சுவீட் சிஸ்ட்டி : விடிவெள்ளி - ச.சுந்தரதாஸ்


நட்சத்திர நடிகர்களாக திகள்பவர்களுக்கு  அவ்வப்போது சொந்தத்தில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உதிப்பது உண்டு.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும்  இத்தகைய ஆசை உருவானது. அதன் பலனாக தனது மகன்களான பிரபு, 
 ராம்குமார் இருவருடைய பெயரிலும் பிரபுராம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் தயாரிப்பாளராக தன்னுடைய நீண்ட கால நண்பர் முத்துமாணிக்கம் என்பவரை அமர்த்திக் கொண்டார் சிவாஜி. 

பிரபுராம் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் விடிவெள்ளி இதற்கு கதை வசனம் எழுதியதோடுடைரக்சனும் செய்தவர்  பிரபல இயக்குனர் ஸ்ரீதர். ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் படமும்  இதுவாகும். இதன்மூலம் கல்யாண பரிசு படத்தில் பிரபலமான சரோஜாதேவி இதில் கதாநாயகியாக சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார். 

மற்றுமொரு ஜோடியாக பாலாஜியும், எம்என் ராஜமும் நடித்தார்கள். நகைச்சுவை யோடியாக  டி ஆர் ராமச்சந்திரன், பத்மினி பிரியதர்சினி நடித்தார்கள்.

 தன் தங்கையை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து தர விழைக்கின்றான் சந்துரு. வைர நெக்லஸ் ஒன்றை அன்பளிப்பாக திருமணத்தின்போது போட்டால் திருமணம் நடக்கும் என்று மணமகன் பெற்றோர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள். வசதி இல்லாத சந்துரு வேறு வழியின்றி ஒரு யுவதியிடமிருந்து வைர நெக்லஸை திருடுகிறார்.  அதனை சீதனமாக தங்கைக்கு போடுகிறார்.

 சில காலம் கழித்து தங்கையின் கழுத்தில் இருந்து வைர நெக்லஸ் தவறி கீழே விழுந்து விடுகிறது. அதன் பதக்கம் திறந்து கொள்ள அதனுள் ஒரு ஆடவனின் படம் தெரிகிறது. தங்கையின் கணவன் இது யார் என்று கேட்க அவளோ தெரியாது என்று கூறுகிறாள். ஆனால் அவள் கணவனோ அவளை சந்தேகிக்கிறான், அவளை அவள் பெற்றோர் வீட்டிற்கே  அனுப்புகிறான்.  தங்கை திரும்பியதை பார்த்து சந்துரு அதிர்ச்சி அடைகிறான்.  




இப்படி போகும் படத்தின் கதை சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பில் வெளிவந்தது. அவருடன் கனவானாக  வரும் எஸ் வி ரங்காராவும் தன் பங்களிப்பை வழங்கியிருந்தார். ஸ்ரீதர்  படத்தில் மட்டும் அம்மா வேடத்தில் நடிக்கும் சாந்தகுமாரியும்  இதில் நடித்திருந்தார்.  சரோஜாதேவி அழகாக தோன்றி நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார்.



 படத்தின் ஒளிப்பதிவை ஏ வின்சென்ட் மேற்கொண்டிருந்தார், படத்துக்கு இசையமைத்தவர் பிரபல பாடகர் எ எம் ராஜா இவருடைய இசையில் கண்ணதாசன் மருதகாசியும்  இயற்றிய "இடை கையிரண்டில் ஆடும் ", எந்நாளும் வாழ்விலே பண்ணோடு பிறந்தது ராகம் , கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை ஆகிய பாடல்கள் இதமாக அமைந்தன. இசையமைத்த ராஜாவே சிவாஜிக்கு பாடியிருந்தார்.  ஸ்ரீதரின் படங்களில் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருக்கும் இதில் டிஆர் ராமச்சந்திரநும் , பத்மினி பிரியதர்ஷினியும்  அதனை வழங்கியிருந்தார்கள் . படத்தின் உச்ச காட்சியும் தொடர்ந்து வரும் இறுதிக் காட்சிஜையும் ஸ்ரீதர்  புதுமையாக எடுப்பதாக எண்ணி எடுத்திருந்ததால்,  ரசிகர்களுக்கு அது புரியாது குழப்பமே மிஞ்சியது,  இதனால் படம் பெறவேண்டிய முழு வெற்றியை பெறத் தவறியது. ஆனாலும் பின்னர் இதே சாயலில் வந்த ஒரு கொடியில் இரு மலர்கள்,   தங்கைக்கோர் கீதம் இதரு  படமும் ரசிகர்களை கவர்ந்தன.



No comments: