ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


7 ஆவது முறையாகவும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோலி சாதனை!              

மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் !

மேற்கிந்தியத்தீவுகளை நிலைகுலைய வைத்த பங்களாதேஷ் இணைப்பாட்டம்

150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து

நேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்!

நிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா

வெளியேறும் நிலையில் தென்னாபிரிக்கா!

பங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி

இறுதி வரை போராடிய முஷ்பிகுர் !

மீண்டும் சொதப்பலாக ஆடி முடித்த இலங்கை!

பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை!

இலங்கை அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டு

சமியின் ஹெட்ரிக்கின் உதவியுடன் போராடி ஆப்கானை வென்றது இந்தியா



7 ஆவது முறையாகவும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

17/06/2019 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. 

ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணியளவில் மான்செஸ்டரில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.
337 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி வந்தபோது 35 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் இடை நிறுத்தி வைக்கப்பட்டது. 
பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பக்தர் ஜமான் 62(75) ஓட்டத்தையும், பாபர் அசாம் 48(57) ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் இமாட் வாஸிம் 22(20) ஓட்டத்துடனும், சதாப் கான் ஓரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இரண்டாவது முறை மழை குறிக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 40 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன் பாக்கிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 302 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 30 பந்துகளில் 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலை உருவாகியது.
எனினும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினரால் மட்டுப்படுத்தப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 
இதனால் பாகிஸ்தான் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் சர்வதேச ஒருநாள் உலகக் கிணண வரலாற்றில் 7 ஆவது முறையாகவும் தோல்வியைத் தழுவியது.
இமாட் வாஸிம் 46 (39) ஓட்டத்துடனும், சதாப் கான் 20(14) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்ததுடன், பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நன்றி வீரகேசரி 










11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோலி சாதனை!              

17/06/2019 பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய  அணித் தலைவர் விராட் கோலி வேகமக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மான்செஸ்டரில் இடம்பெற்றது. 
இப் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து புதிய சாதனையை படைத்தார். 
ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 276 ஆட்டங்களில் 11,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்திருதார். இந் நிலையில் அந்த சாதனையை விராட் கோலி வெறும் 222 ஆட்டங்களில் ஆடி முறிடியத்துள்ளார்.
அத்துடன் சச்சின், கங்குலியுடன் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் 9 ஆவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
நன்றி வீரகேசரி 











மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் !

17/06/2019 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றுள்ளது. 
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டனில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.
322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹும் மாத்திரம் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்திருந்தாலும், ஏனைய வீரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பினை செவ்வனே நிறைவேற்றினார்கள்.
அதன்படி தமீம் இக்பால் 48 (53) ஓட்டத்தையும், சவுமிய சர்கார் 29 (23) ஓட்டத்தையும், பெற்று ஆட்டமிழந்ததுடன், சகிப் அல்ஹசன் 99 பந்துகளில் 16 நான்கு ஓட்டம் அடங்கலாக 124 ஓட்டத்துடனும், லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 8 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 94 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ரஸல், உஷேன் தோமஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
photo credit :ICC
நன்றி வீரகேசரி









மேற்கிந்தியத்தீவுகளை நிலைகுலைய வைத்த பங்களாதேஷ் இணைப்பாட்டம்

18/06/2019 பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சஹிப் அல்ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இணைந்து நேற்றைய போட்டியில் இணைப்பாட்ட சாதனையொன்றை பதிவுசெய்துள்ளனர். 
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று மணிக்கு டவுன்டனில் இடம்பெற்றது.
இப் போட்டியில் பங்களாதேஷ் அணி பொறுப்பான ஆட்டத்தனால் மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த 322 என்ற இமாலய இலக்கினை 7 விக்கெட்டுக்களினால் கடந்து வெற்றிபெற்றது.
இப் போட்டியில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடும்போது 4 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த சஹிப் அல்ஹசன் - லிட்டன் தாஸ் இருவரும் இணைந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் ஆட்டமிழக்காதிருந்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிரந்தனர்.
இவர்கள் இருவம் பெற்றுக் கொண்ட 189 என்ற இந்த ஓட்டமே 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலக கிண்ண தொடரின் அதிகூடிய ஓட்டங்களாக தற்போது பதிவாகியுள்ளது.
இத் தொடரில் இவர்களுக்கு முன்னர் ஆரோன் பிஞ்ச் - ஸ்டீவ் ஸ்மித் இருவம் இணைந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஆவது விக்கெட்டுக்காக 173 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் - டேவிட் வோர்னர் இருவரும் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலாவது விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களையும், சஹுப் அல்ஹசன் - முஸ்பிகுர் ரஹும் இருவரும் இணைந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து

18/06/2019 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் 3.00 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 150 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஷ்மதுல்லா ஷாஹிடி 76 ஓட்டத்தையும் ரஹ்மத் ஷா 46 ஓட்டத்தையும், அஸ்கர் ஆப்கான் 44 ஓட்டத்தையும், குல்பாடின் நைய்ப் 37 ஓட்டத்தையும், நஜிபுல்லா ஸத்ரான் 15 ஓட்டத்தையும் மொஹமட் நபி 9 ஓட்டத்தையும், ரஷித் கான் 8 ஓட்டத்யைும் பெற்று ஆட்டமிழந்ததுடன் இக்ரம் அலி கில் 3 ஓட்டத்துடனும் டூவ்லத் சத்ரான் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் மற்றும் ஜோப்ர ஆச்சர் தலா 3 விக்கெட்டுக்களையும், மார்க்வூட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
நன்றி வீரகேசரி











நேற்றைய ஆட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பல சரித்திரங்கள்!

19/06/2019 ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று மான்செஸ்டரில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டில் போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களினால் அபரமாக வெற்றிபெற்றது.
இந் நிலையில் இப் போட்டியானது இங்கிலாந்து அணிக்கு மாத்திரமல்லாமல் ஐ.சி.சி.க்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியாக அமைந்துள்ளது. காரணம் இந்த ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்யபட்டிருந்த பல சாதனைகளை மாற்றியமைத்துள்ளது.
அவையாவன :
1. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்கள் 397.
கடந்த 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 417 ஓட்டத்தையும், 2007 ஆம் ஆண்டு இந்திய அணி பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ஓட்டத்தையும், 2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி அயர்லாந்துக்கு எதிராக 411 ஓட்டத்தையும், அதே ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டத்தையும், 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி கென்னியாவுக்கு எதிரான போட்டியில் 398 ஓட்டங்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்துள்ளன.
2. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய வீரராக இயன் மோர்கன் (17 சிக்ஸர்)
கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் சர்மா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களையும், 2015 ஆம் ஆண்டு எ.பி.டி.வில்லியர்ஸ் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களையும், 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெய்ல் சிம்பாவ்வே அணிக்கு எதிரான போட்டியில் 16 சிக்ஸர்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விளாசியுள்ளனர்.
3. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் வேகமாக சதம் விளாசிய நான்காவது வீரராக இயன் மோர்கன்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியின் கேவின் ஒ பிரைய்ன் இங்கிலாந்து அணியுடான போட்டியில் 50 பந்துகளிலும், 2015 ஆம் ஆண்டு மெக்ஸ்வெல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளிலும், எ.பி.டி.வில்லியர்ஸ் அதே ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளிலும் சர்வதேச ஒருநாள் உலகக கிண்ண கிரிக்கெட் அரங்கில் ஏற்கனவே சதத்தை வேகமாக பூர்த்தி செய்துள்ளனர். 
4. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய அணியாக இங்கிலாந்து (25).
இங்கிலாந்து அணி ஏற்கனவே 24 ஆறு ஓட்டங்களை விளாசியுள்ள நிலையில் அந்த சாதனையை மீண்டும் முறியடித்துள்ளது.
5. சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை வழங்கிய மூன்றாவது வீரராக ரஷித் கான் - 0-110 (9).
கடந்த 1983 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியின் மார்டின் ஸ்னேடென் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 12 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 105 ஓட்டங்களையும், 2015 ஆம் ஆண்டு ஜோசன் ஹோல்டர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 10 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 104 ஓட்டங்களையும், அதே ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் டூவ்லத் சத்ரான் அவுஸ்திரேலிய அணியுடான போட்டியில் 101 ஓட்டங்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் அரங்கில் வழங்கியுள்ளனர்.
6. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்ஸர்களை வழங்கிய வீரராக ரஷித் கான் (11 சிக்ஸர்).
7. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மான்செஸ்டர் - ஒல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த இங்கிலாந்து (397-6).
கடந்த 16 ஆம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்களையும், 2006 ஆம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக 318 ஓட்டங்களையும் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பதிவுசெய்துள்ளன. 
8. சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிகூடிய சிக்ஸர்கள் பதிவுசெய்யப்பட்ட போட்டியாக நேற்றைய போட்டி (33).
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இங்கிலந்து - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 24 சிக்ஸர்கள் பெறப்பட்டது.
9. சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் இணைப்பாட்டமாக அதிகூடிய ஓட்டங்களை பதிவுசெய்த ரூட் - மோர்கன் (189)
கடந்த 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டென்னிஸ் அமிஸ் - கீத் பிளெட்சர் இருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 176 ஓட்டத்தையும், 2015 ஆம் ஆண்டு மெயின் அலி - இயன் பெல் இருவரம் இணைந்து இணைப்பாட்டமாக 172 ஓட்டத்தையும் சர்வதேச ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே பதிவுசெய்திருந்தனர்.   நன்றி வீரகேசரி 











நிதானமாக ஆடி 241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா

19/06/2019 நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 241 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இன்று மாலை பர்மிங்காமில் ஆரம்பமானது.
இப் போட்டியானது மழை காரணமாக நேரம் தாழ்த்தி ஆரம்பமானதால் ஓவர்களின் எண்ணிக்கை 49 ஆக மட்டுப்படுத்தப்பட்டது. 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்க அணிசார்பில் டீகொக் 5 ஓட்டத்துடனும், அம்லா 55 (83) ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 23 (35) ஓட்டத்துடனும், மில்லிர் 36 (37) ஓட்டத்துடனும், பெஹ்லுக்வேயோ டக்கவுட்டுடனும், வேன்டெர் டஸ்ஸன் 67 (64) ஓட்டத்துடனும் கிறிஸ் மோரிஸ் 6 (7) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குஷன் 3 விக்கெட்டுக்களையும், ட்ரெண்ட் போல்ட், கிரேண்ட்ஹோம் மற்றும் மிட்செல் சாண்டனர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி










வெளியேறும் நிலையில் தென்னாபிரிக்கா!

20/06/2019 தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நேற்று பர்மிங்காமில் இடம்பெற்றது.
இப் போட்டியானது மழை காரணமாக நேரம் தாழ்த்தி ஆரம்பமானதால் ஓவர்களின் எண்ணிக்கை 49 ஆக மட்டுப்படுத்தப்பட்டது. 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
242 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டில் 35 ஓட்டத்தையும், முன்ரோ 9 ஓட்டத்தையும், ரோஸ் டெய்லர் மற்றும் டொம் லெதம் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் 23 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 60 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 138 பந்துகளில் 9 நான்கு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 106 ஓட்டத்துடனும், மிட்செல் சண்டனர் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் தென்னாபரிக்க அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுக்களையும், ரபடா, லுங்கி நிகிடி மற்றும் பெஹ்லுக்வேயோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறாது, தொடரிலிருந்து வெளியேறும் வாய்ப்பு அநேகமாக உறுதியாகிவிட்டது. 
3 புள்ளியுடன் உள்ள தென்னாபிரிக்க அணி ஏனைய 3 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் பலன் இல்லை. ஒரு வேளை ரன்ரேட்டில் நல்ல நிலையை அடைந்தால் வாய்ப்பு கிட்டலாம். 
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி 











பங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி

20/06/2019 வோர்னர், கவாஜா மற்றும் பிஞ்ச் ஆகியோரின் வலுவான துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 381 ஓட்டங்களை குவித்துள்ளது. 
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் பங்களாதேஷ் அணியின் பந்துகளை துல்லியமாக எதிர்கொண்டு நல்லதொரு வலுவான ஆரம்பத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
அதன்படி அவுஸ்திரேலிய அணி முதல் 10 ஓவரில் 53 ஓட்டத்தையும், 15 ஓவரில் 86 ஓட்டத்தையும், 20 ஓவரில் 117 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது.
இதனிடையே 14 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் டேவிட் வோர்னர் அரைசதம் விளாச, மறுமுணையில் ஆரோன் பிஞ்ச் 19.4 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார். எனினும் பிஞ்ச் 20.5 ஆவது ஓவரில் மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இதனால் அவுஸ்திரேலிய அணியின் முதலாவது விக்கெட் 121 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக உஷ்மன் கவாஜா களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர அவுஸ்திரேலிய அணி 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 168 ஓட்டங்களை குவித்தது.
32.2 ஆவது ஓவரில் டேவிட் வோர்னர் சதத்தை பூர்த்தி செய்ததுடன் அதிரடியாட்டத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்திவர அவுஸ்திரேலிய அணி 40 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 250 ஓட்டங்களை குவித்தது.
இந் நிலையில் 42 ஆவது ஓவருக்காக முஷ்பிகுர் ரஹ்மான் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட உஷ்மன் கவாஜா அந்த ஓவரில் நான்கு 4 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். மொத்தமாக அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது. 
அது மாத்திரமல்லாது டேவிட் வோர்னர் 42.3 ஆவது ஓவரில் டேவிட் வோர்னர் 150 ஓட்டங்களை பூர்த்திசெய்தார் எனினும் அவர் 44.2 ஓவரில் மொத்தமாக 147 பந்துகளை எதிர்கொண்டு 14 நான்கு ஓட்டம், 5 ஆறு ஓட்டம் அடங்கலாக 166 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்காக மெக்ஸ்வெல் ஆடுகளம் புகுந்தாட அவுஸ்திரேலிய அணி 45 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து மெக்ஸ்வெல் மற்றும் கவஜா இணைந்து பங்களாதேஷ் அணியின் பந்துகளை தெறிக்க விட 46 ஆவது ஓவரில் மாத்திரம் ஆவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களை பெற்றதுடன் 46.1 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல்லின் ஒரு சிக்ஸருடன் 350 ஓட்டங்களை கடந்தது.
இந் நிலையில் 46.2 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் மொத்தமாக 10 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 32 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க கவாஜாவும் 46.5 ஆவது ஓவரில் மொத்தமாக 72 பந்துகளை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டம் அடங்கலாக 89 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (353-4).
மெக்ஸ்வெல் - கவாஜா இருவரும் இணைந்து வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணி 400 ஓட்டங்களை கடக்கும் என ஒரு கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும் இவர்களின் ஆட்டமிழப்பு அதனை பூர்த்தி செய்யாது போனது.
அவுஸ்திரேலிய அணி 49 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 368 ஓட்டங்களை பெற்றபோது போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சற்று நேரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டது. ஆடுகளத்தில் ஸ்டோனிஸ் 6 ஓட்டத்துடனும், அலெக்ஸ் கரி 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர் இதன் பின்னர் இலங்கை நேரப்படி இரவு 7.00 மணியளவில் மழை விட்டதும் போட்டி ஆரம்பமானது. 
இறுதியாக அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில்  5 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை குவித்தது 
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் சவுமி சர்கார் 3 விக்கெட்டுக்களையும், முஸ்தாபிகுர் ரஹும் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி











இறுதி வரை போராடிய முஷ்பிகுர் !

20/06/2019 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48  ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. 
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது.
382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவரும்போது 3.5 ஆவது ஓவரில் அனாவசிமாக சவுமி சர்கார் 10 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதன்படி பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டமை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இருப்பினும் அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கி சகிப் அல்ஹசனுடன் தமீம் இக்பால் கைகோர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இதனால் பங்களாதேஷ் அணி 10 ஓவர்களின் முடிவில் 53 ஓட்டத்தையும், 15 ஓவர்கள் முடிவில் 84 ஓட்டத்தையும் 18 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களையும் கடந்தது.
இந் நிலையில் 18.1 ஆவது ஓவரில் ஸ்டொனிஸுடைய பந்து வீச்சில் சகிப் அல்ஹசன் 41 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி 102 இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 
தொடர்ந்து களமிறங்கிய முஷ்பிகுர் ரஹுமுடன் ஜோடி சேர்ந்தாட ஆரம்பித்த தமீம் இக்பால் 20.4 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்திசெய்தார். எனினும் அவர் 24.1 ஆவது ஓவரில் மிச்செல் ஸ்டாக்குடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் வந்த லிட்டன் தாஸும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி 29.2 ஆவது ஓவரில் 20 ஓட்டத்துடன் வெளியேறினார். இதனால் பங்களாதேஷ் அணி 29.2 ஓவரில் 175 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது.
இதன் பின்னர் வெற்றியின் வாய்ப்பு அவுஸ்திரேலிய அணிக்கு அதிகமாக காணப்பட்டபோதிலும் பின்னர் ஜோடி சேர்ந்தாடிய மாமதுல்லா மற்றும் மற்றும் முஷ்பிகுர் ரஹும் அதிரடி மூலம் அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை சிதறடித்தனர்.
அதனால் பங்களாதேஷ் அணி 34 ஓவரில் 200 ஓட்டங்களை கடந்ததுடன், 40 ஓவரில் 245 ஓட்டங்கயைும் பெற்றது.
இந் நிலையில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 60 பந்துகளுக்கு 136 ஓட்டங்கள் தேவைப்பட்டது எனினும் ஆடுகளத்தில் இருந்த முஷ்பிகுர் மற்றும் மாமதுல்லா ஆகியோர் தொடர்ந்தும் போராடி வந்தனர்.
45 ஓவரில் பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 82 ஓட்டம் தேவை என்ற நிலை உருவானது. கடினமான இலக்கு என எண்ணி போராட்டத்தை கைவிடாத பங்களாதேஷ் அணியினர் தொடர்ந்தும் அதிரடி மூலம் மைதானத்தை அதிர வைத்தனர்.
இருப்பினும் 45.3 ஆவது ஓவரல் மாமதுல்லா மொத்தமாக 50 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த சபீர் ரஹ்மான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்மிழந்தார்.
இதனால் அந்த ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கொல்டர் நைல்லுக்கு ஹெட்ரிக் எடுக்கும் வாய்ப்பொன்று கிட்டியது, இருந்தபோதும் அந்த வாய்ப்பினை அடுத்து களமிறங்கிய மெய்டி ஹசான் தகர்த்தார். 
இறுதியாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்று, 48 ஓட்டத்தனால் தோல்வியை சந்தித்தது.
ஆடுகளத்தில் முஷ்பிகுர் ரஹும் 97 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 102 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். 
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்செல் ஸ்டாக், கொல்டர் நைல் மற்ஸம் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், சாம்பா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
photo credit : icc
நன்றி வீரகேசரி










மீண்டும் சொதப்பலாக ஆடி முடித்த இலங்கை!

21/06/2019 மீண்டும் ஒரு மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக 232 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடனும், குசல் பெரேரா இரண்டு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 2.2 ஓவர்களுக்கு 3 ஓட்டங்களக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து மோசமான ஆரம்பத்தை பெற்றது.
மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்தக குசல் மெண்டீஸ் - அவிஸ்க பெர்னாண்டோ சற்று நேரம் இங்கிலாந்து அணியின் பந்துகளுக்கு தாக்குப்பிடித்தாட இலங்கை அணி 10.4 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது.
இந் நிலையில் ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஸ்க பெர்னாண்டோ 12.5 ஆவது ஓவரில் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 49 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
தொடர்ந்து மெத்தியூஸ் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவர  29.4 ஆவது ஓவரில் குசல் மெண்டீஸ் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஜீவன் மெண்டீஸும் எதிர்கொண்ட முதல் பந்தில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே நடையை கட்டினார். 
இதனால் இலங்கை அணி 29.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டத்தை பெற்றது. 6 ஆவது விக்கெட்டுக்காக தனஞ்சய டிசில்வா களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 40.5 ஆவது ஓவரில் மெத்தியூஸ் மொத்தமாக 84 பந்துகளில் அரைசதம் பெற்றார்.
இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆடுகளத்தில் மெத்தியூஸ் 85 ஓட்டத்துடனும், நுவான் பிரதீப் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேப்ர ஆர்ச்சர், மார்க்வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
photo credit : ICC
நன்றி வீரகேசரி










பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை!

21/06/2019 துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஒட்டத்தை மாத்திரம் பெற்று 20 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் வின்ஸ் 14 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ டக்கவுட் முறையிலும், ஜோ ரூட் 57 ஓட்டத்துடனும் இயன் மோர்கன் 21 ஓட்டத்துடனும், பட்லர் 10 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 16 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ஓட்டத்துடனும், அடில் ரஷித் ஒரு ஓட்டத்துடனும், ஜோப்ர ஆச்சர் 3 ஓட்டத்துடனும், மார்க்வூட் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், இங்கிலாந்தின் வெற்றிக்காக இறுதிவரை அதிரடியாக போராடிய பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 89 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 82 ஓட்டத்துடன் ஆடடமிழக்காதிருந்தார். 
இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்தாலும் பந்து வீச்சினால் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்தனர். குறிப்பாக லசித் மலிங்க 10 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 43 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுக்களையும், இசுறு உதான 8 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 41 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 8 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 32 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் 10 ஓவருக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 38 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.  
போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மலிங்க தேர்வானார்.
photo credit : ICC
நன்றி வீரகேசரி










இலங்கை அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டு

22/06/2019 
2019 உலககிண்ண தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணியின் மிகச்சிறந்த விளையாட்டு என பாராட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்டத்தின் மூலம் சாதிக்க முடியாததை பந்து வீச்சின் மூலம் ஈடுசெய்தனர்  என குறிப்பிட்டுள்ளார்.
மலிங்கவும் சக வீரர்களும் மிகவும் நேர்த்தியாக விளையாடினார்கள் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்தனர் என தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து அணி இந்தியா அவுஸ்திரேலியா தென்னாபிரிக்காவுடன் இனி விளையாடவேண்டியுள்ளதால் உலக கிண்ணப்போட்டிகளில் சில ஆச்சரியங்கள் நிகழக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெற்றி உலக கிண்ணத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது என சொயிப் அக்தர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் வெற்றியை பாராட்டியுள்ள விவிஎஸ் லக்ஸ்மன் முக்கியமான நெருக்கடியான தருணங்களில் அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதை மலிங்கவும் மத்தியுசும் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் சுரேஸ் ரெய்னாவும் இலங்கை அணியை பாராட்டியுள்ளனர்.
உலக கிண்ண தொடர் இந்த வெற்றியின் பின்னர் இறுக்கமானதாக மாறியுள்ளது என சுரேஸ்ரெய்னா ரிவித்துள்ளார்.
லசித்மலிங்க தனஞ்செய டி சில்வாவின் பந்துவீச்சினால் உத்வேகம் பெற்று பெறப்பட்ட மிகச்சிறந்த வெற்றியிது என  தெரிவித்துள்ள குமார்சங்ககார இலங்கை அணி தன்னை நம்புவதற்கான ஊக்கியாக இந்த வெற்றி விளங்கும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
இனி தங்கள் திறமையை வெளிப்படுத்தவேண்டியது துடுப்பாட்ட வீரர்களே  என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி வெற்றிபெறும் என எவரும் கருதவில்லை என தெரிவித்துள்ள ரசல் ஆர்னோல்ட் மத்தியுஸ் சிறப்பாக ஆடவேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 











சமியின் ஹெட்ரிக்கின் உதவியுடன் போராடி ஆப்கானை வென்றது இந்தியா

23/06/2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிகொண்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று பகல் 3 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நாணயசுலட்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.
ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்தே காணப்பட்டது. 
ஆனாலும் விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். இதன்போது கோலி 67 ஓட்டத்துடனும், கேதார் ஜாதவ் 52 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 225 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஸ்மதுல்லா சசாயும், அணித் தலைவர் குல்பதின் நயிபும் துடுப்பெடுத்தாடினர். இந்நிலையில் நயிப் 27 ஓட்டத்துடனும், ரஹ்மத் ஷா 34 ஓட்டத்துடனும் ஹஸ்மதுல்லா ஷஹிதி 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மொகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதி ஓவரில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டீதோள்வியுள்ளது. இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இறுதி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்
இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







No comments: