மானத்தை மறைக்க அன்று
மரவுரி தரித்து வாழ்ந்தான்
வாழ்ந்த அக்கால மெல்லாம்
மரமதை அண்டி நின்றான்
மரத்தையே துணையாய் கொண்டான்
ஈரமே இல்லா இப்போ
இருக்கிறான் மனிதன் இன்று
காட்டிலே வாழ்ந்த போது
கல்வியை கண்டான் இல்லை
காட்டிலே வாழ்ந்த போது
காசினை நினைத்தான் இல்லை
காட்டினை விட்டு விட்டு
வாழ்க்கையை கண்ட போது
காட்டினை வெட்டி வெட்டி
கருணையை அழித்தே விட்டான்
வளர்த்து நின்ற கடா
மார்பினில் உதைத்தாற் போல
வாழ் வளித்த காடதனை
மனம் விரும்பி அழிக்கின்றான்
மரம் என்னும் வரமதனை
மண்ணை விட்டே அழிக்கின்ற
மனிதனது மனம் நினைக்க
மரம் மெளனம் ஆகிறது
இயற்கை தந்த வரமாக
எழுந்து நிற்கும் காடதனை
எண்ணி எண்ணி பார்க்காமல்
இரக்க மின்றி அழிக்கின்றான்
நாகரிகம் எனும் பெயரால்
நமைக் காக்கும் அரணான
நம்மரத்தை நம் காட்டை
நாம் அழித்தல் முறையாமோ
No comments:
Post a Comment