ஆழ்துளைக்குள் அழுகையொலி
அனைவரையும் உலுப்பியதே
ஆழத்துள் அடங்கியதே
ஓலமிட்டு அழுதிட்டார்
ஓடியேடி அலைந்திட்டார்
நாளைவரும் எனநினைத்தார்
ஆழ்துழையோ அசரவில்லை !
தண்ணீரைத் தேடினார்
கண்ணீரே வந்தது
பிஞ்சுக் குழந்தையோ
பேதலித்து நின்றது
கெஞ்சினார் கிண்டினார்
கேட்கலையே இறைவனுக்கு
பிஞ்சுக் குழந்தையோ
பிணமாகிப் போனதே !
பெற்றாரின் தவறா
பேணி நிற்கும்
பேரரசின் தவறா
கற்றாரின் தவறா
கடவுளின் தவறா
யார்தவறே அறியோம்
பிஞ்சின் அழுகையே
நெஞ்சலாம் ஒலிக்குது !
No comments:
Post a Comment