சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிட்டுவதில் தான் சிக்கில். அவர்களில் சிலர் அண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறார்கள். அவர்களின் புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. சரி வாருங்கள் நாமும் படத்துடன் சேர்ந்து ஓடுவோம்..
கதைக்களம்
படத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.
ஒரு நாள் திடீரென இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.
ரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரும் சம்பவத்தால் ரியோ மற்றும் விக்னேஷ் இருவரும் அனைத்து சானல்களிலும் பிரேக்கிங் செய்தியாக மாறுகிறார்கள்.
அருகில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன கவலை என சுயநலமாக இருப்பவர்கள் மத்தியில் கொலை சம்பவத்தை தடுக்க முயற்சி செய்கையில் இருவரின் உயிருக்கும் ஆபத்து, யார் அந்த கொலைகாரன், அவனின் நோக்கம் என்ன, சமூகம் என்ன செய்தது என்பதே இந்த கதை.
படத்தை பற்றிய அலசல்
முதலில் இப்படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தான் வந்த இடத்திலிருந்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். கமர்சியல் விசயங்களுக்காக யோசிக்கும் இப்போதைய சூழ்நிலையில் தைரியமாக புது முயற்சியுடன் படம் தயாரித்து கொடுத்திருக்கிறார்.
டிவி, சீரியல் என கலக்கி வந்த ரியோவுக்கு இப்படம் சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங்காக அமையும். சீரியல் ஓகே. சினிமாவில் தன்னை ஹீரோவாக காட்டி திறமையை நிரூபிப்பாரா என படத்தில் தொடக்கத்தில் கேட்க வைத்த அவர் இறுதியில் நிறைவேற்றிவிட்டார் என படம் பார்ப்பவர்களின் மனம் சொல்லும்.
ஆர்.ஜே.விக்னேஷ் கலாய்ப்பதில் கெட்டிக்காரர். இப்படத்தில் அவர் செய்யும் லூட்டி அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும். ஹீரோவுக்கு இணையாக அவரும் இன்னொரு ஹீரோ போல தன்னை வெளிப்படுத்தி சிம்பிளான காமெடி ரோல் பிளே செய்துள்ளார். ஒரு நடிகராக அடுத்து தன்னை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிக்கை, ஊடக துறையில் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், அந்த பத்திரிக்கை ஊடகத்தால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற தற்போதைய நிலையையும் Youtube சர்ச்சை பிரபலம் ராதா ரவி காட்டுகிறார்.
அரசியல் வாதியாக நாஞ்சில் சம்பத்தை உள்ளே கூட்டி வந்துவிட்டார்கள். சொல்லவா வேண்டும். அவர் அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார்.
ஹீரோயின் ஷிரின் பத்திரிக்கை நிரூபராக நடிகையாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கான முக்கியத்துவமும், காட்சிகளும் படத்தில் குறைவு. ஆனாலும் நடிப்பில் நிறைவு. வாழ்த்துக்கள்..
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தின் மூலம் இக்காலத்து இளம் தலைமுறைகளின் நாடிதுடிப்புகளை கொண்டு அரசியல் சர்ச்சையில் சிக்கிய சிலரை படத்தின் மூலம் பிரதிபலித்து படம் பார்த்தவர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மயில்சாமி, பிஜிலி ரமேஷ், Youtube பிரபலங்கள் என சிலரை இங்கே காணமுடிகிறது. காட்சிகள் என ஒளிப்பதிவாளர் தெளிவாக படத்தை கொண்டு செல்கிறார்.
ஷாபிர் இசையில் பாடல்கள் இதயங்களை இம்பிரஷ் செய்யும்.
கிளாப்ஸ்
ஹீரோ ரியோவுக்கு நல்ல ஓப்பனிங். வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையும்.
சுற்றி தவறு நடந்தால் தட்டி தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற சோசியல் மெசேஜ்.
பல அவலங்களை காமெடி சிரிப்புடன் படங்களில் பளிச்சிட்ட விதம்.
பல்பஸ்
இன்னும் கதைக்களம் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என ஒரு ஃபீல்.
மொத்தத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு ரியல் எண்டர்டெயின் மெண்ட். ஃபன் ஃபில்.
நன்றி CineUlagam
No comments:
Post a Comment