நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்குத் தேர்வான முதல் ஈழத்துப் பெண் - கானா பிரபா

 .

நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்குத் தேர்வான முதல் ஈழத்துப் பெண் இலங்கை அரச பயங்கரவாத்தால் கொல்லப்பட்ட ஊடகரால் மனித உரிமை நோக்கிய பயணத்தில்

வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) நியூசிலாந்து நாட்டில் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வட மேற்கு ஆக்லாந்து தொகுதியில் வென்றார். இவர் மனித உரிமைகள் சட்டத்தரணியாக, மனித உரிமைகள் அமைப்பின் மூத்த தலைமை அதிகாரியாகவும் இருந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள்.
வனுஷி தனது 5 வது வயதில் நியூசிலாந்து நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர்.
தனது உறவினர் பத்திரிகையாளராக இருந்த போது 1990 இல் இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டதைத் தொடந்து தனது மனித உரிமைக்கான பயணத்தைப் பதின்ம வயதில் தொடங்கினேன் என்றும் New Zealand Board of Amnesty இல் தனது முதல் சட்டவாளர் பயணத்தைத் தொடங்கினேன் என்றும் Amnesty’s Global Board இல் தொடர்ந்து தேர்வானேன் என்றும் ஒரு பேட்டியில் வனுஷி முன்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் குறிப்பிட்ட உறவினர் ரிச்சார்ட் டி செய்சா என்ற பிரபல ஊடகர். அவரின் கொலை குறித்து விக்கிப்பீடியாவில் வந்த பகிர்வு.
ரிச்சர்ட் இலங்கையின் பெரும்பான்மை சிங்களத் தந்தைக்கும் சிறுபான்மை தமிழ்த் தாய்க்கும் பிறந்தவராவார். இவர் கொழும்பில் பிறந்து வளர்ந்தார். ரிச்சர்ட் பிரபல ஊடகவியலாளரும் மலேசியாவில் வசித்தவருமான மாணிக்கசோதி சரவணமுத்துவின் மகளும், பிரபல மருத்துவருமான மனோராணி சரவணமுத்துவின் மகன் ஆவார்.
ரிச்சர்ட் தனது தாயாருடன் வெலிகடவத்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்து வந்தார். 1990 பெப்ரவரி 17/18இரவில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர்.


தாயார் உடனடியாக வெலிக்கடை காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டார். அடுத்த நாள் பெப்ரவரி 19 1990, ரிச்சர்ட்டின் உடல் கொழும்பில் இருந்து தெற்கே 12மைல் தூரத்தில் மொரட்டுவை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டிருந்தார் அவரது வாயெலும்பில் முறிவு காணப்பட்டது. ரிச்சர்ட்டின் உடலை அவரது நண்பரான, 2006 இல் கடத்தி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அடையாளம் காட்டினார்.
மனோராணி சரவணமுத்துவின் தன் மகனின் மரணத்தின் பின்னர் இவர் மகன்களை இழந்த தாயார் என்ற சங்கத்தை ஆரம்பித்து மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார்.
ரிச்சார்ட் டி சொய்சா குறித்து விக்கிப்பீடியாவில்.
மேலும் நேசம் சரவணமுத்து இலங்கை அரச சபைக்குத் தேர்வான முதல் தமிழ்ப் பெண்ணின் பூட்டியின் மகளாவார்.
நேசம் சரவணமுத்து குறித்து விக்கிப்பீடியாவில் உள்ள பகிர்வைக் கீழே தருகிறேன்.
லூயிசா நேசம் சரவணமுத்து (Luisa Naysum Saravanamuttu, 1897 - சனவரி 19, 1941) இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் ஆவார். 1932, 1936 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் இவர் கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
நேசத்தின் கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு வடக்குத் தொகுதியிலிருந்து இலங்கை அரசாங்க சபைக்கு 1931 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் கொழும்பு மாநகரசபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தெரிவு செல்லுபடியற்றது எனவும் ஏழு ஆண்டுகளுக்குச் இவரது குடியியல் உரிமை ரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்து 1932 மே 30ந் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்து போட்டியிட்டார்.
இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்துவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, சட்டசபையில் அப்போதைய உதவிச் சபாநாயகர் எஃப். ஏ. ஒபயசேகராவும் முக்கியமானவர்கள். நேசம் சரவணமுத்துவை எதிர்த்துப் போட்டியிட்டவர் எச். எம். பீரிஸ். நேசம் சரவணமுத்து 8681 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.
இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை நேசம் சரவணமுத்துவுக்கு ஏற்பட்டது. அவரது தேர்தல் செல்லுபடியற்றது எனத் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பாகியது. எனினும் அவரது குடியியல் உரிமை பறிக்கப்படாததால் இரண்டாவது இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார்.
இரண்டாவது இடைத் தேர்தல் 1932 நவம்பர் 12 ஆம் நாள் நடைபெற்றது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எச். வி. காசிச்செட்டியிலும் பார்க்க 8106 மேலதிக வாக்குகள் பெற்று நேசம் சரவணமுத்து தெரிவானார்.
இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் 1936ம் ஆண்டு நடைபெற்றது. நேசம் சரவணமுத்து மீண்டும் வெற்றி பெற்றார்.
நேசம் சரவணமுத்து சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து 1941 ஜனவரி 19ந் திகதி தனது நாற்பத்தி நான்காவது வயதில் இறந்தார். கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு மேயராக இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டதற்குப் பதினோராவது நாள் இவரது இறப்பு நிகழ்ந்தது.
சரவணமுத்து தமிழ் யூனியன் துடுப்பாட்ட, தடகளக் கழகத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.[ 1948 முதல் 51 வரை இக்கழகத்தின் தலைவராக இருந்து பணியாற்றினார்.[கழகத்துக்கான அரங்கம் ஒன்றை நிறுவினார். கொழும்பு ஓவல் என அழைக்கப்படும் இவ்வரங்கத்திகு பாக்கியசோதியின் நினைவாக 1977 ஆம் ஆண்டில் பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது. பி. சரா விருது என்ற துடுப்பாட்டத் தொடர் 1949 முதல் 1982 வரை விளையாடப்பட்டு வந்தது. சரவணமுத்து 1937 முதல் 1950 வரை இலங்கைத் துடுப்பாட்டக் கழகத்தின் தலைவராகவும், 1949 முதல் 1950 வரை இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் முதலாவது தலைவராகவும் இருந்து பணியாற்றினார். (விக்கிப்பீடியா)

No comments: