நாவலரின் சிந்தனையில் மலர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் சேர்.பொன்னம்பலம் இராமநாதன்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா   
                                   

 

 கனவு காண்பது என்பது யாவருக்கும்

விருப்பமானதுதான்.அந்தக் கனவுக ளும் நல்ல கனவாக அமை ந்துவிட்டால் அதுவே பேரானந்தமாகிவிடும்.  " கனவு காணுங்கள் " என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அண்மையில் மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் " கனவு காணுங்கள் " என் பதை வலியுறுத்திச் சொல்லி நின்றார்.கனவு என்பது உண்மையா ? பொ ய்யா ? என்று ஆராய்ச்சிக்குள் போகவே வேண்டாம். நல்ல கனவுகளைக் கண்டால் அது நல்லதுதானே ! நல்லவர்கள் , வல்லவர்கள், ஞானிகள், கனவு கண்டார்கள். அவர் களின் கனவு தங்களின் நலன் சார்ந்தாக அமையாமல் சமூக நலன் சார்ந்ததாகவே காணப்பட்டது.அப்படி அவர்கள் கண்ட கனவுகள் , கனவாகமட்டுமே அமைந்துவிடாது நனவாயும் ஆகியே விட்டிருக்கிறது என்பது தான் முக்கியமாகும். அவர்களின் கனவுகள் பலித்து அதனால் மக்களின் வாழ்வில் நல்ல பல விளைவுகள் பெருகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

 நல்லைநகர் நாவலர் பெருமானை நாம் மறந்துவிட


முடியாது.அவரின் வருகை சமூகத்துக்குப் பெருவெ ளிச்சத்தைக் காட்டியது எனலாம். குறிப்பாகச் சைவ உலகுக்கும் , தமிழ்ப் பாரம்பரியத்துக்கும்உரமாய் , வரமாய் வாய்த்தது என்பதை எவருமே மறுத்துரைத்திட முடியாது. அந்த அளவுக்கு இம்மண்ணில் வாழ்ந் தகாலம் முழுவதும் அப்பெருமகனார் அளப்பரிய பணிகளை ஆற்றி நின்றார்.அதனால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே பார்க்கப்படுகிறார். அவரால் ஒரு புதுப்பாண்பாடு, ஒரு புதுக்கலாசாரமே தோற்றம் பெற்றிரு க்கிறது. அவராற்றிய பணிகள் வரலாற்றில் பெரும் பொக்கிஷமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 அந்தப் பெருமகன் சிந்தையில் ஒருவர் மலர்கிறார். நாவலர் பெருமான் பிறந்து இருபத்து ஒன்பது ஆண்டுகளின் பின் பிறந்தவர்தான் அவர். தனக்குப்பின் அதாவது - கால் நூற்றாண்டின் பின் பிறந்தவரை நாவலரின் கை சுட்டிக்காட்டுகின்றது. தனக்குப்பின் தன்னுடைய கனவுகளைத் தொடர்ந்து நனவாக்கிடும் வல்லமை அவரிடம் இருப்பதாகாவே நாவலர் பெருமான் முழு நம்பிக்கை வைத்துவிடுகிறார்.யுகபுஷரான நாவலர் பெருமானின் நம்பிக்கை நட்சத்திரம் யார் தெரியுமா - அவர்தான் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்.

  நாவலர் பெருமான் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.அரசியல்


செல்வாக்கு அற்ற குடும்பம். ஆடம் பரத்தை நாடாத குடும்பம். அன்னிய கலாசார மோகத்தினுள் ஆட்பட்டுக் கொள்ளாத குடும்பம்.சைவமும், தமிழும்நிறைந்த குடும்பம்,யாழ்ப்பாண மண்ணையே நிரந்தரமாக்கிக் கொண்ட குடும்பம். ஆசார அனுட் டானங்களை அகம் நிறைத்த குடும்பம். மேல் நாட்டு உடைகளை அணியாக் குடும்பம்.ஆனால் நல்ல சிந்தனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்த குடும்பம்.

பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பம் அரசியல் செல்வாக்குமிக்க குடும்பம். வசதிகள் நிறைந்த குடும்பம். அன்னிய கலாசாரத்தை அணைத்து நின்ற குடும்பம்.ஆங்கிலேய நடையுடையினை பாவனை யை விரும்பி நின்ற குடும்பம். ஒரு உயர்ந்த மேட்டுக் குடியாக பணபலமும் செல்வாக்கும் மிக்கதாக - இலங்கையின் தலைநகராம் கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட குடும்பம்.நினைத்ததை நினைத்துவு டன் ஆற்றி நிற்கும் அத்தனை வசதிகளும் ஆளணிகளும் கொண்ட  குடும்பம் எனலாம்.யாழ்மண்ணின் அடியாக அமைந்தாலும் - யாழ்மண்ணில் காலூன்றாதிருந்த குடும்பம் என்றும் சொல்லலாம்.

நாவலர் பெருமானின் குடும்பத்துக்கும் அவர் வாழ்ந்த சூழலுக்கும் ,அவரின் சிந்தனை செயற்பாடுகளுக் கும் ஒத்துவராத


ஒரு குடும்பமாய்  இருந்த பொழுதும் - நாவலர் பெருமான் சிந்தையில் நம்பிக்கை நட்சத்திரமாக எப்படி பொன்னம்பலம் இராமநாதன் மலர்ந்தார் என்பது ஆச்சரியமான விடமாய் இருக்கி றதல்லவா ! இதைத்தான் தூரநோக்குப் பார்வை எனலாம். நாவலர் பெருமான் ஒரு யுகபுருஷராய் அமைந்தவர். இறையருளை மனம் நிறைத்தவர். நல்லவற்றையே நாளும் எண்ணி அதன்வழி நடப்பவர். அவரின் சிந்தனையில் இராமநாதன் அவர்கள் ; சைவத்துக்கும் தமிழுக்கும் நிச்சயமாகப் பெருந்து ணையாகி நிற்பார் என்னும் எண்ணம் எழுந்தே நின்றது. நாவலர் பெருமானின் தீர்க்க தரிசனம் அவரின் பின்னால் - பொன்னம்பலம் இராமநாதனால் மெய்ப்பிக்கப்படது என்பதை எவருமே மறுத்துரைத்துவிடல் முடியாது அல்லவா !

  22 -05-1879 மே மாதம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் யாழ்ப்பாணத்தின் கல்விமான்களும்உயர்மட்டத்தினருமாய் ஏறக் குறைய 3500 கூடியிருந்தார்கள். அங்கு அந்தப் பெரிய சபை கூடியதற்கான முக்கிய காரணம் - சேர்.முத்துக்குமாரசாமியின்  மறைவினால் ஏற்பட்ட சட்டசபைப் பிரதிநிதித்துவத் துவக்கு யார் மிகவும் பொருத்தமானவர் என்னும் முக்கிய தீர்மானத்தை எடுப்பதுதான். அத்தனை பேரும் நிறைந்திருந்த கூட்டத்தில் துணிந்து ஆணித்தரமாக நாவலர் பெருமான் ஒருவரை முன்மொழிந்தார். அப்படி முன் மொழிவதற்கு அவர் பகர்ந்த மொழியினை உற்று நோக்கினால் நாவலரின் தீர்க்க தரிசன த்தை யாவரும் மனமிருத்திக் கொள்ளுவார்கள்.

 

நமக்கு முன்பு இன்றுள்ள கடமை தகைசான்ற இந்தப் பெரு மகனின் சேர்,முத்துக்குமாரசாமியின் ) இடத்துக்குத் தகுதிவாய்ந்த ஒருவர் யார் என்று காண்பதே. சட்டசபையிலே எமது பிரதிநிதியாக அமர்பவர் தமிழராயிருத்தல் வேண்டும்.அவர் சிறந்த கல்விமானாய் விளங்கவேண்டும்.உயர்ந்த கொள்கையுடைய வராதல் வேண்டும். நல்ல செல்வ வசதி பெற்றிருத்தல் வேண்டும். உயர்ந்த சமூகத்தில் பழகக்கூடிய நல்ல வாய்ப்பு உடையவராதல் வேண்டும். தமது கருத்துக்களிற் சுதந்திரராயும்எந்தச் சூழலிலும் எவ்வித அச்சமுமின்றி அக்கருத்துக்களை வெளியிட வல்லவராயுமிருத்தல் வேண்டும். இவையாவிலும் மேலாக அவர் ஆள்வோரதும் ஆளப்படுவோரதும் மதிப்பிற்கு உரியவராதல் இன்றியமையாதது.பெரியோர்களே பொறுமையோடு ஆராய்ந்தால் மேற்  கூறிய பண்புகழ்யாவும் பொருந்தியவர் பொன்னம்பல முதலியார் இராமநாதன் அவர்களே ! ஐயத்துக்கு இடமே இல்லை ..... இங்குள்ளவர்களில் எவரும் திரு.இராமநாதனி ல் நம்பிக்கையற்றவராய் இரார் என்பது என் நம்பிக்கை "

 என்று நாவலர் கூறிய வார்த்தையினை அனைவருமே ஏற்று பொன்னம்பலம் இராமநாதனுக்கே தங்களின் ஆதரவை வழங்கினார்கள் என்பது வரலாறாகும். பொன்னம்பலம் இராமநாதனைப் பற்றிய சிந்தனை நாவலரின் உள்ளத்தில் எந்த அளவு பதிந்திருந்தது என்பதும்  அவர்மீதான எதிர்கால நம்பிக்கை யின் திடமும் இதனால் தெள்ளெனத் தெளிவாகி நிற்கிறதல்லவா !

    நாவலரின் இறுதிக் காலத்தில்த்தான் இராமநாதனைச் சட்டசபைக்குத் தெரிவுசெய்யும் கூட்டம் நடந்தது. இராமநாதன் சட்டசபையில் அமரும் பொழுது நாவலர் பெருமான் அதனைக் காணமுடியாமல் காலன் செய்துவிட்டான்.ஆனால் நாவலரின் சித்தம் நிறைவேறியது.

  நாவலர் பெருமானின் கைகாட்டியது பொன்னம்பலம் இராமநாதனை. அவர் நாவலரின் பின் சிறந்த வொரு கைகாட்டியாய் தமிழ்ச் சமூககத்துக்கும்சைவத்துக்கும் அமைந்தார் என்பதுதான் உண்மை யெனலாம்.நாவலரைப் போல் நடையுடை பாவனையிலிருக்கா விட்டாலும் நாவலரின் மனவோட் டத்தைப் பிரதிபலிப்பவராக விளங்கினார் என்பதை மறுத்துரைத்துவிட முடியாது.அப்படி அவர் பிரதி பலிக்கும் வேளை தன்காலத்துக்கு உகந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதும் கருத்தி ருத்த வேண்டியதேயாகும். நாவலர் பெருமான் காலத்துக்கும் இராமநாதன் காலத்துக்கும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் வந்துவிட்டன. காலத்தின் தேவைகருதி இராமநாதன் அவர்கள் செயலாற்றும் நிலை உருவானாலும்  , நாவலரின் கருக்களை மாற்றிவிட முயலவில்லை என்பது முக்கியமாகும்.சைவத்தை அடித்தளமாக்கிய நாவலரின் கருவினைச் சிதைக்கும் வகையில் இராமநாதன் எதனையுமே ஆற்றவி ல்லை என்பதுதான் மிகவும் முக்கியமான விடயமாகும்.அவரின் அனைத்துப் பணிகளும் சைவத்தை முன்னிறுத்தியே அமைந்திருந்தன என்பதைக் கருத்திருத்தல் முக்கியமாகும்.

  நாவலருக்கு வாய்க்காத பல வாய்ப்புகள் இராமநாதன் அவர்களுக்கு வாய்த்திருந்தது. நாவலர் ஆங்கிலம் கற்றார். வடமொழியும் கற்றார். தமிழில் பெரும் பாண்டித்யமும் பெற்றிருந்தார். அத்துடன் அவர் நின்று விடுகிறார். அரச பதவிகளில் அவர் அமரவில்லை. அவரின் பயணம் தமிழ் நாட்டுடனும் யாழ்ப்பாண த்துடனுமே அமைந்து விடுகிறதுஆனால் இராமநாதன் தமிழோடு பல மொழிகளில் ஆற்றலுடையவராக மிளிர்கிறார்.அரசாங்கத்தின் உயர்பதிகளை அலங்கரிக்கின்றார். அத்துடன் மிகச்சிறந்த சட்ட அறிஞராயும்  , நியாயவாதியாயும் பிரகாசிக்கின்றார். பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்கின்றார்.பல அமைப்புக்களி லெல்லாம் அங்கம் வகிக்கின்றார். தலைமையும் வகிக்கின்றார். நாவலரால் கை காட்டப்பட்ட இராமநாத னின் சிந்தனையும்செயற்பாடும் நாவலரின் நம்பிக்கையினை வலுவாக்கியே நின்றது என்பதுதான் மறுக் கமுடிதாத உண்மை எனலாம்.

  பல்கலைக்கழகம் பற்றிய சிந்தனை இராமநாதன் உள்ளத்தில் உதயமாகிறது.அதுவும் இந்துப் பல்கலை க்கழகம் என்பதுதான் அவரின் அகத்தில் எழுந்த கருவாகும்.அந்தக் கருவானது நாவலருக்கு உதயமாகாது போனமைக்குக் காரணம் நாவலர் காலத்து நிலைமையே எனலாம். நாவலர் கால நிலைமை மாற்றம டையும் காலமே இராமநாதன் அவர்களின் காலமாக அமைகிறது. அதனால் காலத்துக்கு ஏற்றவகையில் அவரின் சிந்தனையானது பல்கலைக்கழகம் என்னும் பாங்கில் சிந்திக்கத் தூண்டுகிறது.அப்படிப் புதுச் சிந் தனை எழுந்தாலும் நாவலரின் கருவான சமயம் என்பது மட்டும் மாறவில்லை என்பதுதான் முக்கிய மாகும். இங்குதான் நாவலரின் தீர்க்க தரிசனம் நிற்கிறது எனலாம்.

  நாவலருக்குப் பொருளாதார வசதிகள் வாய்க்கவில்லை. ஆனால் மனம் மட்டும் தாராளமாய் இருந்தது. நாவலர் சைவத்தமிழ் பாடசாலைகளைக் காலங்கருதி அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. நாவலரின் காலத்தில் அன்னியரின் செல்வாக்கால் அவர்களின் மதமும்அது தொடர்பான் கல்வியும்அக்கல்வி யினைப் போதிக்க அரசின் ஆதரவுடன் பாடசாலைகள் தோற்றம் பெறும் நிலை காணப்பட்டது. பாரம்பரி யமான சைவமும் தமிழும் கலாசாரமும் தன்னிலை இழந்துவிடாமல் காப்பாற்றும் காவலனாய் நாவலர் எழும் கட்டாயம் அக்காலம் ஏற்படுத்தியது. அதனால் அவர் காலங்கருதியே தன்னுடைய,  கல்விச்சிந்த னைகளை பாடசாலைகள் நிறுவுவதை எல்லாம் கருத்தில் இருத்தினார். இதனால் அவர் மனதில் பல்கலைக்கழகம் என்னும் எண்ணக்கருவுக்குச் சாத்தியம் இல்லாமல் போயிருக்கலாம் என்றுதான்  எண்ண வேண்டி இருக்கிறது.

  இராமநாதனின் அடிப்படை நாவலர் சிந்தனையாய் இருந்தாலும் அவரின் செயற்பாடுகள் அனைத்துமே அவரின் காலத்தைக் கருத்தில மர்த்தியே வெளி வந்திருக்கின்றன.பெண் கல்வியில் இராமநாதன் பெரிதும் விருப்புடையவாரய் காணப்பட்டார். பெண்களை வீட்டுக் குள்ளேயே வைத்திருப்பதை அவர் மனது ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று கருதவேண்டி இருக்கிறது,இதனால் பெண்களும் சமூகத்தில் வந்து தலை நிமிர்ந்து நிற்கவேண்டும் என்னும் சீர்திருத்த எண்ணம் அவரின் சிந்தனையில் பளிச்சிட்டது. அந்தக் கல்வியும் ஒழுக்கத்துடன் சமயம் இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்று அவர் கருதினார். இவ்வாறு கருதியமை பொன்னமபலம் இராமநாதனின் மிகச் சிறந்த சமூகச் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும்.

  " நிமிர்ந்த நடை நேர்கொண்ட  பார்வை - எதற்கும் அஞ்ஞாத ஞானச் செருக்கும் கொண்டவளாய் " பெண்கள் வரவேண்டும் என்று பாரதியார் எண்ணினார். அவர்களைப் புதுமைப் பெண்கள் என்றே அவர் மனங் கொண்டார். பாரதியைப் போலவே இராமநாதனும் பெண்கள் விழித்து வெளிவர வேண்டும் .அவர்கள் கல்வியைப் பெறுவது இன்றியமையாதது என்று எண்ணினார். அவரின் எண்ணம் மிகவும் காத்திரமான எண்ணம் அல்லவா! அந்த எண்ணத்தை எண்ணிய நிலையில் நின்றுவிடாது அதற்குச் செயல் வடிவமும் கொடுத்தார் அவர். அவரின் அத்தகைய மிகப்பெரிய சமூகச் சிந்தனையின் வடிவமாக எழுந்ததுதான் 1913 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் தோற்றம் பெற்ற மருதனார்மடம் மகளிர் கல்லூரி யாகும்.இன்று அக்கல்லூரி இராமநாதன் மகளிர் கல்லூரி என்னும் மகுடத்துடன் கல்வி கற்றிட விளையும் பெண்களுக்கெல்லாம் பெரும் பொக்கிஷமாய் திகழ்கிறது எனலாம்.

  பெண்களை மிகவும் பெருமையுடன் எண்ணி  , முதலில் அவர்களுக்கே கல்லூரியினை நிறுவிய இராமநாதன் அவர்கள் - ஆண்களுக்கென ஒரு கல்லூரியினை எட்டு ஆண்டுகளின் பின்னர் அதாவது 1921 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் ஆரம்பிக்கிறார்.எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளை மனமிருத்தி பரமேஸ்வராக் கல்லூரி என்னும் மகுடத்துடன் அந்தக் கல்விச் சாலை அமைகிறது. பரம்பொருளை மனமெண்ணி ஆரம்பிக்கப் படியால்த்தான் - பரமேஸ்வராக் கல்லூரி " பல்கலைக்கழகமாய் " மலர்ச்சி பெற்றிருக்கிறது என்று நினைத்திட வைக்கிறதல்லவா ! நாவலர் பெருமானின் கந்தபுராண கலாசாரம் உருவான யாழ்ப்பாண மண்ணில் அவர் கை காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் பொன்னம்பலம் இராமநாத னால் உருவாக்கப்பட்ட கல்லூரி " பல்கலைக்கழகமாய் " மலர்ந்திருக்கிறதென்றால் - நாவலரின் நம்பிக்கை ஒளிவிட்டு நிற்கிறது என்றுதானே அர்த்தமாகும்.

 இராமநாதனின் -  இந்துப்பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்னும் கனவு முழுமையாக நிறை வேறாவிடினும் - அவரால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி பல்கலைக்கழகமாய் ஓங்கி உயர்ந்து நிற்கிறது என்பது அவர் கண்ட கனவு ஓரளவு நிறை வேறியிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரின் உள்ளத்துள் எழுந்த " இந்து " என்னும் எண்ணக்கருவினைச் சுமக்கும் வகையில் அவரின் கல்லூரியில் உருவான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் - இந்துநாகரிகத்துறையும் சைவசித்தாந்தத்துறையும் சமஸ்கிருதத் துறையும் சிறப்புடன் இடம்பெற்று இயங்கி வருகின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதேயாகும். உலகின் எந்தப் பல்கலைக்கழங்களிலும் அமையாத ஒரு புதுத்துறைதான் " இந்துநாகரித்துறை " . பொன்னம்பலம் இராமநாதனின் கனவு ஓரளவுக்கு நிறைவேறியே இருக்கிறது என்றும் சொல்லக் கூடியதாக இருக்கிறதல்லவா !

  இந்துப்பண்பாடுநாகரிகம்சைவசித்தாந்தம்வடமொழிஅத்துடன் யோக நெறியினையும் மாணவர்கள் கற்றிடல் வேண்டும் என்று இராமநாதன் அவர்கள்  எண்ணினார்கள்.அதனையே இலட்சியமாகவும் அவர் கொண்டிருந்தார் என்றும் அறிகின்றோம். அவரின் இலட்சியத்தை நிறைவேற்றும் நிலை நிச்சயமாக யாழ்ப்பாணப்பாணப் பல்கலைக்கழத்தில் ஏற்படும். அதற்கான எண்ணப் பாங்கினை உடையவர்கள் நிறையப்பேர் பல்கலைக்கழகத்திலேயே இருக்கிறார்கள் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

  ஆண்களுக்காக அமைக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மலர்ந் ததுபோல் - பெண்களுக்காக அமைக்கப்பட இராமநாதன் கல்லூரியின் பகுதியில் யாழ்பல்கலைக்கழக த்தின் இசைத்துறை இயங்குவதும் பெருமைக்குரிய விடயமாய் அமைகிறது அல்லவா ! இராமநாதன் என்னும் பெயரினை உச்சரித்தால் உயர்கல்விப் பீடங்கள்தான் கண்முன்னே காட்சி கொடுக்கின்றன என்பதை எவருமே மறுத்துரைத்துவிடமுடியாது.

ஆரம்பத்தில் ஆங்கில நாகரிகத்தில் மூழ்கி இருந்தாலும் பின்னர் அவரின் வாழ்க்கை ஆன்மீகத்துள் மூழ்கத் தொடங்கியே விடுகிறது.யோகம்தியானம் என்பவற்றில் மிக்க நாட்டமுடையவராக அவர் இருந்தார்.பாடசாலைகளில் அவற்றை மாணவருக்கு அளித்திடுவதற்கும் அவர் வழிசமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

   ஆங்கிலத்தில் கற்று ,ஆங்கிலத்தில் புலமைபெற்று பல அரச உயர்பதவிகளை அலங்கரித்த  , பொன்ன ம்பலம் இராமநாதன் - ஆன் மீகத்தை அகமிருத்தி அதனை வாழ்வாக்கி வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். சமய தத்துவங்களை அவர் நன்கு விளங்கியிருந்தார். சைவசித்தாந்தத்தோடு ஏனைய மதங்களின் தத்துவங்களையும் அறிந்தவராய் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அப்படி அறிந்த படியால்த்தான் சைவசித்தாத்தம் அவருக்கு அகத்தில் இறுக்கமாய் அமர்ந்திருக்க வேண் டும். சைவசித்தாந்த சமாஜத்தின் முதல்மாநாடு 1906 ஆம் ஆண்டில் இடம் பெற்ற வேளை இவர் தலைமை தாங்கினார் என்றால் சைவசித்தாந்தத்தில் இவருக்கு நிறைந்திருந்த புலமையும் , நாட்டமுமேயாகும். சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தைக் கையிலெடுத்து வெளிநாட் டில் வித்திடச் செய்ததுபோல் - இராமநாதன் கையில் எடுத்தது சைவசித்தாந்தத்தையாகும்,இராமநானும் வெளிநாடுகளில் சைவசி த்தாந்த த்தை விளக்கிப் உரைகள் ஆற்றிநின்றார் என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

  நாவலர் பெருமான் கை காட்டிய இராமநாதன் என்னும் பெருமகனாரும் நாவலர் வழியிலே தமிழையும் சைவத்தையும் மனமிருத்தினார்,கல்விச் சாலைகள் நிறுவுவதிலும் முன்னின்றார்.தமிழ் இலக்கணத்திலும் வித்தகராயும் விளங்கியிருக்கிறார்.அத்துடன் வடமொழியிலும் ஆற்றலுடையவராகவும் விள ங்கியிருக்கி றார். அவரின் " செந்தமிழ் இலக்கணம் " நூல், " பகவத்கீதா " மொழிபெயர்ப்பு நூல் என்பன நாவலர் வழி யில் பயணித்தார் என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்,

  யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் அமைந்திருக்கும் பரமேஸ்வரன் ஆலயம் தலைநகராம் கொழும்பில் அமைந்திருக்கும் பொன்னம்பலவாணேஸ்வர ஆலயம் இராமநாதனின் ஆன்மீகத்துக்கு முத்திரை எனலாம்அத்துடன் தமிழ்நாட்டிலும் கொடைக்கானலில் குறிஞ்சியாண்டார் ஆலயமும் இவரை நினைக்க வைக்கும் விதமாய் இருக்கிறது எனலாம்,

  அரசியலிலும் கால்பதித்தார். ஆன்மீகத்திலும் கால்பதித்தார். கல்வித்துறையிலும் தனக்கென ஒரு இடத் தினைப் பெற்று அத்துறையில் ஆழமாய் கால் பதித்தார். சமூகத்திலும் சிறந்த நல்லதொரு ஆளுமை யாகவும் கால் பதித்தார். நாவலர் பெருமான் ஒரு யுகபுருஷர் என்றால் - அவர் சிந்தனையில் மலர்ந்த பொன்னம்பலம் இராமநாதன் அவகளும் ஈழமணித்திருநாட்டின் தவப்புதல்வர் என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்தத் தவப்புதல்வரான பொன்னம்பலம் இராமநாதன் மிகவும் பொருத்தமாகவே நாவரின் நம்பிக்கை நடசத்திரமாய் பிரகாசித்து நின்றார் என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். 

சிறுவர் சிறுமியர்க்குக் கல்வியிரு கூடம் 

நிறுவினான் பேர்என்றும் நிற்கும் - பெறும்பெயரார்
சென்னைக்குப் பச்சையப்பன் சீர்யாழ்ப்பா ணத்துக்கு
மன்னும் இராமநா தன்

No comments: