ஈழத்தின் மிக முக்கியமானதொரு கலை, இலக்கியப் படைப்பாளி சில்லையூர் செல்வராசன் அவர்கள் நம்மை விட்டு மறைந்து இன்று ஒக்டோபர் 14, 2020 யுடன் 25 ஆண்டுகளாகிறது.
ஈழத்துப் படைப்பாளிகள் பலர் ஒரு குறிப்பிட்ட இயங்கு நிலைக்குள் இல்லாது பன்முகத் தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதற்கு சில்லையூர் செல்வராசன் வாழ்ந்து காட்டிய உதாரணம்.
தான்தோன்றிக் கவிராயர் என்ற புனை பெயரில் கவிஞராகவும், வானொலிப் படைப்பாளியாகவும், நாடக, திரைப்பட நடிகராகவும் மிளிர்ந்தவர். ஈழத்துத் திரைப்படங்களில் தமிழ், சிங்களத்தோடு புலத்துக்கு வெளியே ஆங்கிலப் படங்களிலும் நடித்தவர்.
இலங்கை வானொலி யுகத்தின் பொற்காலம் சில்லையூர் செல்வராசன் பெயர் தாங்கும்.
ஈழத்து நூலகத்தில்
சில்லையூர் செல்வராசன் கவிதைகள்
தணியாத தாகம் (வானொலி நாடகமாகிப் பின் திரைப் பிரதி ஆனது)
செல்வராசன் நினைவு மலர்
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
அன்னாரின் 25 வது ஆண்டு நினைவலைகளாக
அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் - எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய பகிர்வை வாசிக்க
இந்த ஆக்கத்தின் ஒலி வடிவத்தை ஆக்கி இங்கே பகிர்கிறேன்
No comments:
Post a Comment