ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய 35வது கலை விழா 27/03/2022


ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் தனது 35வது கலை விழாவினை கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 27ம் திகதி சிறப்பாகக் 
கொண்டாடியது.  இக்கலைவிழாவை மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தி வைத்தவர் திருமதி நிர்மலா தயாளன்  ஆவார்.

இக்கலைவிழாவில் மாணவர்கள் தத்தம் வகுப்பாசிரியர்களின்

வழிகாட்டலிலும், 
பெற்ற  பயிற்சியிலும்  
தமது திறமைகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.  
பிரதம விருந்தினராக திரு திருமதி கருணாசலதேவா அவர்கள் பங்கேற்று  இக்கலை விழாவை சிறப்பித்தார்கள்.சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றவர்கள்:

Mr. Mark Joseph Codure - MP and Minister for Multiculturalism, and Minister for Seniors

Mr Jason Yat-Sen Li MP for Strathfield

Mrs.. Lucas Johns President of NSW Federation of Community Language Schools

Mr. Saravanan Srinivasan President of NSW Federation of Tamil Schools

30 வருடங்கள் ஆசிரியர் சேவையை முடித்த திரு சரவணமுத்து தேவராசா, திருமதி கனகேஸ்வரி வடிவேற்பிள்ளை மற்றும் 25 வருடங்கள் சேவையை முடித்த திருமதி கனகேஸ்வரி வனதேவா ஆகியோர் இக்கலைவிழாவில்  கௌரவிக்கப்பட்டார்கள்.

 


 


1 comment:

Anonymous said...

35 ஆண்டுகளாக சிட்னியில் தமிழ் மொழி காக்கும் பள்ளியாக இயங்கும் ஹோம்புஷ் தமிழ் பள்ளியின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.அயராது உழைக்கும் ஆசிரியர்கள் நிர்வாக உறுப்பினர்களுக்கு வந்தனங்கள்!