கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஆறு ]


 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா

                                       

    பனையின் பாளையிலிருந்து வடியும் நீர் நல்ல இதமாயும்


பதமாயும் இருப்பதால்த்தான் அதனைப் " பதனீர் " என்று அழைத்தார்களோ தெரியவில்லை. உண்மையிலே பதனீர் தெங்கின் இளநீரைவிட வித்தியாசமான சுவை யினை உடையதாகும்.பனையிலே வருகின்ற பாளைகளைப் பதப்படுத்திச் சீவியே பதனீர் பெறப்படுகிறது. பதனீரைப் பெறுவதற்குரிய மண்முட்டிகளுக்குச் சுண்ணாம்பு பூசப்படும். சுண்ணாம்பு கலப்பதால் சுவையான அமுதமான பருகும் பானமாகப் பதனீர் வந்து அமைகிறது.இதனைக் கருப்பணி என்றும் அழைப்பார்கள்.

  பதனீரின் பயன்பாடு பழைய காலத்திலேயே ஆரம்பித்துவிட்டதாக அறிய முடிகிறது.அக்கால அரசர்கள் விரும்பியுண்ட பானமாகப் பதனீர் விளங்கி இருக்கிறது.அதனை உறிதிப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

 

                     தீதறு நற்குல சேகரனைப் பார்த்து

                          சென்று வனத்திற் பனை யமிர்தங்

                          கோதற நீயிறக்கி கொடுவா வென்று

                          கூறியனுபினன் மின்னரசே

 

அரசன் மட்டுமல்லாது அக்காலத்தில் அனைவருக்கும் விருப்பமான பானமாகப் பதனீர் இருந்திருக்கிறது என்றும் அறிந்திடக்கூடியதாக இருக்கிறது. புளிக்கா நிலையில்


இருக்கின்ற பொழுது - பனையின் பாளையின் சாறு வெறுக்கத்தக்கதாக இருக்கவில்லை. அதே சாறு புளித்த நிலையிலே அது கள்ளு என்னும் பெயருக்கு உரித்தாகும் காரணத்தால் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கும் நிலை அதற்கு ஏற்படலாயிற்று.ஒரு நிலையில் யாவரும் விரும்பி ஏற்கும் பானமாகவும் இன்னொரு நிலையில் பலராலும் கண்டிக்கத்தக்க ஒரு பானமாகவும் - பனையின் பாளையின் சாறு காணப்படுகிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.சுவையான பானமாக இருக்கும் பதனீர் பல பெயர்களை தாங்கி நிற்கிறது, சுரம்அமிர்தம்புதுமதுதெள்ள முதுபசுநருகருப்பநீர்கருப் பணி, என பல பெயர்களுக்கு உரித்தாகி நிற்கிறது.ஆண்பனைப் பாளைகளிலிருந்து எடுக்கின்ற பதனீருக்கு       " சோமபானம் " என்றும் பெண்பனையின் பாளையிலிருந்து எடுக்கின்ற பதனீருக்கு " சுரபானம் " என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் என்றும் அறிந்திடக்கூடியாத இருக்கிறது.

  பனையின் பாளையிலிருந்து எடுக்கப்படுகின்ற சாறானது சுவையினைப் பயக்கவேண்டும் என்பதற்காக எங் களின் முன்னோர் கையாண்ட தொழில் நுட்பமாகவே - பாளைகளுடன் இணைக்கப்படும் மண்முட்டிகளில் சுண்ணாம்பினைப் பூசிய பாங்கினை நோக்கிட வேண்டியிருக்கிறது. சுண்ணாம்பின் காரத்தன்மையானது மென் மையாய் இருக்கும் பாளையின் சாறானது காற்றிலே காணப்படுகின்ற நொதியங்களால் ஏற்படும் தாக்கத்திலி ருந்து தாக்கப்படாமல் தடுத்துப்பாது காக்கும் காவலனாகவே செயற்படுகிறது எனலாம். இப்படிச் செயற்படுவ தால்த்தான் புளிப்பற்ற சுவையான பானம் கிடைக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய செய்தியாகும்.

  பதனீரை வெறும் சுவையான பானந்தானே என்று மட்டும் எண்ணி விடக் கூடாதுபதனீரானது பல மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமானதாகும். சுண்ணாம்பு பூசப்படுவதால் பதனீருடன் சுண்ணாம்புச் சத்து நன்றாகவே கலக்கிறது. இதனால் இது


எலும்பு தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும்எலும்புத் தேய்மானத்தினைக் கட்டுக்குள் வைப்பதாகவும் இருக்கிறது.கோடை காலங்களில்  ஏற்படும் உடற்சூட்டைத் தணிப்பதோடு சூட்டினால் ஏற்படுகின்ற கொப்புளங்க ளைத் தீர்க்கவும் உதவி நிற்கிறது. பழைய கஞ்சியில் பதனீரி னைக் கலந்து தடவி வந்தால் ஆறாத புண்களும் ஆறிவிடும் என்று சொல் லப்படுகிறது,சிறு நீர் சம்பந்தமான நோய்களுக்குச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. சிறிநீரை நன்றாகவே வெளியேற்றவும் உதவியாய் இருக்கி றது.சமிபாடு அடையாமல் இருக்கும் நிலையில் பதனீர் கைகொடுத்து அஜீ ரணத்தை அகற்றியே நிற்கிறதாம்.மலச்சிக்கலென்பது பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும். அந்த மலச்சிக்கலையே பதனீர் அகற்றியே விடுகிற தாம்.  

    நோயாளிகளுக்கு மருந்தாகப் பதனீர் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கது. கண்பார்வைக் குறைபாட்டினை நீக்கிடவும்இளம் பிள்ளைகளுக்குக் காதிலிருந்து சீழ் வடிதலை மாற்றிடவும்தோலில் ஏற்படும் வியாதிகளை குணப்படுத்தவும்


பதனீர் உதவி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.அத்துடன் அமையாது மேலும் பல நோய்களுக்கான மருந்தாகவும் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். கண்ணோய்வாயில் ஏற்படும் புண்சொறிசிரங்குதடிமல்காசநோய்என்பனவற்றுக்கும் நல்ல மருந்தாகப் பதனீர் அமைகிறதாம். இரத்தத்தில் காணப்படுகின்ற செஞ்சீவ அணுக்களின் விருத்திக்கும் உதவியும் நிற்கிறதாம். என்பது நல்ல செய்தியாய் இருக்கிறதல்லவா !

  மேலும் பல நோய்களுக்கு உகந்த மருந்துப் பொருளாகவும் பதனீர் அமைகிறது.மேக நோயுள்ளவர்கள் ஒருமண்டலம் பதனீரை அருந்துவதால் நல்ல சுகத்தை அடைந்துவிட முடியுமாம்.பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள் ளைப்படுதல் பிரச்சினையினையும் பதனீர் குண்மாக்குகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.இவற்றைவிட - இரத்தக் கடுப்புமூலச்சூடுவயிற்றுப் புண்வாய்ப்புண்யாவற்றையும் நீக்குகிறதாம் பதனீர். உடல் மெலிந்தோர் பதனீரைக் குடித்து வந்தால் ஆரோக்கியமான உடல் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

 

           

            பனையுணவும் பண்டமெலாம் பரமாகாரம்

                        பாளைதரும் நீர் குருட்டுப் பார்வை நீக்கும்

                        தினையளவு ஐயமிலைச் செவிடு போக்கும்

                        தீராத தேமல் சொறி சிரங்கை யோட்டும்

     

                        வினைதருமா சலக்கடுப்பை வெட்டை நோயை

                        வீக்கமழல் வாதமதை வெள்ளை யூற்றைத்

                        தனையுணவாய்க் கொள்ளுபவன் தனைச்சாராது

                        தற்காக்கு மதையுண்மின் தரணி யோரே

 

பனை இராசன் நாடகத்தில் வருகின்ற இப்பாடலும் பதனீரின் மருத்துவப் பயன்பட்டினுக்குச் சான்றினை அளிப்பதாகவும் அமைவதையும் நோக்கிட லாம்.

 பதனீரானது சுவையான பானமாக அமைவதோடு மருத்துவ பானமாகவும் அமைகிறது என்பதுதான் மிகவும் முக்கியமான கருத்தாகும். முகப்பொலி வினைத் தருவதோடு களைப்பினையும் போக்கி நிற்கிறது பதனீர்.

 

சுண்ணமிட்டு முட்டிகட்டி தூக்கியெடுக் கும்பதனீர்

நண்ணுபசி தாக நலிக்குக்குகாண் - பெண்ணணங்கே

சோம்பல் திமிரகலுஞ் சூடுடம்பை விட்டேகும்

ஆம்பலமுந் தண்ணென் றகங்குளிரும் - ஆம்பிரத்திரத்தில்

காய்சீவி யிட்டுக் கருப்பனீர் காசினியோர்

வாயுருசி யாகவே மாந்திடுவர் - தூய

பயறிட்டுக் காய்ச்சிப் பருகுதலு முண்டு

நயமாகு நன்மிளகிட் டுண்ணச் - செயிர்நீர்

 

என்று எங்களின் நவாலியூர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் பதனீரைப் பற்றிய தன்னுடைய மனக்கருத்தினைச் செந்தமிழ்க் கவிதையாக்கித் தந்தி ருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

 

  பனைமரம் எங்கள் அடையாளம்

      பனையைக் காப்பது நம்கடமை

      பனைமரம் எங்கள் தாயாகும்

      பதனீர் என்பது தாய்ப்பாலே "

 

என்று ஒரு கவிஞர் பதனீரினை வியந்து பாடுகிறார்.

 

  " கற்பகதருவைச் சார்ந்த காகமும் அமிர்த முண்ணும்

      விற்பன விவேகமுள்ள வேந்தரைச் சார்ந்தோர் வாழ்வார் "

 

என்னும் பாடலில்  , பனையினை நம்பிவாழும் காகங்களுக்கு அமிர்தமாக இருக்கின்ற பதனீரைப் பனை கொடுக்கிறதாம் என்னும் செய்தி சொல்லப்ப ட்டிருக்கிறது. பதனீர் என்பதை அமிர்தம் என்று இப்புலவர் எடுத்துக் காட்டு வது நோக்கத்தக்கதாகும். பதநீரைக் கொடுத்து பனை காகங்களைப் பாதுகாப்பதுபோல நாட்டு மக்களையும் மன்னனானவன் காத்திடல் வேண்டும் என் பதுதான் இப்பாடலின் கருத்தாகும். பனையின் செயலை மன்னனுடன் காட் டிய புலவரின்


நோக்கானது - பனையின் மீதும், பதனீர் மீதும் கொண்ட ஆராக் காதலையும்பனையின் பதனீரின் மகத்துவத்தையும் காட்டி நிற்ப தாகவே தென்படுகிறதல்லவா !

பதநீரில் பனிரெண்டு தொடக்கம் பதின்மூன்று விகிதம் சக்கரை சத்து ,  அத்துடன் அமினோ அமிலங்கள்விட்டமின் பிகனிம உப்புக்கள்இரும்புச்சத்து,    சுண்ணாம்புச்சத்துதயமைன்பிளாவின்,புரதம் ஆகியன அடங்கி இருக்கி ன்றன என்பது நோக்கத்தக்கதாகும்.

  பதநீரை இந்தியாஇலங்கைஆபிரிக்காமலேசியாஇந்தோனேஷியா,தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிகளவில் பயன்படுத்துகின்றன என்றும் அறியக் கூடியதாக இருக்கிறது. பதநீரானது மகாராஷ்டிராவில் நீரா எனவும் குஜ ராத்தில் நீரர் எனவும்ஆந்திரப்பிரதேசத்தில் கவுடு எனவும்கர்நாட காவில் இடிகா அல்லது பில்லவர் எனவும்ஒரிசாவில் நீரா எனவும் பெயரிட்டு அழைக்கப்படுகிறதாம் என்று அறிந்திட முடிகிறது,ஒவ்வொரு பகுதியிலும் பல பெயரினைப் பெற்று அங்குள்ளவர்களால் விரும்பி அருந் தும் பானமாகப் பதனீர் விளங்குகிறது என்பதும் இனிப்பான செய்தியாக இருக்கிறதல்லவா !

  பதனீர் பனையில் இருந்து இறக்கப்பட்டாலும் அவ்வாறு இறக்கப்படும் பதனீரானது ஒரே சுவையாக இருக்க மாட்டாதாம்.கட்டுப்பாளைப் பதனீர்அலகுப் பாளைப் பதனீர்பெண்பனையின் பதனீர்நுங்குப் பதனீர் என்று நான்கு வகையினதாக இப்பதனீர் அமைகிறதாம். இப்படி அமைகின்ற நிலையில் அவற்றில் காணப்படுகின்ற இனிப்புச் சுவையும் மாறுபட்டதா கவே காணப்படுமாம் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாய் அமைகிறத ல்லவா ! பதனீரை அருந்தும் நிலைலும் அது இரண்டாக அமைகிறதாம். உடல் நலத்தையும் நல்ல வீரியத்தை யும் நாடி நிற்போர் அருந்தும் பதனீ ரானது " சுரபானம் " என்னும் பெயரினைப் பெற்று நிற்கிறது. இவ்வகை யான பதனீரானது பெண்பனையிலிருந்து கிடைக்ககிறது என்பதும் நோக்கத் தக்கதாகும். ஆண்பனையிலிருந்து கிடைக்கும் பதனீரானது " சோமபானம் " என்னும் பெயரினைப் பெற்றி நிற்கிறது. இந்த வகையான பதனீரை அருந்த வதால் ஆன்மசுத்தி ஏற்படுகிறதாம் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று ம் அறியக்கூடியதாக இருக்கிறது.

  100 மில்லி அளவான பதனீரை எடுத்து  அதில் எப்படியான சத்துக்கள் எந்த அளவில் இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

 

சர்க்கரை - 998 மி. கிராம்

புரதம்      - 350 கிராம்

ஈரத்தனமை - 86 கிராம்

சாம்பல்        - 0. 53 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 14.3 மி.கிராம்

பாஸ்பரஸ்        - 10 மி.கிராம்

இரும்புச் சத்து  - 0.30 கிராம்

அஸ்கோபிக் அமிலம்  - 15.74 மி. கிராம்

தயாமின்          - 82.3 மி. கிராம்

ரிப்போ பிளாவின்  44. 4 மி.கிராம்

நியாசின்        - 674.4 மி. கிராம்

 

அதன் படி இவைகள் அனைத்துமே பதனீரில் இருப்பதாய் கண்டறிந்திரு க்கிறார்கள். இதனால் பதனீரைப் பக்குவமாகவே பார்க்க வேண்டும். அதனைப் பருகுவதால் நல்ல பலன்கள் பல கிடைக்கின்றன என்பதையும் கருத்திருத்துதலும் வேண்டும்.

 

No comments: