உலகச் செய்திகள்


‘மிஷன் சக்தி’ சோதனையில் இந்தியா சாதனை:பிரதமர் மோடி

 மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணி மேற்கொள்ள  இராணுவத்துக்கு அனுமதி 

அமெரிக்க படையினரின் வான்வழித்தாக்குதல்:ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலி



‘மிஷன் சக்தி’ சோதனையில் இந்தியா சாதனை:பிரதமர் மோடி

27/03/2019 விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நாடாத்தியுள்ளதாக பிரதமர் மோடி இன்று மக்கள் மத்தியில் இடம்பெற்ற உரையாடலில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்றுவரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. 
தற்போது இச் சோதனையை இந்தியா 4 வது நாடாக வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச் சோதனையும்,முழுமையாக இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே செய்ததாகவும்,எவ்விதமான சர்வதேச விதிமுறைகளையும் மீறி நடத்தப்படவில்லையெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











 மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணி மேற்கொள்ள  இராணுவத்துக்கு அனுமதி 

26/03/2019 மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணியை மேற்கொள்வதற்கு அமெரிக்க இராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக அமெரிக்காவுக்ககுள்  குடியேறுவதை தடுக்க ட்ரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் பிரகாரம்,ரூபா 7 ஆயிரம் கோடி அதாவது (1 பில்லியன் டாலர்) செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான அவசர நிலையை ட்ரம்ப் பிரகடனம் செய்தார். 
அதை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் 92 கிலோமீற்றர் நீளம், 5.5 மீற்றர் உயரத்துக்கு சுவர் கட்டவும், அங்கு வீதி மற்றும் மின் வசதி செய்யும்படி இராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்து இருந்தது.
அதனை பென்டகன் செயல் தலைவர் பாட்ரிக் ‌ஷனாகன் ஏற்றுக் கொண்டார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க இராணுவ துறையின் என்ஜினீயர்களுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் திட்டம் தயாரிப்பது, அதை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 









அமெரிக்க படையினரின் வான்வழித்தாக்குதல்:ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பலி

26/03/2019 ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில்,ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. 
இந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த 30 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உட்பட  மொத்தம் 13 பேர் கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அங்கு அதிகளவிலான குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










No comments: