          வதையை நிறுத்தச் செய்தவர்

 !

    ஆடிப் பிறப்பொடு கத்தரி வெருளியை

          ஆக்கிப் படைத்த தாத்தா

    தேடிய புகழைப் போற்றி யவர்தமிழ்

          தினமும் படிப்பாய் பாப்பா!

 

    தெய்வமும் இருக்கும் இடத்தை; கூறிச்

          சிறுவர் தமிழைத் தந்த

    வையகம் போற்றும் புலவர் யாத்த

          வண்டமிழ் கற்றிடு பாப்பா! 

 

  'போதும் என்ற மனமே பெரிது

          புலாலை மறப்பாய்" என்றவர்

    ஓதி உணரப் பாடிய தெல்லாம்

          ஓம்பி நடப்பாய் பாப்பா!

   

 இழந்தவை கொண்டு வளம்பெற வாழ

          இன்கவி தந்த புலவர்

 குழந்தைகள் மகிழத் தந்த தமிழைக்

           கூடிப் படித்திடு பாப்பா!.

                              

 

No comments: