அமிர்த வருஷினி - உன்னத நோக்குடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இராப்போசனம் - சனி: - 04.01.20 - மாலை 6மணி


கானகந் தீய்ந்து கருகி அழித்தவற்றை
தானத் தால் மீண்டுந் தளிர்ப்பிக்க - மானத்
தமிழர்கள் ஒன்றாகத் தந்த அறமே
அமிர்த வருஷினி யாம்!
                                                                                                                          -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் (இலங்கை)-


உளம் நிறைந்தீர்,
அவுஸ்திரேலியாவில் - குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்,
இயற்கையையும்,
மக்களையும்,
விலங்குகளையும்,
மனைகளையும்,
காக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அமைப்பினருக்கு,
சிரமேற்கொண்ட வணக்கங்களைச் செலுத்தி,
அவர்களின் பணிகளுக்கு நிதியால் உதவும் முகமாக,
அமைக்கப்பட்டுள்ள அமிர்த வருஷினி இராப்போசனத்திற்கு,
அன்போடு அழைக்கின்றனர்,
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.
இது அவர்கள் நிகழ்வல்ல. 
எம்தமிழ்ச் சமூகத்தின் நிகழ்வு.

அன்போடும் அருளோடும்
தமிழன்பர்களோடு இணைந்து
நன்றி நவில விரும்புகின்றனர் இளைஞர்கள்.
இணைவோம் வாரீர்!


இசைக் கலைஞர் அகிலன் சிவானந்தனின் இசையாராதனைhttps://www.facebook.com/kambankazhagam.australia/videos/2497134763747713/


இசைக் கலைஞர் பரத் சுந்தரின் சமர்ப்பணம்
No comments: