மணித்துளியில் மன்பதையின் அழிவைத் தடுக்க மன்றுளாடி கண்திறந்து அருளிட வேண்டும்



 பல்வைத்திய கலாநிதி   பாரதி இளமுருகனார்

                                                                                                  

 

 


இரஸ்யா  --  உக்றேன் போர் 



கட்டுப்பாட் டில்என்றோ இருந்த நகர்கள்

                                  கைவிட்டுப் போகவிட்ட இரஸ்யாவும் செல்வம்

                         கொட்டித்தரும் அவற்றையென்றும் விடமன மின்றிக்

                              கோரப்போர் ஒன்றையுக் கிறேன்மீது தொடுத்து

    கிட்டவுள்ள அவற்றைத்தான் மீட்டெ டுக்கக்

                                      கிளர்த்தெழுந்து முழுமூச்சாய்ப் போர்தொ டுத்துத்

          தட்டிநின்று கேட்பவர்கள் பலர்எதிர்த் தபோதும்

                                    தயங்கிடாது குண்டுமழை பொழியக் கண்டோம்!

 


 நேற்ரோவுடன் உக்ரேனும் அணிசே ருமென்ற

                            நிலைவருமுன் பெரும்படையை உரூசியா உக்ரேன்

  நாற்றிசையும் குவித்துப்போர் தொடுத்த தம்மா!

           நகரத்துள் அகப்பட்ட உரூசியரை உக்ரேனும்

 கூற்றுவனாய்க் கொன்றுகுவித் தழிக்கு தம்மா

    கூடிவாழும் இரஸ்சியரை மீட்டுக் காக்கச்

                                                 சீற்றமொடு  அதிவிரைவாய்ப் சிறந்த வீரச்

                      சேனைதனைக்   குவித்துப்போர் செய்கின் றதுவே!

 


      இணக்கப்பேச் சுவார்த்தைக்கு இடந்தான் வருமோ?

                    இடைக்காலப் போர்நிறுத்தம் சாத்திய மாமோ?

     கணத்திற்பே ரழிவுதரும் அணுக்குண் டுகளைக்

             காத்திருந்து பரீட்சிக்கும் காலமேற் படுமோ?

      பிணக்குவியல் ஏற்படாதோர்  நிலைமை காணப்

            பிறங்குசிவத் திருமுறைகள் கிறங்கப் பாட

       மணித்துளியில் மன்பதையின் அழிவைத்  தடுக்க

                   மன்றுளாடி கண்திறந்து அருளிட வேண்டும்;!





சண்டைவிட்டுச் சமாதானம் செய்வீ ரென்று

  சத்தமிடும் பலநாட்டின் எதிர்ப்பை மீறிக்

குண்டுகளை வானின்று குறிவைத் தையோ

                       கொடூரமாய்ப் பொழிந்தழிக்க இரஸ்சி யாப்பெருங்;

கண்டமின்று நடத்திவரும் கடும்போ ரதனால்

               கலங்குமுக்கிரேன் மக்களுயிர் காக்க வேண்டி

அண்டமதில் நடமியற்றும்  அந்தி வண்ணன்

                                   அடிக்கமலம் வணங்கிடுவோம்! வேறென் செயலாம்?.

 


ஆர்க்கேனும் அஞ்சிடாத இரஸ்சிய நாடு

          அத்துமீறி உக்ரேனை எவர்தா னுமெதிர்

பார்த்திடாத படிதாக்கித் தென்கி ழக்கில்

                       பரந்தஅணு ஆலைதனைக் கைப்பற் றியந்தோ

       போர்க்குற்றம் புரிந்திட்ட பாதகச் செயலைப்

              புவிதனிலே சமாதானம் காக்கும் படையும்

              ஏற்காது என்செயுமோ பொறுத்துப் பார்ப்போம்!

                                                  


இறைவன்திரு விளையாடலில் இதுவும்  ஒன்றோ?

 


                     

1 comment:

Kumaraswamipillai said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான். ஈழப்போரில் உக்றேனின் பங்கை மறக்கமுடியுமா?
நன்றியுடன்
குமாரசுவாமிப்பிள்ளை