வாழ்வெமக்கு வசந்தம் ஆகியே அமையும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியாதோல்விகளை தோள்மீது ஏற்றிவிடாதீர்
தொடர் கதையாய் தோல்விகளை ஆக்கிவிடாதீர்
வாழ்நாளில் வேதனைகள் வந்தபடி இருக்கும்
வாசலில்லா வீட்டைப் பார்க்க முடியாது 

மகிழ்ச்சியினை எண்னி மணமுடிப்பார் வாழ்வில்
மணமுடிப்பா ரெல்லாம் மகிழ்ச்சியுறார் வாழ்வில்
மணமுடித்த ததனால் நின்றுவிடா வாழ்வில்
மணமுடித்தல் தினமும் நடக்கிறது வாழ்வில் 

ஏமாற்றும் பலரும் வந்திடுவார் நாளும்
ஏமாறும் பலரும் இருந்திடுவார்  தினமும்
ஏமாற்றும் நிலைமை தொடர்ந்த படியிருக்கும்
இதுவாழ்வில் என்றும் ஒட்டியே இருக்கும்

எதிர்பார்ப்பை எண்ணி ஏங்கிநிற்கும் காலம்
எதிர்வலைகள் உள்ளே புகுந்துவிடும் நாளும்
ஏக்கமது மனதைத் தாக்கிவிடும் பாங்கு
எல்லோர்க்கும் வாழ்வில் அமைந்துதா னிருக்கும் 

வெற்றியினை நோக்கி விரைந்து விடவேண்டும்
அச்சமெனு  முணர்வை அறுத்தெறிய வேண்டும்
மனமதனில் துணிவை நிறைத்து விடவேண்டும்
வாழ்வெமக்கு வசந்தம் ஆகியே அமையும் 

Attachments area

No comments: