ஏமாறத் தயா­ராகும் தமிழ்க்­கட்­சிகள்


15/09/2019 சம்­பந்­தனின் அந்த இரா­ஜ­தந்திரம், பொது அர­சி­யலின் வெற்­றிக்கு உத­வி­யது, ஆனால் சுய அர­சி­யலின் வெற்றிக்கு உத­வ­வில்லை


கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல் அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. பேச்­சுக்­களின் இறு­தியில், அவ­ருக்கு ஆத­ரவு அளிக்கும் முடிவு எடுக்­கப்­பட்ட போது, உங்­களின் கோரிக்­கைகள் தொடர்­பாக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் உடன்­பாடு ஒன்றில் கையெ­ழுத்­தி­டுங்கள் என்று இரா.சம்­பந்­த­னிடம் சந்­தி­ரிகா குமா­ர­துங்க, கேட்­டி­ருந்தார்.

அதற்கு இரா.சம்­பந்தன், எழுத்து மூல உடன்­பாடு செய்து கொண்டால், தவ­றான கருத்­துக்கள் பரப்­பப்­பட்டு, மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­க­டிக்கும் பிர­தான நோக்கம் பாழாகி விடும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது நம்­பிக்கை வைத்து, அவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்போம் என்று கூறி­யி­ருந்தார்.மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் உடன்­பாடு ஒன்றில்  கையெ­ழுத்­திட்­டி­ருந்தால், அவ­ருக்கு கூட்­ட­மைப்­பினால் அழுத்தம் கொடுக்க முடிந்­தி­ருக்கும். ஆனால், அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் வென்­றி­ருப்­பாரோ தெரி­யாது. ஏனென்றால், இர­க­சிய உடன்­பாடு என்று சிங்­கள மக்­களை   உசுப்­பேற்றி,   மஹிந்த ராஜபக் ஷ தரப்பு வெற்­றியைப் பெறு­வ­தற்கு கடு­மை­யாக முயற்­சித்­தி­ருக்கும்.
சம்­பந்­தனின் அந்த இரா­ஜ­தந்­திரம், பொது அர­சி­யலின் வெற்­றிக்கு உத­வி­யது, ஆனால் சுய அர­சி­யலின் வெற்­றிக்கு உத­வ­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மூலம், கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு, அந்த வாய்­மொழி வாக்­கு­று­திகள் சம்­பந்­த­னுக்கு உத­வி­யி­ருக்­க­வில்லை.
இந்த விட­யத்தில் சூடு கண்­டதால் தான், இனிமேல், எழுத்து மூல உடன்­பாடு செய்து கொள்ளத் தயா­ராக இருக்கும் தரப்­பு­க­ளுக்கே ஆத­ர­வ­ளிக்க முடியும் என்று, கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் கூறி வரு­கிறார். இன்­னொரு பக்­கத்தில், மஹிந்த ராஜபக் ஷவின் வாக்­கு­று­தி­களை நம்பி, அவ­ருடன் ஏற் ­க­னவே இணைந்து செயற்­பட்ட சில சிறிய தமிழ்க் கட்­சிகள், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு கொடுக்க முன்­வந்­துள்­ளன.
டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி, வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாளின் தலை­மை­யி­லான தமிழர் சமூக ஜன­நா­யக கட்சி ஆகி­ய­னவும் அவற்றில் சில. இந்தக் கட்­சி­களில் ஈ.பி.டி.பி மாத்­திரம், கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் பேசி­யி­ருக்­கி­றது. அந்தப் பேச்­சுக்­களில் அவர் நம்­பிக்கை அளிக்கக் கூடிய வாக்­கு­று­தி­களை தந்­துள்ளார் என கூறி­யி­ருக்­கி­றது.
ஆனால், வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் கோத்­தா­பய ராஜபக் ஷவைக் கூடச் சந்­திக்­க­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவுடன் மாத்­திரம் பேசி­யி­ருக்­கிறார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான கோத்­தா­பய ராஜபக் ஷ, தனக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்த ஒரு தமிழ்க் கட்­சியின் தலை­வரை இன்­னமும் சந்­திக்க­ வில்லை என்றால், அந்தக் கட்­சியை அவர் பொருட்­டா­கவே கரு­த­வில்லை என்று தான் அர்த்தம். டக்ளஸ் தேவா­னந்­தா­வையும், வர­த­ரா­ஜப்­பெ­ரு­மா­ளையும் ஒரே அளவில் எடை போட மஹிந்த தரப்பு தயா­ராக இல்லை.
காரணம் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு யாழ்ப்­பா­ணத்தில் ஒரு கணி­ச­மான ஆத­ரவுத் தளம் இருக்­கிறது, அதனை தேர்­தல்­களில் நிரூ­பித்­தி­ருக்­கிறார். ஆனால் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் அவ்­வா­றில்லை. அவ­ரது கட்சி தேர்­தல்­களில், தமிழ் மக்­க­ளிடம் தமக்­குள்ள ஆத­ரவை நிரூ­பிக்­க­வில்லை.  அதனால் கோத்­தா­பய ராஜபக் ஷ அவ­ரையோ அவ­ரது கட்­சியின் ஆத­ர­வையோ பொருட்­டாக கரு­தாமல் இருக்­கலாம்.
கோத்­தா­பய ராஜபக் ஷவையே இன்­னமும் சந்­திக்­காத வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாளும், கோத்­தாவைச் சந்­தித்தும், அவ­ரிடம் இருந்து முறைப்­ப­டி­யான எந்த வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாத டக்ளஸ் தேவா­னந்­தாவும், தமிழ் மக்­க­ளுக்கு பொய்­யான வாக்­கு­று­தி­யையே வழங்க முனைந்­ தி­ருக்­கி­றார்கள்.
கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்­ததும் அர­சியல் கைதிகள் அனை­வரும் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்றும், அதற்­கான உத்­த­ர­வா­தத்தை அவர் தந்­தி­ருக்­கிறார் என்றும், வவு­னி­யாவில் அண்­மையில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் உரை­யாற்­றிய வர­த­ரா­ஜப்­பெ­ருமாள், கூறி­யி­ருந்தார். அர­சியல் கைதிகள் இவ்­வ­ளவு காலமும் சிறைக்குள் வாடு­வ­தற்கு காரணம் கோத்­தா­பய ராஜபக் ஷ தான். 
அவ­ரது காலத்தில் கடு­மை­யான சட்­டங்­க­ளுக்குக் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு, வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­விப்­பதில் இன்று வரை சிக்­கல்கள் இருந்து வரு­கின்­றன.
போர் முடிந்து ஐந்து ஆண்­டு­க­ளாக அவர்­களை விடு­விக்­காத கோத்­தா­பய ராஜபக் ஷ, தாம் ஜனா­தி­பதி ஆக வேண்டும் என்­ப­தற்­காக இப்­ப­டி­யொரு வாக்­கு­று­தியைக் கொடுக்க முனை­கிறார்.
ஆனால், கோத்­தா­பய ராஜ­பக் ஷ இந்த வாக்­கு­று­தியைக் கொடுத்­தாரா – அதற்­கான உறு­தி­மொழி எழுத்து மூலமோ, வாய்­மொ­ழி­யா­கவே கொடுக்­கப்­பட்­டதா என்­பது தெளி­வில்லை. எந்­த­வொரு சிங்­களத் தலை­வரும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வை வழங்கும் எந்த வாக்­கு­று­தி­யையும் எழுத்து மூலம் கொடுக்­க­மாட்­டார்கள். அதற்கு கோத்­தா­பய ராஜபக் ஷவும் விதி­வி­லக்­கா­னவர் அல்ல.
அர­சியல் கைதிகள் விட­யத்தில், கோத்­தா­பய ராஜபக் ஷ கொடுத்த உறு­தி­மொழி உண்­மை­யா­ன­தெனின், அவ­ரது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்- சிங்­க­ளத்தில் அதனை வெளிப்­ப­டுத்த தயா­ராக இருக்­கி­றாரா?, அந்த உறு­தி­மொ­ழியை அதில் இடம்­பெறச் செய்யும் தகைமை வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் போன்­ற­வர்­க­ளுக்கு இருக்­கி­றதா?
வவு­னியா செய்­தி­யாளர் சந்­திப்­புக்கு சில நாட்கள் முன்னர் கொழும்பு ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த, செவ்­வியில் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள், அர­சியல் கைதி­களின் பிரச்­சினை, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை எல்லாம், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் இல்லை என்றும், அது கூட்­ட­மைப்­பினால் உரு­வாக்­கப்­பட்ட பொய்­யான விவ­கா­ரங்கள் என்றும் கூறி­யி­ருந்தார்.
எனினும், அடுத்த சில நாட்­களில் கோத்­தா­பய ஆட்­சிக்கு வந்தால் அர­சியல் கைதிகள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று உத்­த­ர­வாதம் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கிறார்.
அது­போலத் தான், ஈ.பி.டி.பி.யுட­னான சந்­திப்பின் போது, 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் நடை­மு­றைப்­ப­டுத்த தயார் என்றே கோத்­தா­பய ராஜபக் ஷ கூறி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.
காணி அதி­கா­ரங்­களை வழங்­கவே முடி­யாது என்றும், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரங்­களை மட்டும் வழங்­கு­வது பற்றி ஆலோ­சிக்­கலாம் என்றும் தான் அவர் கூறி­யி­ருந்தார்.
ஆனால், யாழ்ப்­பா­ணத்தில் டக்ளஸ் தேவா­னந்தா நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பு­களில், கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கிறார் என்று கூறி வரு­கிறார்.
13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் வாக்­கு­று­தியை மஹிந்த ராஜபக் ஷ கூட கொடுக்­க­வில்லை. அதற்கு அவர்கள் தயா­ரா­கவும் இல்லை.
13 ஆவது திருத்­தச்­சட்டம் ஆகட்டும், அர­சியல் கைதி­களின் விடு­தலை ஆகட்டும், காணிகள் விடு­விப்பு ஆகட்டும், கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விவ­காரம் ஆகட்டும், அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு ஆகட்டும், எல்­லா­வற்­றுக்­கு­மான அல்­லது இந்த விட­யங்கள் சார்ந்த வாக்­கு­று­தி­களை எழுத்து மூலம் கொடுக்க எந்த வேட்­பா­ள­ரா­வது முன்­வ­ரு­வார்­களா என்­பது சந்­தேகம் தான்.
ஏனென்றால், தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக எந்­த­வொரு சிங்­களத் தலை­வரும் சிங்­கள மக்­களின் வாக்­கு­களை இழக்கத் துணி­ய­மாட்­டார்கள்.
இது கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் பொருத்தம், ரணில் அல்­லது சஜித்­துக்கும் பொருத்­த­மு­டை­யது தான்.
தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை சிங்­களத் தலை­வர்கள் யாருமே, சிங்­கள மக்­க­ளுக்கு சரி­யாக எடுத்துக் கூறி­யது கிடை­யாது. சிங்­கள மக்­களை தவ­றாக வழி­ந­டத்­து­வது சிங்­களத் தலை­மைகள் தான்.
ஒரு தரப்பு தமி­ழர்­க­ளுடன் உடன்­பாடு செய்து கொண்டால், அல்­லது தீர்­வு­களை வழங்கும் வாக்­கு­று­தியை கொடுக்க முனைந்தால், மறு­த­ரப்பு அதனை வைத்து இன­வா­தத்தை கக்கி பிர­சாரம் செய்யும்.
அதுதான் இது­வரை காலமும் நடந்து வந்த அர­சியல். அந்த அர­சியல் பாதையை மாற்றிக் கொள்ள சிங்­களத் தலை­வர்கள் தயா­ராக இல்லை.
வெற்­றியை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக தமிழ் மக்­களின் வாக்­கு­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதை விரும்­பு­கின்ற சிங்­களத் தலை­மை­களும் வேட்­பா­ளர்­களும், மறு­பு­றத்தில் அதற்­கான உடன்­பாடு ஒன்றில் கையெ­ழுத்­தி­டவோ, எழுத்து மூலம் வாக்­கு­றுதி கொடுக்­கவோ தயா­ராக இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வா­றான ஒரு எழுத்­து­மூல வாக்­கு­று­தியை பெற்றே ஆத­ரவு கொடுப்போம் என்று இறுக்­க­மான நிலைப்­பாட்டில் இருந்­தாலும், கடைசி நேர நிலைமை எப்­படி அமையும் என்று கூறமுடியாது. சூடு கண்ட பூனையாக இருக்கும் கூட்டமைப்பு, இந்த விடயத்தில் எப்படி முடிவெடுக்கும் என்று தெரியாது.


ஆனால், எப்போதும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக நடித்து வந்த தரப்புகள், கோத்தாபய ராஜபக் ஷவிடம் இருந்து எந்த எழுத்துமூல வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு செல்லப் போவதில்லை என்பது உறுதி.

அவ்வாறு பேரம் பேசும் நிலையில் தாம் இல்லை என்பதை வரதராஜப்பெருமாள் ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழர்கள் வாக்களிக்காமலேயே கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்று விடுவார் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
அப்படியான அடிமை மனோநிலையில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு, தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில், விடாப்பிடியாக நின்று காரியத்தை நிறைவேற்றுக் கொள்ளப் போகின்றன என்ற கேள்வி உள்ளது,
மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்படுவதற்கோ, ஏமாந்து போய் நிற்கவோ தான், தமிழ்க் கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றன.No comments: