சிட்னி இசை விழா 2019 – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
சிட்னி இசை விழா வருடாவருடம், மகாராணியாரது பிறந்த தினத்தை ஒட்டி வரும் 3 நாள் விடுமுறையில் யூன் மாதம் நடைபெறுவது. கடந்த 13 வருடங்களாக தவறாது பார்த்து வரும் ரசிகர்களில் நானும் ஒருத்தி. இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி. 

இது 20 துக்கும் அதிகமான தேர்ந்த கர்நாடக கலைஞர்கள் சிட்னிக்கு வருகை தந்து, அந்த மூன்று நாட்களும் காலை தொடக்கம் மாலை வரை தினம் தினம் வேறுபட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்த வண்ணமே இருக்கும். இதை கேட்டு இரசிக்க மண்டபம் நிறைந்த கூட்டம், இசையிலே தம்மை மறந்து இரசிப்பார்கள். இது பொப் இசையல்ல. சுப்பர் சிங்கர்களவு அல்ல. சுத்த கர்நாடக இசை.  பாரம்பரிய தூய சாஸ்தீரிய சங்கீதம். அதன் சக்திதான் மக்கள் மனங்களை தன்பால் கவர்ந்து 3 நாட்கள் மக்களை கட்டுண்ட நாதமாக தன்னை மறந்து இரசிக்க வைத்தது. நாதத்தால் இறையை அடைய வரம். ஆம் பிசகற்ற சாஸ்திரீய இசை தெய்வீக சக்தியை உணரவைத்தது. அந்த உணர்வை பெற அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளின் இருந்து மட்டுமல்ல கடல்கடந்து New Zealandயில் இருந்தும் இரசிகர்கள் கூட்டம் வருவது வழமை. 

முதல் நாள் இசை நிகழ்வு இளம் கலைஞன் இரா மகிருஷ்ணமூர்த்தியது. அவசரமாக வீடு வரவேண்டியிருந்தது. தேர்ந்த இசைக்கலைஞர் 'பாவலன்' ஏனக்கா போறீங்கள் பிரமாதமாக பாடக்கூடிய இளைஞன் அல்லவா என்றார். மாலை கச்சேரிக்கு போனதும் பலரும் ஆகா எப்படி அருமையான இசை என ஒருவர். தமிழிலே பல பாடல்களை பாடி அசத்தினார் என ஒருவர் கூற கேட்டேன்.  கலிபோனியாவிலே பிறந்து வளர்ந்த பையன் கர்னாடக இசையால் கவரப்பட்டு தன் பட்டப்படிப்பு முடிந்ததும் முளு நேர இசை  கலைஞாகிவிட்டான். இசையின் சிகரம் என விளங்கும் "MUSIC ACADEMY' என்ற வித்துவ சபையில் சிறந்த இசை கலைஞர் என்ற விருதை 2016 இல் பெற்று விட்டார். இரா மகிருஷ்ணமூர்த்தி.
புல்லாங்குழலை விளையாட்டு பருவத்திலேயே வாசித்து மக்களை மயக்கிய பிறவி மேதை சேஷாங். எட்டு வயது பையனாக இவன் வாசித்ததை நாரததான சபாவில் கேட்டு மெய் மறந்தவரில் நானும் ஒருத்தி. சிட்னியிலும் இரண்டு வருடங்கட்கு முன் வந்து எம்மை தன் இசையால் கவர்ந்த மேதை ஷேஷாங். அப்படி ஒரு இசை கச்சேரியை எதிர் பார்த்தவருள் நானும் ஒருவர். ஷேஷாங் பூர்பான்ய சட்டஜீ என்ற சித்தார் மேதையுடன் இணைத்து நிகழ்ச்சி நடத்தினார். ஏன ரசனையிலே இருவரும் சேர்ந்து இசையின் உச்சத்தை எமக்கு உணர வைக்கவில்லை. இப்போ இப்படி வடக்கும், தெற்கும், முனைவது எல்லாம் வரவேற்கப் படுகிறது. புல வகையான கருத்து இரசனை. எமது வேணு வாத்திய கலைஞர் தேவகியிடம் கேட்டேன். அவரும் சேஷாங் இடம் உயர்ந்த கர்னாடக சங்கீதம் முன்போல வளங்குவார் என எதிர்பார்த்து ஏமாந்ததாகவே கூறினார்.

இரவு நிகழ்ச்சி 'மல்லாடி சகோதரர்' H,N. பாஸ்கர் K V பிரசாத் தேர்ந்த அனுபவபட்ட கலைஞர்.  தூய பாரம்பரரிய சங்கீதத்தும் நாத வெள்ளமாக பிரவாசித்தது இருவரும் இணைந்த இசை ஒருவருக் கொருவர் இணையாக இசைக்கும் அழகு அவர்கட்கே உரிய தனித்துவம்.  இசை உலகம் இருவர் இணைந்த இசை கலைஞர் இவர்கள் மக்கள் பாராட்டை அமோகமாக பெற்றார்கள்.

இரண்டாம் நாள் இசை நிகழ்ச்சி ஸ்ரீறஞ்ஜனி சந்தான கோபாலனுடன் ஆரம்பமானது இசை உலகிலே புகள்பெற்ற இசை மேதை சந்தானகோபாலரின் மகள். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்பது போன்ற சங்கீதம் வயதிலே இளையவரானாலும் அனுபவம் நிறைந்த கலைஞர் போல பாடும் திறனும் தன் சங்கீத திறமையாலும் வசீகர குறல் வளத்தாலும் எம்மை எல்லாம் கவர்ந்து விட்டார் ஸ்ரீறஞ்சனி தன் பங்குக்கு பல பல பரிசுகளை பெற்றுள்ள இவர் இசையில் இன்னம் நிறையவே சாதிப்பார் என்பதில் என்ன சந்தேகம்.

அடுத்து ஜெயந்தி குமரேஷ் இன் வீணையை இசையுடன் அணில் ஸ்ரீனிவாசனின் பியானோவும் இணைந்து நிகழ்ச்சி நடத்தது. மேற்கத்திய வாத்தியமான பியாநோவும் வாத்தியம் பல நுணுக்கங்களை கொண்டது. பழம் பெரும் தென்னக வாத்தியத்துடன் இணைந்து வாசிக்கப்பட்டது. இருவருமே தம் வாசிப்பில் மிக உன்னத கலைஞர்கள் ஜெயந்தியோ வீணை வாத்தியத்தை 3 வயதிலே வாசிக்க ஆரம்பித்து பல அங்கீகாரங்களையும் பெற்ற கலைஞர். ஆறு தலைமுறைகளான இசை பரம்பரையில் வந்தவர். ஆணில் மிக இளய வயதிலேயே 'இந்திய சங்கீத நாடக அக்கடமியின் அங்கீகாரத்தை பெற்றவர்கள். இருவருமாக இணைந்து கர்னாடக சங்கீதத்தின் பல பரிநாமங்களை அள்ளி வளங்கினார்கள். மண்டபத்தில் கூடியிருந்தோர்ரை இசை என்ற அந்த தெய்வீக கானத்தாலே எம்மை ஆட்கொண்டார்கள்h என எண்ண தோன்றியது.

இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சி சஞ்சாய் சுப்பிரமணியத்தினது. இன்று எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் மகா வித்துவான் அவர். அவர் இசை தனித்துவமானது. ஆபார திறமை பெற்ற இந்த இசைஆர் இசையிலே தன்னை இளந்து
இசைக்கையிலே தம்முடன் எம்மையும் இணைத்து உயர பறந்து இசையின் பல பரிமானங்களை காட்டி செல்வார். மறுகணமோ முகத்திலே ஒரு புன்கையுடன் எம்மை நிஜ உலகுக்கு அழைப்பது போல இருக்கும் மறுகணம் சங்கீதம் என்ற சாகரத்தில் எம்மை தன்னுடன் இணைந்து அணைத்து செல்லும் சங்கீதம். இசை உலகம் மதுரை மணிஐயர் செம்பை வயித்திய நாதர். ஜி. என். டீ என எத்தனையோ இசை சாம்ராச்சியம் நடத்தலை மேதைகளின் இசையை பரிவு செய்த பதிவாக கேட்டு மகிமே நாம் சஞ்சாயின் இசை சாமராட்சியத்தில் ஒர் அங்கமாக இணைந்து ரசிக்க கொடுத்து வைத்தவடிகள். இவர் பற்றி என்ன கூறுவேன் எப்படி கூறுவேன் கை கூப்பி என் மரியாதையை செலுத்துகிறேன்.

மூன்றாம் நாள் இசை நிகழ்ச்சியிலே இளம் கலைஞராக தோன்றியவர் பால முரளி கிறிஷ்ணா.  முதலிலே தந்தையை குருவாக பெற்றவர். பின் தேர்ந்த குருகளின் சிஷ்யராக இசை பயிற்சி பெற்றவர். இசை பாடும் கலைஞராக மட்டும் இராது மிருதங்கத்தையும் முறையாக கற்றவர். புகள் பெற்ற காரைக்குடி மணியிடமும் தனது மிருதங்க கலையை வழர்த்து கொண்டவர். இவை இவரது இசையை மேன்படுத்த உறு துணையாக உள்ளது. முருக பக்தரான இவர் முருகன் பாடல்களால் இறைக்கு இசை அபிஷேகம் செய்தார். வளர்ந்து வரும் துடிப்பான இளைஞன். வருங்காலத்திலே தனக்கென ஒரு தனி முத்திரை பதிக்கும் திறமையை காண முடிந்தது.

மூன்றாம் நாள் இறுதி இசை நிகழ்ச்சியாக நடைபெற்றது. றஞ்சினி, காயித்திரியின் இசைக் கச்சேரி. இவர்கள் இருவர் சேர்ந்தும் இணைந்தும் தனித் தனியேயும் இசைப்பது தனி இன்பம். அப்படி திறமை வாய்ந்த சகோதரிகள். பன்முகம் கொண்ட இசைக் கலைஞர்கள் மாபெரும் இசை மேதைகட்டு வயலின் பக்கவாத்தியம். வாசிக்கும் திறமை படைத்தவர்கள். வயலின் தனிக் கச்சேரியாகவும் இணைந்தும் வாசிப்பவர்கள் அவர்கள் இசையிலே ஆழ்ந்து ரசித்து இசையை இன்பவெள்ளமாக பெருக்குபவர்கள். இவர்கள் குரல் அதன் கம்பீரமும் குழைவும் இனிமையும் யாவரையும் தன் வயம் கவரும் சக்தி வாய்ந்தது. அற்புதமான குரலால் உணர்ச்சிமிக்க இசையை அள்ளி  வழங்குகிறார்கள்.

ஒத்திசை கலைஞர் இவைகள் இசையை மெருகுற செய்யும் கலைஞ்ர்கள் , இவர்கள் இல்லாவிட்டால் இசை சேர்வை பெறாது. எப்போதுமே தனது ஆழ்ந்த சங்கீத ஞானத்தால் எம்மைக் கவருபவர் H,N.பாஸ்கர். இவர் தந்தை தாயாரையே முதல் குருக்களாக பெற்ற பாக்கியம் படைத்தவர். இவர் வயலின் ஒத்திசைக் கலைஞர் மட்டுமல்ல தணிக்க கச்சேரிகள் நடத்துவதுடன் சிறந்த இசை அமைப்பாளராகவும் திகழ்கிறார். அத்துடன் Jozz உடன் இணைந்து சர்வதேச அரங்குகளிலே வாசித்து வருபவர்.

இவ்வருடம் புதிதாக அறிமுகபபடுத்தப்படட வயலின் கலைஞர் விடடல்  ராகவன் 17 வயது மதிக்கத் தக்க இளைஞன். ஆனால் அவனுள் புதைந்துள்ள திறமையோ அபாரம். இந்த சின்னன் சிறு வயதிலேயே அவன் சங்கீத உலகின் யாம்பவான்களாகிய T V சங்கரநாராயணன், OS தியாகராஜன், T M  கிருஷ்ணா போன்றோருக்கு அணிசெய் கலைஞனாக வாசித்துள்ளான். இங்கு வருகை தந்த உயர்ந்த சிறந்த கலைஞர்களுக்கும் இந்த இளைஞன் திறமையாக வாசித்து மக்களின் ஏகோபித்த பாராடடைபி பெற்றான்.


மிருதங்க கலைஞரான K V பிரசாத் கடந்த 40 வருடங்களாக தலை சிறந்த கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்தது மட்டுமல்லாது சினிமா உலகின் பிரபலமான இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பல இசை அமைப்பில் பங்கு கொண்டவர். தனது ஆர்ப்பாட்டம்  இல்லாத ஆழ்ந்த வாசிப்பால் எம்மை எல்லாம் கவர்ந்தவர். இவரிடம் சிறிது நேரம் பேசிக் கிடைத்தது. இன்று பலரும் நட போட்டு சுருதி சேர்த்த மிருதங்கத்தை வாசிக்க இவர் வாரால் இறுக்கி வரிந்த பழமையான  மிருதங்கம் வாசிப்பார்.

கலையை தெய்வமாக மதிக்கும் கலைஞர் மிருதங்கத்தை உயிருள்ள வாத்தியமாக பராமரிக்கும் சிறப்பை உணர்ந்தேன். வாசிப்புக்கு நாதம் தான் உயிர். அந்த ஜீவனுள்ள மிருத்தங்கமே அதை வழங்கும் என்கிறார்.

தஞ்சாவூர் K முருகபூபதி சிட்னி ரசிகர்களுக்கு பழக்கப் பட்ட கலைஞர். பல வருட அனுபவம் மிக்க கலைஞர். மிருதங்க வித்துவான் தஞ்சாவூர் உபேந்திராவிடம் 10 வருடம் குருகுல வாசம் செய்து புடம் போடப்படட கலைஞர். இவர் குடும்ப பின்னணியோ தந்தையார் கல்யாணசுந்தரம் சிறந்த நடிகர், இசைக்க கலைஞர். புலிக்குப் பிறந்தது போனையாகுமா

பருப்பள்ளி பாலாஜி - மிருதங்க வித்துவான் சிட்னி இசைவிழவிட்கு புதியவர் டெல்லி சங்கீத நாடக அகாடமி வழங்கும் "பிஸ்மில்லகான்' பரிசைப் பெற்றவர். இவர் பல CD மற்றும் DVD இங்கும் வாசித்தவர் .

வட இந்திய முழவு வாத்தியமான தபேலா பொபி சிங்கால்  வாசிக்கப் பட்ட்து .
இவர் சேரின் புல்லாங் குழலுடன் இணைந்து சித்தாரா வாசித்தார். சித்தார் பிரபயன் சடடஜியுடன் இணைந்தும் வாசித்தவர்.பின் ஜெயந்தி குமரேஷ் வீணை, அணில் ஸ்ரீனிவாசன் பியானோ வுடன் வாசித்தார். பொபி  கர்நாடக இசைக்களைஞரான சேஷால்  மற்றும் மிருதங்க கலைஞர் காரைக்குடி மணி போன்றோருடன் இணைந்து வாசித்துள்ளார். தன ஆர்ப்பாடடமில்லா வாசிப்பால் எம்மைக் கவர்ந்தார்.

சிட்னி இசை விழா 2019 இல் நடந்த இசை நிகழ்ச்சி பற்றி மேலோட்ட்மாக பார்த்தோம். இங்கு மூன்று நாட்களும் நடந்த ஆடல் நிகழ்ச்சியை தனித்துப் பார்ப்பதே சிறந்தது.

நிகழ்ச்சியை பலவருடங்களாக தொகுத்து வழங்கும் நந்தனா தனது சிறப்பான ஆங்கிலம் மூலம் கலைஞரை அறிமுகம் செய்வது முதல் இசைக்க கச்சேரி நிறைவு பெற்றதும் அந்த இசை நுணுக்கங்களை வியந்து பாராட்டி நிகழ்ச்சியை சிறப்புற நடத்தி செல்லும் திறமை வாய்ந்தவர். அவரும் இசை விழாவை சிறப்பிக்கும் முக்கிய பங்கை கடந்த பல வருடங்களாக செய்து  வருகிறார்.

இத்தனைக்கும் பின்னால்  உழைக்கும் ஜெயேந்திரன் குடும்பம். இவர்களுக்கு இசைக்க கலைஞர் தொட்டு இரசிகர்கள் அத்தனை பெரும் கடமைப் படடவர்களே. இத்தனை போரையும் ஒன்றிணைத்து எவ்வித இடர்பாடும் இல்லாமல் ஒழுங்கு முறை தவறாது நேரத்தை வகுத்து, கலைஞரை அழைத்து தங்கு வசதி முதற்  கொண்டு சகலத்தையும் செய்து , இறுதியாக உன்னதமான நிகழ்ச்சியை வழங்கும்  ஜெயேந்திரன் குடும்பம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.













No comments: