கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஒன்பது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

 

 

 

    அறுசுவைகளுள் இனிப்புச்சுவையும் ஒன்றாகும்.இனிப்புச்சுவை


என்பது உடலுக்கு மிகவும் வேண்டிய தேயாகும்.இனிப்புச் சுவை என்றதும் இளை யவர் தொடக்கம் முதியவர்வரை தங்களை மறந்தே விடுவா ர்கள். எந்தச் சுவையினையும் விட இனிப்புச்சுவையினை யாவரும் அன்று தொடக்கம் இன்றுவரை ஏன் வாழும் காலம் வரை விரும்பிக் கொண்டேதான் இருப்பா ர்கள். அதே வேளை இனிப்புச்சுவையினை விரும்பினாலும் அதன் பக்கம் போக முடியாமல் இனிப்பினை ஒதுக்கும் நீரிழிவுக்கு ஆளாகி இருப்பவர் களும் இருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும்.இந்த நிலையில் பனையின் கொடையாக வரும் பனங்கட்டியை வைத்தியம் எப்படிப் பார் க்கிறது வைத்தியர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியமாய் இருக்கிறதல்லவா !

  புலவர்கள் போற்றிய பனங்கட்டியை வைத்தியர்களும் போற்றியே


நிற் கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டி யதேயாகும். மெத்தவே புகழ்ந்து போற்றும் வண்ணம் சித்தமருத்துவர்களால் பனங்கட்டி இருந்தி ருக்கிறது இன்றுவரை இருந்தும் வருகிறது. நம்முடைய முன்னோர்கள் உண்ணுகின்ற உணவினையே மருந்தாகக் கொண்டே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.அப்படி வாழ்ந்த காரணத்தால் ஆரோக்கியமாகவும்சுறுசுறுப்பாகவும் அவர்களின் வாழ்வு அமைந்து காணப்பட்டது. உணவுப் பழக்கவழக்கமே நல்லபடி வாழ் வதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது எனலாம்.இனிப்பில்லாமல் வாழ் க்கையும் இல்லை. இனிப்பில் லாமல் உணவும் அமையமாட்டாது. அந்த இனிப்புக்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது எதைத் தெரியுமா ? ... பனங்கட் டி யையேயாகும். பனங் கட்டி என்பது சாப்பாட்டில் இருந்த வரை இனிப்பு வியா தியான நீரிழிவு தொட்டு விடவே முடியாமல் இருந்திருக்கிறது என்பது தான் உண்மையாகும். ஆனால் காலகதியில் பனங்கட்டிக்குப் பதிலாக சீனியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால் அதன் கொடையாக இன்று நீரிழிவு என்பது இளையவர் தொடக்கம் முதியவர் வரைக்கும் கிடைத்திருக்கிறது.

  நம்முடைய வாழ்வுக்கு நல்ல நட்புதான் தேவையானது. நல்ல நண்பன் வாய்த்தால் அது நல்லதொரு வரமாகவும் அமையும் அல்லவா.பகையை யாராவது  அணைத்திடல் முறையா என்றால் இல்லை என்று தான் சொல் லல் வேண்டும். சீனி என்பது பகையாகும். பனங்கட்டிதான் நல்ல நண் பனாகும்நல்ல நண்பனை அரவணைப்பதுதான் உகந்தது என சித்தம ருத்துவமும் வலியுறுத்துகிறது.  சித்த மருத்துவர்க ளும் வலியுறுத்தி நிற்கிறார்கள். இன்று பலரும் பனங்கட்டியின் பக்கம் தங்கள் கவனத்தைச் செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது ஆரோக்கியமான நல்ல நிலையென்றுதான் கொள்ளல் வேண்டும்.

  இசை என்பது  குழந்தைப் பருவத்திலே ஆரம்பித்து வாழ்வின் அத்தனை பருவங்களிலும் இடம் பெறுவது போலவே பனங்கட்டியியின் நிலையும் அமைந்திருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் அதன் நாவில் நல்ல நீரில் பன ங்கட்டியைக் கரைத்து தடவி விடுவதை மனமிருத்தல் வேண்டும்.இப்படிச் செய்வதால் மலமா னது தடங்கலில்லாமல் வெளியேறுவது இலகுவாக் கப்படுகிறதாம்.மலங்கழிந்தால் குழந்தை நலமாகவே இருக்கும்.நலத்தின் வெளிப்பாடாய் குழந்தை  கைகால்களை ஆட்டி மகிழ்ச்சியாய் துள்ளியபடி இருப் பதைக் காணக்கூடியதாக இருக்கும்.இதனைப் பார்க்கும் தாயானவள்

" வட்டுக் கருப்பட்டியே வாசமுள்ள ரோசாவே " என்று கூடப் பாடிப் பரவச மும் அடைவாள் அல்லவா. குழந்தையினை " வட்டுக் கருப்பட்டியே " என விழிப்பது பனங்கட்டியின் அருமையினைக் காட்டி நிற்கிறதல்லவா.

    குழந்தைகள் கைகளை ஆட்டிச் சிரித்து விளையாடுவதற்கு பனங் கட்டி வந்து கைகொடுப்பதுபோல் குழந்தைகள் உணவினைச் சாப் பிடுவதற்கு விருப்பமின்றி அடம்பிடிக்கும் பொழுது - சீரகத்தைப் பொடியா க்கி அதனுடன் பனங்கட்டியைச் சேர்த்து சிறிய உருண் டைகளாக்கி கொடுத்துவிட்டால் அவர்களுக்கு நல்ல பசியெடுத் துவி டும்.அதன் பின்னர் அவர்கள் ஆனந்தமாக நாங்கள் கொடுக்கும் உண வுகளை விருப்பத்துடன் சுவைப்பார்கள். குழந்தைகளின் பசியும் அக லும். வயிறும் நிரம்பியே விடும் என்று சித்தமருத்துவம் வழிகா ட்டி நிற்கிறது.

   உணவு உண்ட  பின்னர் சிறிய துண்டுப் பனங்கட்டியை எடுத்துச் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது உண்ட உணவானது நன்றாகவே சமிபாட்டினை அடையச் செய்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். அதுமட்டும ன்றி குடலினது இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்ப டுவதையும் தடுக்கிறது.கல்லீரலில் ஏற்படுகின்ற நச்சுக்களை வெளி யேற்றி கல்லீரலின் செயற்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. பெண்கள் பருவம் அடைந்ததும் அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளில் பனங்கட்டி சேர்க்கப்படுகிறது. உழுத்தம் மாவில் களி செய்து கொடு ப்பது வழக்கமாகும். அப்படிச் செய்யும் பொழுது அந்தக் களியில் நிச் சயமாகப் பனங்கட்டி சேர்க்கப்படுகிறது என்பது நோக்கத்தது.இப்படிக் கொடுப்பதால் பெண்களின் இடும்பெலும்பானது வலுப் பெறுவதோடு கருப்பையும் வலுப் பெறுகிறது என்று மருத்துவம் அறிவிறுத்தி நிற்கிறது,

    பனங்கட்டியில் எண்ணற்ற வைட்டமின்களும்மினரல் சத்துக்களும் இருக்கின்றன.உடலைக் குளிர்ச்சி அடையும் வகையில் பனங்கட்டி அமைந்திருக்கிறது.அதில் இருக்கும் கிளைசீமி இண்டெக்ஸ் உடலி லே கலக்கும் சர்க்கரையின் அளவினைக் குறைக்கிறது.சீனியினைப் பயன்படுத்தும் பொழுது சர்க்கரையின் அளவு கூடுகிறது. ஆனால் பனங்கட்டியைப் பயன்படுத்தும் பொழுது அதன் அளவு பாதிக்கும் கீழாகவே ஆகிறதாம். இதனால் கோப்பிதேனீர் போன்ற குடிபான ங்களைக் குடிக்கும் பொழுது பனங்கட்டியைப் பயன்படுத்துவது உக ந்தாக இருக்கிறது. அத்துடன் நீரிழிவு உள்ளவர்களுக்கு பனங்கட்டி யைப் பயன்படுத் தலாம் என்றும் அறிய முடிகிறது. சித்தமருத்துவ மும் குடிபானங்களுடன் பனங்கட்டியை எடுப்பதையே வலியு றுத்தி நிற்கின்றது.

  இரும்புச் சத்து பனங்கட்டியில் அதிகம் இருக்கின்ற காரணத்தால் இரத்தச் சோகை ஏற்படாமல் பாதுகா ப்பாகவும் இருக்கிறது. இரத்த த்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைகின்ற பொழுதுதான் இரத்தச் சோகைப் பிரச்சினை ஏற்படுகிறது.ஹீமோகிளோபினைச் சுரக்க வைக்கும் ஆற்றல் பனங்கட்டியில் இருக் கின்ற இரும்புச்சத்துக்கு இருப்பதால் பனங்கட்டியை அன்றாடம் உணவில் சேர்ப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.

எலும்புகள் என்பது எமது உடம்பில் முக்கியமான பகுதியாகும்.அந்த எலும்புகள்தான் உடம்பின் ஆதாரமே எனலாம். அப்படிப்பட்ட எலும்பு களானது வயது செல்லச் செல்ல அதன் வலிமையானது குறைந்து கொண்டு போவதென்பதைத் தடுக்கமுடியாது.வலுக்குறையும் பொழு துதான் எலும்புகளில் தேய்மானம் என்னும் சிக்கலுருவாகிறது. பனங் கட்டியில் கல்சியம் மற்று தாதுச்சத்துக்கள் நிறைந்தே இருப்பதால் அதனை குழந்தைகள் முதல்  முதியவர்வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் - எலும்புகள் வலுப்பெறுவதோடு அவற்றில் ஏற்படுகின்ற தேய்மானமும் தடுக்கப்படுகிறது என்று மருத்துவம் தெரிவிக்கிறது.

   குளிர்காலங்களில் சளி தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு நிறை யவே வாய்ப்பிருப்பதை நாமனை வருமே அறிவோம். சளிபிடிப்பதால்   மூக்கிலிருந்து நீர் வடிதல்இருமல்ஆகியன ஏற்பட்டு பலரும் பெரு ம் அவதிக்கு ஆளாவது என்பது நடைமுறையில் இருந்து கொண்டே வருகிறது.இப்படியான அவதி வரும் வேளை குப்பைமேனிக் கீரையு டன் பனங்கட்டியைச் சேர்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் சளியினால் ஏற்பட்ட  அவதிகள் அகன்று நிம்மதி கிடைக்கு மென்பது அனுபவபூர் மானதாகச் சமூகத்தில் இருந்து வருகிறது.சுவாசப் பாதையில் இரு க்கின்ற சளியினை அகற்றுவதோடு சுவாசப் பிரச்சினைகளால் பாதி க்கப்படும் ஆஸ்துமாக் காரரர்களுக்கும் பனங்கட்டி மிகவும் பயனளிக் கும் ஒன்றாகவே விளங்குகிறது.

  தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாமனைவரு மே அறிவோம். தாய்ப்பால் சுரக்கா திருந்தால் பிறந்த குழந்தை தவித் தே போய்விடும் அல்லவா குழந்தைகளைப் பெற்ற தாய்மாருக்கு பால் சுரப்பதற்கு பனங்கட்டி கைகொடுத்து நிற்கிறது.சுக்குமிளகு இவ ற்றைப் பொடியாக்கி அதனுடன் பனங்க ட்டியினைச் சேர்த்து சாப்பிட் டுவருவதுதான் தாய்ப்பால் சுரப்பதற்கு நல்ல மருந்தாக இருக்கிறது என்று எங்கள் மருத்துவம் காட்டியிருக்கிறது. இதனால் தாய்க்கு நன்றாகப் பாலும் சுரக்கும். அந்தப் பாலினைக் குடிக்கும் குழந்தை யும் நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும். தாய்ப்பாலுடன் பனங்கட்டியும் குழந்தை க்குச் செல்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்,

  கர்ப்பம் தரித்த பெண்கள் பனங்கட்டியை உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் அவர்களின் உடம்பில் இரும்புச் சத்தின் அளவா னது சீராக அமைகிறது. ஏழாவது மாதத்திலிருந்து பெண்கள் சந்திக்கும் வலியினைத் தடுக்கவும் பிரசவமானது சுகமாக நடக்கவும் பனங்கட்டி உதவுகிறது என்பதும் நோக்கத் தக்கதாகும்.

   நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்க பனங்கட்டியில் இருக்கின்ற பொட்டாசியம் உதவுகிறது. உப்பிய வயிறுஉடலில் ஏற்படும் நீர்த்தேக்கப் பிரச்சினைகள், பசியின்மைவாயுத்தொல்லைவிக்கல்என்னும் சிக்கல்க ளிலிருந்து விடுபடவும் பனங்கட்டி உதவி நிற்கி றது.எலும்பினை மூடி எங்களுக்கு அழகினைத் தருவதாக அமைந்தி ருப்பதுதான் மேல் தோலாகும். வயதாகும் பொழுது  பெரும்பாலான வர்களுக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு அதன் பளபளப்பும் குறைவதைப் பார்க்கமுடிகிறது.பனங்கட்டியை உணவில் சேர்த்து வந் தால் இப்படியான சுருக்கமோ அல்லது பளபளப்புக் குறைவோ ஏற் படாமல் தடுத்திடலாம் என்று எங்களின் மருத்துவம் சுட்டிக் காட் டுவதை யாவரும் மனமிருத்தல் அவசியமானாதாகும்.ஊட்டச் சத்துக் களின் உறைவிடமாகப் பனங்கட்டி அமைந்திருப்பதால் அனைவரும் நாளாந்த உணவில் எப்படியாவது பனங்கட்டியைச் சேர்த்துக் கொள் ளுவது அவசியமானதாகும். அதனால் ஆரோக்கியமும் அமையும். அழகும் வந்து அமையும்.

  பனங்கட்டி என்பது எங்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே அமைந்திருந்திருக்கிறது.தமிழ் நாட்டிலே குழந்தைகள் கீழே விழுந்து தலையில் அடிபட்டு வீங்கிப்போனால் " கருப்பட்டி தண்டில வீங்கி ட்டே " என்று தாயார் சொல்லுவது வழக்கமான வார்த்தையாய் இரு க்கிறது என்று அறிகின்றோம். சாமர்த்திய மாகயாராவது ஏதாவது செய்தால் பேசினால் " போடு கருப்பட்டி " என்று  தமிழ்நாட்டில் பெரி யவர்கள் பாராட்டியுள்ளார்கள் என்றும் அறிய முடிகிறது. பண்டிகை  விரதநாட்கள்மழைக்காலங்கள்ஆனியாடிச்சாரல் கூதல் காற்று நாட்களில் கருப்பட்டிக் ( பனங்கட்டி ) காப்பியை அருந்தினார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  தமிழ்நாட்டில் இடம் பெறும் சிறு தெய்வ வழிபாடுகளின் பொழுது அங்கு  படையல் வைக்கப்படுவது வழக்கமாகும். அப்படிப் படையில் வைக்கும் பொழுது கருப்பட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் எள் ளுப் புண்ணாகும் படையலாக்கப்பட்டிருக்கிறது.எள்ளையும் கருப்பட் டியையும் சேர்த்து உரலிட்டுத் துவைத்து எடுப்பதும் வழமையாய் இருந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இது நடைமுறையில் இன்றும் இருக்கிறது என்பதையும் கருத்திருத்த வேண்டும்.பானாக்கம் என் பதை நம்மில் பலரும் அறிவோம். திருவிழாக் காலங்களில் பந்தல்கள் பல இடங்களிலே போடுவார்கள்.அங்கு வருகின்ற அடியார்களின் தாகம் தீர்த்திட புளிப்பும் இனிப்புமான பானத்தை கொடுத்து மகிழ்வா ர்கள். அப்படிக் கொடுக்கப்படும் பானந்தான் " பானாக்கம் ". இதில் இனிப்புச் சுவையினைக் கொடுப்பதற்கு எங்கள் பனங்கட்டிதான்  இருக்கிறது என்பதுதான் முக்கிய செய்தியாகும்.

    

 " வைத்தியர்கள் என்னைப் பனை வெல்லம் சாப்பிடச் சொல்லியி ருக்கிறார் கள்.நான் தினமும் பனை வெல்லம் சாப்பிட்டும் வருகி றேன். பனை மரங்கள் இருக்குமிடமெல்லாம் சுலபமாகப் பனை வெல்லம் தயாரிக்கலாம். வறுமையை இந்த நாட்டிலிருந்து விரட்டு வதற்கு இது வழியாகும். "

 

சீனிக்குப் பதிலாகப் பனங்கட்டியையே உபயோக்கிக்கலாம். உண் மையிற் சிலர் பனங்கட்டியையே அதிகம் விரும்புகிறார்கள்.கள் இற க்குவதற்குப் பதிலாக பதநீரை இறக்குகினால் நாட்டில் சீனித் தட்டு ப்பாடு உண்டாகாது.ஏழைகளுக்கு. மிகவும் குறைந்த விலையில் பனங்கட்டி கிடைக்கும். "

 

என்று தேசபிதா காந்திமகான் தெரிவித்திருக்கும் கருத்தினை கவ னத்தில் கொள்ளுதல் அனைவருக்கும் அவசியமாகும்,

  பனை வெல்லத்தின் முக்கியத்தவத்தை நன்குணர்ந்த தேசபிதா காந்தியடிகளுடன் இணைந்து விநோபாஜிஇராஜகோபாலாச்சாரியார்கஜானன் நாய்க்மேத்தாகுமரப்பாகலேஸ்வரர் ஆகிய இந்தியப் பெரி யோர்களும் பனைவெல்லத்தினை உயர்வாக எண்ணி அதன் உற்பத் தியினைப் பெருக்க வேண்டும் என்று தம்முடைய மனக்கருத்தினை உரத்த குரலில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கிய மாகும்.

  பனைபற்றி பல கருத்துக்களை எழுத்தில் வடித்திருப்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு.கே . சம்பந்தம். அவர் பனைவெல்லம் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதையும் கருத்திருத்துவது நலமாகும்.

 

    "  தற்பொழுது பனைவெல்லத்தின் ஊட்டச்சத்தை உணர்ந்து பனை வெல்லம் சாப்பிடாதவர்கள் கூட இதை உபயோக்கிக்க ஆரம்பித்து விட்டனர்.நல்ல விலையும் இதற்குக் கிடைக்கிறது. "

 

No comments: