-மீரா ஸ்ரீனிவாசன்
28/10/2019 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.
தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் முற்போக்கு சக்திகள் கடுமையாகப் பிளவடைந்திருக்கின்றன. கோத்தாபயவை ஜனாதிபதியாக வரவிடக்கூடாது என்பதில் இந்த சக்திகள் உறுதிபூண்டு நிற்கின்ற போதிலும் எவ்வாறு எதிர்ப்பது என்பதில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியாமல் இருக்கின்றன. போர்க்கால பாதுகாப்பு செயலாளரான 70 வயதான கோத்தாபய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரராவார்.
சிங்கள பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிலங்கையில் ராஜபக்ஷ சகோதரர்களுக்குப் பிரிவினைவாத விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த போர் வெற்றி வீரர்கள் என்றதொரு செல்வாக்கு உண்டு. கோத்தாபயவின் தற்போதைய பரந்த ஆதரவுத்தளத்தில் (துறைசார் நிபுணர்களும், வர்த்தக சமூகமும் உள்ளடங்கலாக) அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய பாரம்பரிய அரசியல்வாதியல்லாத செயற்திறன்மிக்க நிர்வாகியாக நோக்கப்படுகின்றார்.
ஆனால் ராஜபக்ஷாக்களை சகல இலங்கையர்களும் நேசிக்கின்றார்கள் என்று இல்லை. நாட்டின் சனத்தொகையில் ஒரு கணிசமான பிரிவினருக்கு, குறிப்பாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவருக்கு எதிரான சிங்களவர்களுக்கும் கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எதேச்சதிகார ஆட்சியையும் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரங்களையும் கொண்ட பழையயுகம் திரும்பி வந்துவிடுமென்ற அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. 2005 – 2015 வரையான ஒரு தசாப்தகால ராஜபக்ஷ ஆட்சியின் போது போர்க்காலகட்டத்திலும் அதற்கு உடனடியாகப் பின்னரும் இடம்பெற்ற கொலைகளுக்கும்ரூபவ் ஆட்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் (இவற்றை கோத்தாபய அடியோடு நிராகரிக்கின்றார்) கோத்தாபய  பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களது 10 ஆண்டுகால ஆட்சியில் எதிர்க்கருத்துக்கள் சகித்துக் கொள்ளப்படவில்லை. கடுமையான அரச ஒடுக்குமுறை நிலவியது.
கோத்தாபயவின் பிரதான போட்டியாளரான சஜித் பிரேமதாஸ ஏழைகளுக்காகப் பாடுபட்ட (குறிப்பாக வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத்திட்டங்கள்) ஒரு தலைவரென்று பெரும்பாலான சிங்களவர்களால் மதிக்கப்படுகின்ற காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஏகபுத்திரராவார்;. தந்தை பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக ஜே.வி.பியின் இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சிக் காலகட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் பல இலங்கையர்கள் மனதில் பதிந்திருக்கிறது.
ஆனால் மகன் பிரேமதாஸவின் வாழ்க்கை பெருமளவிற்கு சர்ச்சைகள் இல்லாததாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருக்கும் 52 வயதான அவர் இதுவரையில் தேசிய பிரச்சினைகள் குறித்துப் பேசியது அரிது. 
கடுமையாகப் போராடி வேட்பாளரானார் 
ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருக்கும் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸ தலைமைத்துவத்தினால் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மையத்தில் மாற்றமொன்றை சஜித்தின் ஆதரவாளர்கள் வேண்டிநிற்கின்றார்கள். கொழும்பு மேல்மட்ட சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நோக்கப்படுகின்ற அதேவேளை, கட்சியின் அடிமட்டத்தில் புத்தெழுச்சியை உருவாக்கிய ஒருவராகப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நோக்கப்படுகின்றார். இருந்தாலும் அவர் இன்னும் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தின் ஓரங்கமாகவே இருக்கின்றார். 2015 ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதாகவும்ரூபவ் நல்லாட்சியைக் கொண்டுவருவதாகவும் வாக்குறுதியளித்து தேர்தல்களில் வென்ற ஒரு அரசாங்கம் பலமுனைகளிலும் ஏமாற்றம் தருவதாகவே அமைந்திருந்தது.
தாராள போக்குடையவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட இந்த அரசாங்கத்தின் உறுதியான ஆதரவாளர்களாக விளங்கியவர்கள் அதன் பதவிக்காலத்தின் இறுதியில் முற்றிலுத் வெறுப்படைந்திருக்கிறார்கள். கடந்த வருடத்தைய அரசியலமைப்பு சதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே பிரதான பொறுப்பு என்று குற்றஞ்சாட்டப்படும் போதிலும் கூட்டரசாங்கத்தில் ஐ.தே.கவின் பிரிவும் ஆதரவாளர்களுக்கு ஏற்க செயற்படாமல் ஏமாற்றத்தைக் கொடுத்தார். பொறுப்புக்கூறலையும்ரூபவ் நீதியையும் உறுதிப்படுத்துவதாக சூளுரைத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் சொன்னபடி நடக்கவில்லை. 2015 இல் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிக்குப் பொறுப்புக்கூறத் தவறியமை தொடக்கம் ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது இடம்பெற்ற பாரதூரமான குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தத் தவறியது வரையான சம்பவங்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள், அது உறுதியளித்த நல்லாட்சியை நிறுவுவதற்கான அரசியல் துணிவையும் நம்பிக்கையையும் கொண்டதாக இருக்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப வெளிக்காட்டிது என்றாலும் நல்லிணக்க செயற்பாடுகளைப் பொறுத்தவரை ஓரளவிற்கு முன்னேற்றங்களை அரசு கண்டது. அத்துடன் ஜனநாயகவெளி ஒன்றையும் திறந்துவிட்டது.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பதிலீடு செய்யப்பட்டுவிட்ட தேசியவாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிரிடையான தாராளவாத மாற்றுச்சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சி விளங்கியது. ஆனால் சஜித் பிரேமதாஸவின் செய்தி அதற்கு முரணானதாக இருக்கிறது. அவருடைய சொந்த நிலைப்பாடுகளும், கட்சியின் நிலைப்பாடுகளும் அந்த முரண்பாட்டை வெளிக்காட்டி நிற்கின்றன. அவர் தனது தேர்தல் பிரசாரங்களில் பாடசாலை சிறுவர்களுக்கு இலவச மதியபோசண உணவு,கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உட்பட பல்வேறு நலன்புரித்திட்டங்களைக் கொண்டுவரப்போவதாக உறுதியளித்து வருகின்றார்.
வர்த்தக சமூகத்தின் மத்தியில் பேசும்போது திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்பதாக உறுதி கூறுகின்ற சஜித் பிரேமதாஸரூபவ் முரண்பாடான அணுகுமுறைகள் எவ்வாறு இசைந்துபோக முடியும் என்பதைத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார் இல்லை. கோத்தாபயவைப் போன்றே போர்வெற்றி வீரர்களைப் பாதுகாக்கப்போவதா சூளுரைக்கும் பிரேமதாஸ மரணதண்டனையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்ற போதிலும் கூட, அதனை ஆதரித்துக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கையர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட தொனிப்பொருளான தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதாக இரு பிரதான வேட்பாளர்களும் உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள். ஆனால் இருவரில் எவருமே இதுவரையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கான (கணிசமான அதிகாரப் பரவலாக்கல் உள்ளடங்கலாக) ஒரு முற்போக்கான நோக்கை முன்வைப்பதாக இல்லை.
இத்தகைய பின்புலத்திலேயே முற்போக்கு சக்திகள் கோத்தாபயவை எப்பாடுபட்டும் தடுத்து நிறுத்துவதற்காக சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிற்கும் (நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மாறிமாறி அதிகாரத்திலிருந்துவரும்) இரு பிரதான கட்சிகளுக்கும் ஒரு மாற்றாக புதிய கலாசாரமொன்றை உருவாக்குவதற்கு உதவியாக ஜே.வி.பி போன்ற மூன்றாவது மாற்றுசக்தியொன்றை ஆதரிக்கும் நிலைப்பாட்டிற்கும் இடையே பிளவுபட்டுப்போய் இருக்கின்றன.
சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க விரும்பாதவர்களுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஜே.வி.பிக்கு இல்லை என்ப துநன்கு தெரியும். ஆனாலும் கூட அதை ஆதரிப்பதற்கான தேவையை அவர்கள் உணருகின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 2018 அக்டோபர் அரசியலமைப்பு சதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உறுதியாக எதிர்த்து ஜே.வி.பி ஜனநாயகத்த்திற்காகப் பாடுபட்டது. இருபது வருடங்களுக்குப் பிறகு உண்மையான சமூக மாறுதல் ஒன்றை நோக்காகக் கொண்டு ஜே.வி.பி அதன் சொந்த வேட்பாளரைக் களத்தில் நிறுத்தியிருக்கிறது. அத்தகைய ஒரு மாறுதலை இருபெரும் கட்சிகளும் கொண்டுவரப்போவதில்லை என்று ஜே.வி.பி நினைக்கிறது.
மூன்றாவது தெரிவு
முற்போக்கு முகாமிலுள்ள ஏனையவர்களைப் பொறுத்தவரை ஜே.வி.பியில் திஸாநாயக்க அல்லது ஜெனரல் சேனாநாயக்க போன்ற மூன்றாவது தெரிவொன்று முக்கியமானதாக இருக்கக்கூடும். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நிச்சயமான அது பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஜனநாயக சக்திகள் அவசரமாக, கூட்டாக செயலில் இறங்கவேண்டிய அவசியத்தை தற்போதைய தருணம் வேண்டிநிற்கிறது. இந்த சக்திகள் பிளவுபட்டு, வாக்குகள் சிதறடிக்கப்படுமானால் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 சதவீதம் +1 வாக்கை கோத்தாபய பெறுவதற்கு மறைமுகமாக உதவுவதாகப் போய்விடும்.
மூத்த அரசியல் விஞ்ஞானப் பேராசிரியரான ஜெயதேவ உயங்கொட, இத்தடவை ஜனாதிபதித் தேர்தல், “சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான ஒரு தெரிவு” என்று கூறுகின்றார். பத்திரிகையொன்றுக்குக் கடந்தவாரம் எழுதிய கட்டுரையொன்றில் அவர், தற்போதைய அரசாங்கத்துடனான தங்களது வெறுப்பு நேரப்போகின்ற ஆபத்தைப் பற்றிய விழிப்புநிலையை மழுங்கடிப்பதற்கு நாட்டுப்பிரஜைகள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால் கோத்தாபய ஜனாதிபதியாவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் தாராளவாத அல்லது இடதுசாரி முகாமிலுள்ள சிலர் பேராசிரியர் உயங்கொடவுடன் முரண்படுகின்றார்கள். ஆனால் சஜித் பிரேமதாஸவினால் கோத்தாபயவைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று அவர்கள் சந்தேகிக்கின்றார்கள். ஐ.தே.க அரசாங்கத்தின் தவறுகளும், குறைபாடுகளும் தான் ராஜபக்ஷாக்களின் மீள்வருகையை தேர்தல் வெற்றி வாய்ப்புக்களின் ஊடாக சாத்தியமாக்கியது. இதனைக் கடந்த வருடம் பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது பொதுஜன பெரமுனவின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் முதன்முதலாக அறியக்கூடியதாக இருந்தது.
மேலும் ராஜபக்ஷ குழாமை எதிர்த்து நிற்பதில் உறுதியாக இருப்பதற்கு அப்பால்ரூபவ் சஜித் பிரேமதாஸ முற்றிலும் வேறுபட்ட அல்லது முற்போக்கு நிகழ்ச்சி நிரலொன்றை முன்வைக்கவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றார்கள். சஜித்தும், கோத்தாபயவும் ஒரே மாதிரியானவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அரசியல் மாறுதலொன்றைக் கொண்டு வருவதற்குப் போதுமான அளவிற்கு சஜித் வேறுபட்டவராக இருக்கின்றாரா, குறைந்தளவு கெடுதி கொண்ட ஒருவரை ஆதரிக்கின்ற அரசியல் ஒடுக்குமுறை ஆட்சியொன்று திரும்பி வருவதை வெறுமனே தாமதிக்கவே செய்யுமே தவிர அத்தகைய ஆட்சி மீளவும் வருவதற்கான வழிகளை முற்றாக அடைத்துவிடப் போவதில்லை என்று அவர்கள் கவலைப்படுகின்றார்கள். அத்தகையதொரு தெரிவு அரசியல் நிலைவரத்தைப் போதுமான அளவிற்கு மாற்றியமைக்கவோ அல்லது ஜனநாயக விழுமியங்கள், முற்போக்கு இலட்சியங்களை நிலைநிறுத்தவோ போவதில்லை என்பது அவர்களது அபிப்பிராயமாக இருக்கிறது.
நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் முன்னைய தேர்தல்களில் ஒருபோதும் இல்லாத அளவு பெரும் எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். சில வாக்காளர்களைப் பொறுத்தவரை இத்தடவையைப் போன்று முன்னர் ஒருபோதும் தெரிவு கடுமையாக இருந்ததில்லை.
(த இந்து) நன்றி வீரகேசரி