முல்லை மண்ணின் கலைஞர்களின் உருவாக்கத்தில் 02 குறும்படங்கள்

 Thursday, July 21, 2022 - 11:44am

முல்லை மண்ணின் கலைஞர்களின் உருவாக்கத்தில் இரண்டு குறும்படங்கள் வெளியிடப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்களின் உருவாக்கத்தில் யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும் அரிது அரிது மற்றும் பாரச்சிலுவை என்ற இரண்டு குறும்படங்கள் எதிர்வரும் 25.07.2022அன்று வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.

கு.யோகேஸ்வரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு குறும்படங்களும் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்த இரண்டு குறும் படங்களும் முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்களின் விடா முயற்சியினால் முழுமைபெற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - நன்றி தினகரன் 

No comments: