ராஜா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 நடிகராக அறிமுகமாகி,தயாரிப்பாளாராக மாறி பல வெற்றி


படங்களை தயாரித்தவர் பாலாஜி.குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சிவாஜி கணேசனை அடித்தடி படங்களில் நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும்.அந்த வரிசையில் 1972ல் இவர் தயாரித்த படம் தான் ராஜா.தான் தயாரிக்கும் எல்லாப் படங்களிலும் கதாநாயகனுக்கு ராஜா என்று பெயர் சூட்டும் பாலாஜி இம்முறை படத்துக்கே ராஜா என்று பெயர் வைத்து விட்டார்.படத்தின் கதை ஹிந்தி படத்திலிருந்து வந்தது.தேவ் ஆனந்த்,ஹேமமாலினி ஜோடியாக நடித்த ஜானி மேரே நாம் தமிழில் ராஜாவானது.


ராஜா,பாபு இருவரும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டரின்

பிள்ளைகள்.நாகலிங்க பூபதி இண்ஸ்பெக்டரை தீர்த்துக் கட்ட குடும்பம் பிரிகிறது.ராஜா தாயுடன் வளர்ந்து துப்பறியும் நிபுணன் ஆகிறான்.பாபுவோ சந்தர்ப்ப வசத்தால் நாகலிங்கத்திடமே வளர்ந்து அவனின் கையாள் ஆகிறான்.இவர்களின் கூட்டத்தை சேர்ந்த ராதா கள்ளக்கடத்தல் வழக்கில் இருந்து தப்ப ராஜாவை காதலிப்பது போல் நடிக்கிறாள்.ராஜாவோ அவள் மூலம் கடத்தல் கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முனைகிறான்.இதன் காரணமாக ராதா மூலம் அந்த கூட்டத்தில் சேர்கிறான்.

இவ்வாறு குடும்ப செண்டிமெண்ட்,காதல் ,கடமை,கவர்ச்சி,ஆக்சன்,என்று கலவையாக அமைந்த படம் ,சிவாஜி ஜெயலலிதா என்ற இரண்டு நட்சத்திரங்களின் பலத்துடன் திரை விருந்தாக ரசிகர்களுக்கு கிடைத்தது.படம் முழுவதும் சிவாஜி ஸ்டைல் மன்னனாகவே காட்சியளித்தார்.அறிமுக காட்சி ஆகட்டும்,டெனிஸ் ராக்கட்டுடன் மை நேம் ஐஸ் ராஜா என்பதில் ஆகட்டும்,ஜெயலலிதாவை சீண்டுவதில் ஆகட்டும் எல்லாம் ஸ்டைல் தான்.இறுதி காட்சியில் தாயை வில்லன் அடிக்கும் போது தர்மசங்கடத்தில் சிரித்திக் கொண்டு துடிக்கிறாரே சிவாஜி சிவாஜிதான்!


ஜெயலலிதா அழகு பதுமையாகவும் வருகிறார்,சமயத்தில் சீரியும் விழுகிறார்.கங்கையிலே ஓடம் இல்லையோ பாடலிலே உணர்ச்சிகரமாக நடிக்கிறார்.சந்திரபாபுவுக்கு மூன்று வேடங்கள் சில இடங்களில் அவரின் இயலாமை தென்படுகிறது.இவர்களுடன் சுந்தரராஜன்,பண்டரிபாய்,பாலாஜி,கே கண்ணன்,ஆர்.எஸ் மனோகர் காந்திமதி,ராகவன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஆனாலும் படத்தில் அனைவரையும் தூக்கி விழுங்குபவர் எஸ் வி

ரங்காராவ் தான்!என்ன மிடுக்கு,என்ன அலட்சியம்,என்ன முகபாவம்,ஆஹா ஒரு அண்டர் கிரவுண்ட் தாதாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.பத்மா கன்னாவுடன் அவர் போடும் ஆட்டம் கவர்ச்சியா ஆபாசமா என்று பட்டி மன்றம் நடத்தலாம்!கிளைமக்சில் மனோகர் சொல்லுவதை நம்புவதா இல்லையா என்று தடுமாறும் இடம் அருமை.

படத்தில் மெல்லிசை மன்னர் காட்டும் இசை அசத்தல்.காட்சிக்கு காட்சி பின்னணி இசையில் பின்னியிருந்தார்.நீ வர வேண்டும் என்று பாத்திருந்தேன்,கல்யாண பொண்ணு கடை பக்கம் போனால்,இரண்டில் ஒன்று என்று எல்லாமே இளைமைத் துள்ளலுடன் ஆன பாடல்கள்.கங்கையிலே ஓடம் இல்லையோ பாடலில் உருக்கம் வழிந்தது.

படத்தை மஸ்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.ஏ எல் நாராயணன்

வசனங்கள் கருத்தோடுஅமைந்ததன..கண்ணதாசன் பாடல்களுக்கு டி எம் எஸ்,சுசிலா,ஈஸ்வரி ஆகியோர் குரலில் இனிமை சேர்த்தனர்.ஹிந்திப் படத்தை அப்படியே தமிழில் பிரதி பண்ணி இருந்தார் டைரக்டர் சி வி ராஜேந்திரன்.ஆனாலும் ரசிகர்கர்களின் ஆதரவை ராஜா பெற்றுக்கொண்டான்!

No comments: