.
கிடைத்த வாழ்வில்நீயும் நானும்
தடைகள் பலதை
தாண்டியே வந்து
நிலைகள் தடுமாறி
வழிகள் பலமறந்து
வலிகள் சுமந்திங்கே
வாழ்வைக் கடந்தோமே
ஏற்றத் தாழ்வுகளை
ஏற்றுக் கடந்திங்கே
மாற்று வழிபலவும்
மனதில் நிறைத்திடவே
காற்று வெளியிடையே
கனவை சுமந்துக்கொண்டு
உடலும் நடையாக
ஓடி களைத்தோமே
அயர்ந்த கண்களுடன்
உயர்ந்த வாழ்விற்காக
திறந்த மனதோடு
சிறந்த நட்பானோம்
கடக்கும் காலங்களை
அடக்கி மனதுக்குள்ளே
வாழ்வே வேண்டுமென
வாழ்க்கை கசப்பாக
வரவை இனிப்பாக்கி
செலவைக் காத்துக்கொண்டு
சிரிப்பைக் காட்டிவந்தோம்
தாழ்வு வந்தெம்மை
தட்டி அழைக்கையிலே
வாழ நினைத்தோமே
வையகம் துணைகொண்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
1 comment:
நன்றியும் மகிழ்ச்சிம்
Post a Comment