26/12/2019  சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15 ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இன்று காலை 7.30மணியளவில் இடம்பெற்றது.
சிவகுகநாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சிவஶ்ரீ, பிரபாகரகுருக்கள், மயூரக்குருக்கள், திவாகரகுருக்கள், இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் குகனேஸ்வரசர்மா, ஆலயக்குருமார்கள், பரிபாலன சபையினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.