உலகச் செய்திகள்


சுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி

நீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி

10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு

தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்

நியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு  சிறை தண்டனை

ஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி

நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: இந்திய அரசை 

விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெறும் தவரை செய்துவிட்டது : ட்ரம்ப்

ஈரான் மீது உடனடி தாக்குதலிற்கு உத்தரவிட்ட டிரம்ப்-பின்னர் நடந்தது என்ன?

ஈரான் மீதான தாக்குதலை இறுதி நேரத்தில் ஏன் நிறுத்தினேன் ? டிரம்ப் விளக்கம்

வடகொரியா சென்றடைந்த சீன ஜனாதிபதி! 

நியூசிலாந்து மசூதித் தாக்குதல் எதிரொலி ; மக்களிடம் இருந்து துப்பாக்கிகள் களைவுசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி

18/06/2019 இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் அதற்கு நேர் மாறாக வட மாநிலங்களில் வெயில் கடுமையாகி இருக்கிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் வைத்தியவாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேரும் கயா மாவட்டத்தில் 28 பேரும் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாகத் தாக்கி வருகிறது.
இந்நிலையில் முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால்
பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நேரத்தில் வெயில் கொடுமை, மூளைக்காய்ச்சல் என இரட்டை தாக்குதலுக்கு பீகார் உள்ளாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.   நன்றி வீரகேசரி 

நீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி

18/06/2019 எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவுச் செய்யப்பட்டவர்  67 வயதான முகமது மோர்சி ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. 
 இதையடுத்து, கடந்த ஜூலை 2013 இல் அந்நாட்டு இராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள்  அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் மோர்சி திங்கட்கிழமை ஆஜரானார். கண்ணாடி கூண்டுக்குள் இருந்த பேசிய அவர் தம்மிடம் பல இரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது திடீரென நீதிமன்றத்திலேலே மயங்கி விழுந்தார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு

18/06/2019 கனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமாகக் குறித்த பகுதியில் 10 இலட்சம் பேர்  கூடியிருந்தனர்.
இந்நிலையிலேயே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர்  அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்

19/06/2019 நைஜீரியாவில் உள்ள பிரபல கால்பந்தாட்ட மைதானமொன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ''கொண்டுகா'' என்ற நகரில், உள்ளூர் கால்பந்து போட்டியின் ஆட்டத்தை நேரடியாகப் பார்வையிட, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், மைதானத்தில் சூழ்ந்திருந்தனர். அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி வந்த தீவிரவாதிகள் மூவர், ரசிகர்கள் நிறைந்திருந்த பகுதிக்குள் புகுந்து, தமது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.இதில், 30க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், உடல் சிதறி பலியாகியுள்ளதோடு, 
இத் தாக்குதலில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குறித்த பகுதியில் அடிக்கடி, தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 
நியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு  சிறை தண்டனை

19/06/2019 நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம்  தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபருக்கு  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி துப்பாக்கி ஏந்திய நபர்  கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். இறுதியில், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான அவுஸ்திரேலிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப பட்டபோது அதனை பல இணையதள பயனாளர்கள் பகிர்ந்தனர். அதனை பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் தங்களது வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கின. 
இவ்வாறு நியூசிலாந்து துப்பாக்கி சூடு தாக்குதலை சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்ததாக கிரைஸ்ட்சேர்ச் பகுதியை சேர்ந்த பிலிப் ஆர்ப்ஸ் என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். 
இது குறித்த விசாரணை நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி கூறியதாவது:- 
நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை குற்றவாளி பிலிப் ஆர்ப்ஸ் மனிதாபிமானம் இன்றி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து உள்ளார். 
இத்தகைய இரக்கம் அற்ற செயலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அதனை மிகவும் அருமையான காட்சி என வர்ணித்துள்ளார். இது மிகப்பெரிய குற்றம் ஆகையால், குற்றம் சாட்டப்பட்ட பிலிப் ஆர்ப்ஸ்க்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கிறேனன் என  நீதிபதி கூறியுள்ளார்.  நன்றி வீரகேசரி 

ஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி

19/06/2019 விமானந்தாங்கி கப்பலை தாக்ககூடிய கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதாக ஈரானின் முக்கிய இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதி  மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளதன் காரணமாக பிராந்தியத்தில்  அதிகார சமநிலை ஈரானிற்கு சாதகமானதாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களின் ஆதிக்கத்திற்கு முடிவை காண்பதற்காக 12 வருடங்களிற்கு முன்னரே ஈரான் ஏவுகணைகளை பரிசோதனை செய்து பார்த்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் இந்த தொழில்நுட்பமிருந்தால் எங்களால் எதிரிகளை இலக்குவைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ள ஹொசைன் சலாமி நாங்கள் ஏவுகணைகள் மூலம் கடலில் இலக்குகளை துல்லியமாக முடியுமா என பரிசோதனை செய்துபார்த்தோம் அன்றைய தினம் எங்களால் அதிகார சமநிலையை மாற்ற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 
நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: இந்திய அரசை 

22/06/2019 கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார துறை தெரிவித்துள்ளது. 
கடந்த ஜனவரி 12ஆம் திகதி அன்று  தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூஸிலாந்தை நோக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் பயணத்தை தொடங்கி யிருந்தனர். பயணத்தை தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் அவர்களின் இருப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 
இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை  ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள வெளிவிவகாரத்துறை பேச்சாளர் ரவீஷ் குமார்,
“பசிபிக் கடலை நோக்கி இப்படி ஒரு படகு சென்றிருப்பதை கேரள அரசாங்கம் தெரிவித்திருந்தது. குறித்த பகுதியிலுள்ள நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ள போதிலும், எந்த நாட்டிடமிருந்தும்) எந்த தகவலும் கிடைக்கவில்லை,” என தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 12நாள் குழந்தை உட்பட 85 குழந்தைகள் அப்படகில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டில்லியிலுள்ள மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. 
இவர்களின் நிலைக்குறித்து கண்டறிய படகில் சென்றவர்களின் விபரங்களை உள்துறை, வெளிவிவகாரதுறை, டில்லி அரசாங்கம், தேசிய மனித உரிமை ஆணையகம் உள்ளிட்ட பலத்தரப்புக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெறும் தவரை செய்துவிட்டது : ட்ரம்ப்

21/06/2019 ஆழில்லா அமெரிக்க உழவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்தியது கண்டனதுக்குரியது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே  பதற்றம் நிலை உருவாகியுள்ளது.
இச்சம்பத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 
தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு செய்துவிட்டது என சமூகவலைத்தளமான  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 


ஈரான் மீது உடனடி தாக்குதலிற்கு உத்தரவிட்ட டிரம்ப்-பின்னர் நடந்தது என்ன?

21/06/2019 ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான  அனுமதியை வழங்கிய பின்னர் நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவை வாபஸ்பெற்றுள்ளார்.
நியுயோர்க் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தாக்குதலிற்கான நடவடிக்கைகள் தயார்நிலையிலிருந்தன கப்பல்களும் விமானங்களும் தயார்நிலையிலிருந்தன என தெரிவித்துள்ள நியுயோர்க்டைம்ஸ்  அவ்வேளையே தாக்குதல் திட்டத்தை கைவிடுமாறு உத்தரவு வந்தது என சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மக்களிற்கும் ஈரானிய இராணுவத்தினருக்கும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில் வெள்ளிக்கிழமை  காலை ஈரானிய இலக்குகளை தாக்கும் விதத்தில் அமெரிக்கா தயாராகயிருந்தது எனவும் நியுயோர்க்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
படையதிகாரிகளும்  இராஜதந்திர அதிகாரிகளும் தாக்குதலை எதிர்பார்த்திருந்தனர்,என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் ஈரானின் ராடார்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தும் சாதனங்களை தாக்குதவதற்கான  அனுமதியை டிரம்ப் வழங்கியிருந்தார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பின்னர் டிரம்ப் மனமாறியதற்கான காரணம் என்னவென தகவல்கள் வெளியாகவில்லை.
இதேNவைள இந்த தகவலிற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
;அமெரிக்காவின்  ஆளில்லாத விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதை தொடர்ந்து இரு நாடுகளிற்கும் இடையிலான பதற்றநிலை பலமடங்காக அதிகரித்துள்ளது.
ஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் வேவுவிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.
ஆர்கியு 4- குளோபல்ஹவ்க் ரக ஆளில்லா விமானத்தையே சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்தவேளையே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் குறிப்பிட்டுள்ளது
தனது ஆளில்லா விமானமொன்று விழுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்கா எனினும் சர்வதேச வான்வெளியில் பயணித்துக்கொண்டிருந்தது என தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 

ஈரான் மீதான தாக்குதலை இறுதி நேரத்தில் ஏன் நிறுத்தினேன் ? டிரம்ப் விளக்கம்

22/06/2019 அமெரிக்காவின் தாக்குதலால் 150ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்படலாம் என மதிப்பிடப்பட்டதாலேயே ஈரான் மீதான தாக்குதலை இறுதிநேரத்தில் நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் செய்தியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் வியாழக்கிழமையிரவு தாக்குதலை மேற்கொள்வதற்கான முழுமையான தயார் நிலையிலிருந்தோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் தாக்குதலால் 150 பேர் வரை கொல்லப்படுவார்கள் என எனக்கு தெரிவிக்கப்பட்டதால் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னர் அதனை நிறுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆளில்லாத விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்காக 150 பேரை கொல்வது  பொருத்தமான நடவடிக்கையில்லை என கருதியதாலேயே தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மேற்கொள்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் படையதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்  அவ்வேளை இந்த தாக்குதல் காரணமாக எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்பது குறித்து மாத்திரமே நான் அறியவிரும்பினேன் என டிரம்ப் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் என்னிடம் 150 பேர் வரை கொல்லப்படுவார்கள் என தெரிவித்தனர்  நான் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியமைக்காக 150 பேரை கொலை செய்வது அளவுக்கதிகமான நடவடிக்கை என கருதியதால் தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான  அனுமதியை வழங்கிய பின்னர் நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவை வாபஸ்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி வடகொரியா சென்றடைந்த சீன ஜனாதிபதி! 

20/06/2019 சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வட கொரியாவில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்புக்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று வடகொரியா சென்றடைந்துள்ளார்.
2005 ஆம் ஆண்டிலிருந்து சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறை. சீனாவில் இதுவரை இவர்கள் இருவரும் நான்கு முறை சந்தித்துள்ளனர். இவர்களின் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
வட கொரியாவின் முக்கிய வர்த்தக நட்பு நாடாகிய சீன அந்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக கருதப்படுகிறது.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு ஒரு வார காலம் முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


நியூசிலாந்து மசூதித் தாக்குதல் எதிரொலி ; மக்களிடம் இருந்து துப்பாக்கிகள் களைவு

21/06/2019 நியூசிலாந்தில் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் ஆகியவற்றை பொதுமக்களிடமிருந்து அந்நாட்டு அரசாங்கம் மீளப்பெற்று வருகிறது.
நியூஸிலாந்திலுள்ள மசூதீகளில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து இந்நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்  மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸார், மற்றும் படையினர் இணைந்து இவ்வாறான  சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மீட்கும் பணியை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பெரும்பலான பகுதிகளில் சட்டவிரோத குண்டுகள் மற்றும் துப்பாகிகள் உட்பட பல வகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி No comments: