தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு?


02/11/2019 ஐந்து தமிழ்க்­கட்­சிகள் கூடிக்கூடிப் பேசி ஒரு­வா­றாக ஒரு தீர்­மா­னத்தை எட்­டி­விட்­டன. வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முன்­மு­யற்­சியில் ஒன்று கூடிய ஆறு கட்­சி­களில் ஒரு கட்சி ஜனா­தி­பதி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டது.
ஆறு கட்­சி­களும் கூடி நிலை­மை­களை ஆராய்ந்து என்ன செய்­வது என்ற தீர்­மா­னத்தை எட்­டு­வ­தற்கு முன்பே பொன்­னம்­பலம் கஜேந்­ தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற தன்­னிச்­சை­யான முடிவை மேற்­கொண்டு அதனை அறி­வித்­தி­ருந்­தது.
அந்த அறி­வித்­தலை ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யிட்ட பின்­னரும் தேர்தல் தொடர்­பாக ஒன்­றி­ணைந்த ஒரு தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான கட்­சி­களின் கூட்­டத்தில் அது கலந்து கொண்டு கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யங்­களில் விவா­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தது. ஆயினும் அந்தக் கட்­சியைத் தவிர ஏனைய ஐந்து கட்­சிகள் கூட்­டத்தில் இனம் காணப்­பட்ட 13 அம்­சங்­களை ஏற்­றுக்­கொண்டு கையெ­ழுத்திட்­டி­ருந்­தன. ஆனால் தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தனது கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்தைக் குறிப்­பிட்டு அந்த ஆறு­கட்சி கூட்டில் இருந்து வெளி­யே­றி­யது.
மிஞ்­சிய ஐந்து கட்­சி­களும் முன்­வைத்த 13 அம்ச கோரிக்­கை­களை ஏற்­ப­தற்கு முன்­ன­ணியில் உள்ள மூன்று வேட்­பா­ளர்­களும் முன்­வ­ர­வில்லை. இரண்டு வேட்­பா­ளர்கள் அந்தக் கோரிக்­கை­களை முற்­றா­கவே நிரா­க­ரித்த போக்கைக் கடைப்­பி­டித்­தனர். ஜேவி­பியின் வேட்­பா­ள­ரா­ன அனுர குமார திசா­நா­யக்க அரை­கு­றை­யாக அந்த 13 அம்­சங்கள் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனாலும் அந்த 13 அம்­சங்­களின் அடிப்­ப­டையில் தமிழ்மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து தமிழ்க்­கட்­சி­க­ளுடன் பேச்சு நடத்­து­வ­தற்கு எவ­ருமே முன்­வ­ர­வில்லை. இதனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத 13 அம்­சங்­களின் அடிப்­ப­டை­யி­லான கோரிக்­கை­களை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டிய அவ­சியம் தமிழ்க்­கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.
சுட்­டிக்­காட்டி கூற முடி­யாத நிலை 
தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களும், அவர்­க­ளு­டைய கட்­சி­களும் தமிழ் அர­சியல் கட்­சி­களை வேறா­கவும், வாக்­கா­ளர்­க­ளா­கிய தமிழ் மக்­களை வேறா­கவும் நோக்­கு­கின்ற போக்கைக் கடைப்­பி­டித்­த­தனால், தேர்தல் தொடர்பில் தீர்க்­க­மான ஒரு முடிவை மேற்­கொள்­வதில் ஐந்து தமிழ்க்­கட்­சி­க­ளுக்கும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.
அர­சியல் ரீதி­யாக வெறுத்து ஒதுக்­கப்­ப­டு­கின்ற தரப்­பாகத் தமிழ்த்­த­ரப்­பினர் இருக்­கின்ற ஒரு சூழலில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரித்து வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­பது மிக மிக கடி­ன­மான விட­ய­மாக மாறி­விட்­டது. பேரின அர­சியல் நிலை­மை­களை அவ்­வாறு மாற்­றி­விட்­டது என்றே கூற வேண்டும்.
இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் ஐந்து கட்­களும் ஒன்­றி­ணைந்து விரும்­பிய வேட்­பா­ள­ருக்கு மக்கள் வாக்­க­ளிக்­கலாம் என்று திருவாய் மலர்ந்­தி­ருக்­கின்­றன. இந்தத் தீர்­மா­னத்தை ஒன்­றி­ணைந்து வெளி­யி­டு­வ­தற்கு முன்னர் முதல் நாளே தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மா­ன விக்­னேஸ்­வரன் ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை மூல­மாக வெளிப்­ப­டுத்­தி­விட்டார்.  
”தேர்தல் களத்தில் குதித்­துள்ள எந்த வேட்­பா­ள­ருக்குத் தமிழ்மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்டிக் கூற முடி­யாது. மக்கள் தாங்­க­ளா­கவே கடந்த கால நிலை­மை­க­ளையும் தற்­போ­தைய அகப் புறச் சூழ்­நி­லை­க­ளையும் கருத்திற் கொண்டு தமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்த வேண்டும்” என்று அவர் கூறி­யுள்ளார்.
இந்தத் தேர்­தலில் வழ­மை­யை­விட இன­வாத அர­சியல் பிர­சாரம் தீவி­ர­மாக முனைப்புப் பெற்­றி­ருக்­கின்­றது. இந்தச் சூழலில் குறிப்­பிட்ட ஒரு வேட்­பா­ளரை தமிழ்மக்கள் ஆத­ரிக்க வேண்டும் என்று வெளி­ப­ப­டை­யான முடி­வெ­டுத்தால், களத்தில் எதிர்த்­த­ரப்பில் உள்ள வேட்­பா­ளர்கள் அதனைத் தமது இன­வாத பிர­சா­ரத்­துக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி சிங்­கள மக்­களைத் திசை­தி­ருப்பி விடு­வார்கள்.
அவ்­வாறு சிங்­கள மக்­களைத் திசை திருப்­பினால் தமிழ்மக்கள் ஆத­ரித்த வேட்­பாளர் தோல்­வியைத் தழுவ நேரி­டலாம். அதனால் தமிழ்மக்கள் தோல்­வி­ய­டைந்த ஒரு வேட்­பா­ள­ருக்கு தமது பெறு­மதிமிக்க வாக்­கு­களை அளித்து, அவற்றை வீணாக்­கி­விட்­டார்கள் என்ற நிலை­மைக்கு ஆளாக நேரிடும்.
தவ­றிய செயற்­பா­டுகள்
எனவே தேர்தல் தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்று கூடிய ஐந்து தமிழ்க்­கட்­சி­களும் தமிழ்மக்­களை அந்த நிலை­மைக்கு ஆளாக்­கி­விட்­டன. தீர்க்­க­த்த­ரி­ச­ன­மற்ற முறையில் செயற்­பட்டு மக்­களைத் தவ­றாக வழி­ந­டத்­தி­விட்­டன என்ற பழிச்­சொல்­லுக்கு ஆளா­கவும் நேரி­டலாம். இதனைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே மக்கள் தங்­க­ளு­டைய தீர்­மா­னத்­திற்­க­மைய விரும்­பி­ய­வாறு வாக்­க­ளிக்­கலாம் என்று ஐந்து கட்­சி­களும் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன.
விடு­த­லைப்­பு­லி­க­ளுக்குப் பின்­ன­ரான அர­சியல் சூழலில் தமிழ்த்­த­ரப்பில் ஆளு­மையும் செயல் வல்­ல­மையும் கொண்­டதோர் அர­சியல் தலைமை உரு­வா­க­வில்லை. விடு­த­லைப்­பு­லி­க­ளினால் நாடா­ளு­மன்ற அர­சியல் தேவைக்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை உரு­வாக்கி இருந்­தனர். அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர் தமிழ் அர­சி­யலின் தலைமைப் பொறுப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலையில் வந்­தி­றங்­கி­யது.
ஆனாலும் சிறு­பான்மை இன மக்­களை இரண்­டாந்­தரக் குடி­மக்­க­ளா­கவே வைத்­தி­ருக்க வேண்டும் என்ற ஆழ­மான பேரி­ன­வாத அர­சியல் சிந்­த­னை­யையும் அதன் வழி­மு­றை­யி­லான செயற்­பா­டு­க­ளையும் சரி­யாக இனங்­கண்டு, அதற்­கேற்ற முறையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் செயற்­பட முடி­ய­வில்லை.
தீர்க்­க­த­ரி­ச­னமும், ரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான செயல் வல்­ல­மையும், பேரி­ன­வாதப் போக்­கினால் எழுந்­துள்ள சவால்­களை தந்­தி­ரோ­பாய ரீதியில் எதிர்­கொண்டு முன்­னே­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளிலும் கூட்­ட­மைப்பு ஈடு­படத் தவ­றி­விட்­டது என்றே கூற வேண்டும்.
விடு­த­லைப்­பு­லிகள் என்ற கட்­ட­மைப்பின் பின்னால் அணி­தி­ரண்­டி­ருந்த தமிழ் மக்கள் அவர்­க­ளுக்குப் பிறகு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் கீழ் ஓர­ணியில் திரண்­டி­ருந்­தார்கள். மக்கள் ஒற்­று­மை­யாகி இருந்­தார்கள். ஆனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தமக்­கி­டை­யி­லான கட்சி நிலை வேறு­பா­டு­களைக் களைந்து தமிழ் மக்­க­ளுக்­கான ஓர் இறுக்­க­மான கட்­ட­மைப்பைக் கொண்ட அர­சியல் தலை­மையை உரு­வாக்கத் தவறி­விட்­டன.
தமிழர் தரப்­புக்கு அவ­சி­ய­மான உறு­தி­யான கட்­ட­மைப்பைக் கொண்ட ஓர் அர­சியல் தலை­மையை உரு­வாக்க தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் முடி­யாமல் போய்­விட்­டது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற கூட்­டுக்குள் இணைந்த தமிழ்க்­கட்­சி­க­ளினால் ஒன்­றி­ணைந்த அதி­கா­ர­பூர்­வ­மான அந்­தஸ்தைக் கொண்ட ஒரு கூட்­ட­மைப்பைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் போய்­விட்­டது.
நிலை­மைகள் மோச­ம­டை­வ­தற்­கான அறி­கு­றிகள்
யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான பத்­து­வ­ருட காலப்­ப­கு­தியில் தேர்­த­லுக்­காகக் கட்டுண்ட ஒரு நிலை­யி­லேயே பங்­காளிக் கட்­சிகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் கூட்­டி­ணைந்­தி­ருந்­தன. தேசிய முக்­கி­யத்­துவமிக்க சந்­தர்ப்­பங்­க­ளிலும், இக்­கட்­டான சூழல்­க­ளிலும் தமிழ்­மக்­களின் நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­திலும் கூட்­ட­மைப்பு தவ­றி­விட்­டது. கூட்­ட­மைப்­பு மேற்­கொண்ட அர­சியல் நட­வ­டிக்­கைகள் அரச தரப்பின் நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், சிக்­கல்­களில் இருந்து அதனை மீட்­ப­தற்­குமே உத­வி­யி­ருந்­தன.
தீர்க்­கப்­பட்­டி­ருக்கக் கூடிய தமிழ்மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளைக்­கூட கூட்­ட­மைப்­பினால் தீர்க்க முடி­யாமல் போய்­விட்­டது. அவற்­றுக்குத் தீர்வு காண முடி­யாமல் போய்­விட்­டது. இத்­த­கைய ஒரு பின்­பு­லத்­தில்தான் 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் எந்தத் தரப்­பையும் வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்க முடி­யாத கையறு நிலை­மைக்குத் தமிழ் மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.
அர­சியல் ரீதி­யாக அவர்­களை வழி­ந­டத்த வேண்­டிய தலை­மைகள், மக்­களை நோக்கி இந்தத் தேர்­தலில் நீங்­களே ஆரோக்­கி­ய­மான ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொண்டு உங்­க­ளு­டைய வாக்­க­ளிக்கும் உரி­மையைப் பயன்­ப­டுத்­துங்கள் என்று கூறு­கின்ற நிலை­மைக்கு ஆளாகி இருக்­கின்­றன.
இது வாக்­க­ளிப்­ப­தற்கு முந்­திய நிலைமை. தேர்தல் முடிந்த பின்­ன­ரான நிலை­மைகள் இன்னும் மோச­ம­டை­வ­தற்­கான அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன. இந்தத் தேர்­தலில் முன்­ன­ணியில் இருக்­கின்ற மூன்று வேட்­பா­ளர்­க­ளுமே, யுத்­த­கா­லத்தில் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­களைக் குற்றச் செயல்­க­ளாக ஏற்­றுக்­கொள்­கின்ற அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­க­வில்லை.
ரா­ணுவ நலன்கள் சார்ந்த அர­சியல் கொள் ­கையே அவர்­க­ளிடம் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. அதே­நேரம் நாட்டில் யுத்தம் ஒன்று மூள்­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­ பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற தேசிய ரீதி­யி­லான அர­சியல் மனப்­பாங்கும் அவர்­க­ளிடம் இல்லை.
இணை அனு­ச­ரணை உறு­தி­மொ­ழியை மேவிய நிலை
போர்க்­குற்­றங்கள் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்ற பொது­வான நிலைப்­பாட்­டையே அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் ரா­ணு­வத்தின் நலன்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அவைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­க­ளையும், வர­லாற்று ரீதி­யான நில உரித்­தையும், மதம்­சார்ந்த பாரம்­ப­ரிய கலை­க­லா­சார உரித்­து­க்க­ளையும் படிப்­ப­டி­யாக இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற சிங்­கள பௌத்த தேசியக் கொள்­கை­யே இந்த வேட்­பா­ளர்­க­ளிடம் மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.
போர்க்­குற்­றங்கள் எதுவும் நாட்டில் இடம்­பெ­ற­வில்லை என்று பிர­தான வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­ன கோத்­தா­பாய ராஜ­பக்ஷ தனது தேர்தல் பரப்­பு­ரை­க­ளின்­போது அடித்துக் கூறி­யி­ருக்­கின்றார். இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்பும் அந்த நிலைப்­பாட்­டையே அவர் கொண்­டி­ருந்தார். அவ­ரு­டைய சகோ­த­ர­ரரும் பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ருமான, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜ­பக்ஷ இந்த நிலைப்­பாட்டில் மிகவும் உறு­தி­யாக இருந்து வரு­கின்றார்.
போர்க்­குற்றச் செயல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன எனச் சுட்­டிக்­காட்டி, அவற்­றுக்குப் பொறுப்பு கூற வேண்டும். யுத்தம் மூள்­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காகக் கொண்­டு­வ­ரப்­பட்டு, நீக்­கப்­ப­டாமல் உள்ள பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி, அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வான ஒரு சட்­டத்தை உரு­வாக்க வேண்டும் என்று ஐநாவும் சர்­வ­தேச நாடு­களும் கோரி­யி­ருக்­கின்­றன.
இவற்றை நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இரு­கட்சி அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அந்த உறு­தி­மொ­ழி­யையும் மேவி, அந்தத் தீர்­மா­னங்­களை ஏற்க முடி­யாது. சர்­வ­தே­சத்தின் வலி­யு­றுத்­தல்­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று சூளு­ரைத்து தேர்­தலில் வெற்றி பெற்­றதும் அமைக்­க­வுள்ள புதிய அர­சாங்­கத்தில் அவற்­றுக்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று உறு­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி­யுள்ளார்.
அவ­ருக்குப் பின்னால் இருந்து அவரை இயக்­கு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற தென்­னி­லங்­கையின் வலிமைமிக்க அர­சி­யல்­வா­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற மகிந்த ராஜ­பக்ஷவும் இந்த நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்ளார். ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த போதே இங்கு போர்க்­குற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என அடித்­துக்­கூறி ஐநா மனித உரிமைப் பேர­வை­யையும் சர்­வ­தே­சத்­தையும் அவர் புறந்­தள்­ளி­யி­ருந்தார் என்­பது நினை­வூட்­டத்­தக்­கது.
ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­து­போன்று இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இன­வாதப் போக்கு தீவி­ர­மாகத் தலை­நிமிர்ந்துள்­ள­தால், ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் தேர்­தலில் வெற்­றி­பெற நேர்ந்தால் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டைக் கருத்தில் கொண்­டி­ருக்­க­மாட்டார் என்றே உறு­தி­யாகத் தெரி­கின்­றது.
தேர்தல் விஞ்­ஞா­பன கொள்­கை­க­ளுக்கே அங்­கீ­காரம்
அது மட்­டு­மன்றி தேர்­தலில் எவர் வெற்­றி­பெற்­றாலும், அவரும், அவ­ரு­டைய கட்சி உட்­பட அவரைச் சார்ந்­த­வர்­களும் இந்த நிலைப்­பாட்­டையே கொண்­டி­ருப்­பார்கள் என்­ப­தற்­கான அறி­கு­றி­களே காணப்­ப­டு­கின்­றன.
தேர்­தலில் வெற்றி பெற்­றதன் பின்னர், தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கை­க­ளுக்­கா­கவே மக்கள் வாக்­க­ளித்­தார்கள். அந்தக் கொள்­கை­களை தமிழ்மக்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள் என்று நிச்­ச­ய­மாக வெற்­றி­பெற்ற ஜனா­தி­பதி கூறுவார். அதனை சர்­வ­தே­சத்­திற்கும் அவர் சுட்­டிக்­காட்டத் தவ­ற­மாட்டார்.
குறிப்­பாக இத்­த­கைய வெற்­றியின் மூலம் நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்­றொரு பிரச்­சினை இல்லை. விடு­த­லைப்­பு­லிகள்; பயங்­க­ர­வா­திகள். அவர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளு­டைய பிடியில் கேட­ய­மாக இருந்த தமிழ்மக்­களை ரா­ணு­வமே தனது மனி­தா­பி­மான  ரா­ணுவ நட­வ­டிக்­கையின் மூலம் மீட்­டெ­டுத்­தது. அந்த மக்­க­ளுக்கு பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையே உள்­ளது.
போரினால் சீர­ழிந்­துள்ள வடக்­கையும் கிழக்­கையும் மட்­டு­மல்­லாமல் அழி­வுக்கு உள்­ளா­கிய நாட்டின் ஏனைய பகு­தி­க­ளையும் அபி­வி­ருத்­தியின் மூலம் பொரு­ளா­தார ரீதியில் கட்­டி­ யெ­ழுப்­பு­வ­தற்கே மக்கள் வாக்­க­ளித்து புதிய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்கள் என்று வெற்றி பெறு­கின்ற ஜனா­தி­பதி அரச தலைவர் என்ற ரீதியில் நிலை­மை­களை எடுத்துக் கூறி, தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு மற்றும் அன்­றாடப் பிரச்­சி­னை­களை அதி­கா­ர­ பூர்­வ­மாகப் புறந்­தள்­ளக்­கூ­டிய நிலை­மையும் இப்­போதே காணப்­ப­டு­கின்­றது.
 போர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற பொறுப்பைத் தட்­டிக்­க­ழித்து, இழுத்­த­டித்துக் காலம் தாழ்த்­தி­ய­தனால் ஏற்­க­னவே தமிழ்மக்­களின் அர­சியல் தீர்வு உள்­ளிட்ட ஏனைய பிரச்­சி­னைகள் நீர்த்துப் போகத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.
இந்தத் தேர்­தலின் பின்­ன­ரான அர­சியல் சூழலில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பி­லான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பே அர­சுக்குள்­ளது என்ற ரீதியில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைப் புறந்­தள்ளி பேரி­ன­வா­தத்­துக்கு இசை­வான அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கக் கூடிய வாய்ப்­புக்­களும் இப்­போதே தென்­ப­டு­கின்­றன.
புதுப்­புனல் பாயுமா?
இத்­த­கைய நிலை­மை­க­ளுக்கு ஜனா­தி­பதி தேர்­தலைத் தொடர்ந்து நடத்­தப்­ப­ட­வுள்ள பொதுத் தேர்­தலும் வழி­வ­குக்கும் என்று எதிர்­பார்க்­கலாம். தமிழ்மக்­களின் வாக்­கு­களே ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெ­று­ப­வரைத் தீர்­மா­னிக்­கின்ற ஜன­நா­யக சக்­தி­யாகத் திகழ்­கின்­றது. ஆனால் பேரின அர­சியல் கட்­சி­களின் தேர்­தல்­கால அணு­கு­மு­றையின் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய அந்த ஜன­நா­யக சக்தி வலு­வி­ழந்துள்ளது.
இந்தத் தேர்தலைப் பின்பற்றி பொதுத் தேர்தலிலும் இதேபோன்ற உத்தியை அல்லது இதற்கும் மேலாக வலிமையுள்ள அரசியல் உத்தியைப் பயன்படுத்தி தமிழ்த்தரப்பின் அரசியல் வலிமையைப் பலவீனப்படுத்துவதற்கு சிங்கள பௌத்த தேசியம் முயற்சிக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை.
இத்தகைய பின்புலத்தில் தமிழ்த்தரப்பில் ஏற்பட்டுள்ள ஆளுமையும் செயல்வல்லமையும் உடைய அரசியல் தலைமைக்கான வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும். அந்தத் தலைமையானது தென்னிலங்கையில் உருவாகியுள்ள புதிய அரசியல் போக்கைப் போன்ற புதுப்புனல் பாய்ந்ததாக அமைந்திருத்தலும் அவசியம்.
தமிழ்த்தரப்பு அரசியலின் பலவீனமான தலைமைக்குப்பதிலாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே முன்னணியிலுள்ள அரசியல் தலைமைகளைப் பயன்படுத்தி புதிய தலைமையை உருவாக்குவதாக அமைந்திருந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட வடமாகாண சபையின் அரசியல் தலைமைக்குப்  புதிய வரவாகக் கொண்டுவரப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் அரசியல் நிலைமைகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாவல்களுக்கு உறுதியாக முகம் கொடுத்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற ஒருவராகத் தன்னை அவர் நிரூபிக்கவில்லை. மாற்றுத்தலைமைக்கான தலைமை நிலையில் அவரை வைத்துச் செயற்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சக்திகளை ஓரணியில் திரட்டி, உறுதியானதோர் கட்டமைப்பை உருவாக்க அவரால் முடியாமல் போய்விட்டது.
அவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கில் பயணிக்கின்ற ஒரு தலைவராகவே தன்னை இதுவரையில் இனம் காட்டியுள்ளார்.
இத்தகைய பின்னணியில் தமிழ்த்தரப்பில் ஆளுமையும் செயல்வல்லமையும் தீர்க்க தரிசனச் செயற்பாட்டையும் கொண்ட புதிய தலைமையொன்று எழுச்சி பெற வேண்டும். அது காலத்தின் கட்டாயத் தேவையாகி உள்ளது. அத்தகைய தலைமை உருவாகுமா? எவ்வாறு உருவாகும்? இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி 









No comments: