சினிமாவில் சில இயக்குனர்கள், சில நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அண்மையில் சௌகிதார் என்ற வார்த்தை எப்படி பேசப்பட்டது என உங்களுக்கே தெரியும். அந்த சமயத்தில் வாட்மேன் என ஒரு நாயின் படத்தை வைத்து இயக்குனர் விஜய்யும், ஜி.வி.பிரகாஷும் பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். சரி வாருங்கள் படத்திற்குள் போவோம்.
கதைக்களம்
ஹீரோ ஜிவி.பிரகாஷ் மிக ஏழ்மையான குடும்பத்தின் மகன். அப்பா, அம்மா, அவர் என மூவர் தான். அவருக்கு நண்பராக யோகி பாபு. ஹீரோவுக்கு தொழிலில் ஏதோ சிறு நஷ்டம். அத்துடன் பணக்கார வீட்டு பெண் சம்யுக்தாவின் மீது அவருக்கு காதல் ஏற்படுகிறது.
காதலியால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். இதற்கிடையில் ஜிவிக்கு பணப்பிரச்சனைகள். பணத்திற்காக பல உதவிகள் தேடுகையில் விரக்தியால் திருட்டிக்காக பெரிய பங்களாவில் நுழைகிறார்.
அங்கே ஆள் அரவம் இல்லாதது போல இருக்கும் நேரத்தில் அந்த வீட்டு காவலாளியான நாய் இவரை பிடித்து விடுகிறது. ஆனால் பங்களா உள்ளுக்குள் பல எதிர்பாராத பயங்கர சம்பவங்கள் நடைபெறுகிறது.
அதில் மாட்டிக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் அந்த சம்பவத்திலிருந்து தப்பித்தாரா, பங்களாவுக்கு உள்ளே நடந்து என்ன? அவரின் காதல் திருமணம் கைகூடியதா என்பதே முழுக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரு இசையமைப்பாளராக பல பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் ஜிவி. தற்போது முழுநேர நடிகராக அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக போராடி வருகிறார். கடந்த வாரத்தில் வந்த குப்பத்து ராஜா படத்தை தொடர்ந்து அவருக்கு வாட்ச்மேன் இன்று வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் தன்னை எந்த வேடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இப்படத்திலும் காண்பித்திருக்கிறார். அதே வேளையில் இந்த படத்திற்கு அவர் தான் இசை. ஒரு திரில்லர் படத்திற்கு கான ஃபீல் கொடுத்திருக்கிறார்.
படத்தில் ஹீரோயின் சம்யுக்தாவுக்கான முக்கியத்துவம் குறைவு தான். ஆனால் ஹீரோ, ஹீரோயின் காட்சிகள் அங்கும் மிங்குமாக இருக்கிறதே தவிர ஜோடியாக அமையவில்லை.
படத்தில் நடிகர் சுமன் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கும் ஹீரோவுக்குமான ஒரு காட்சி யாரும் எதிர்பாராத டிவிஸ்ட். அது நாங்கள் இங்கே வைக்கும் ரகசியம். படத்தில் பாருங்கள். ஓகே.
யோகி பாபுவை பற்றி தவறாக சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்ன? இப்படத்தில் கொஞ்சம் கூட மிஸ் ஆகாத அவரின் எதார்தமான பேச்சு பலரையும் சிரிக்கவைக்கிறது.
இயக்குனர் விஜய் 1.30 மணி நேர கால நீளத்தில் வாட்ச்மேனை கொண்டுவந்திருக்கிறார். திரில்லர் சப்ஜெக்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை நோக்கியே அவர் சென்றுள்ளார் என்பதை படம் தெளிவாக காட்டுகிறது.
மேலும் இது என்ன மாயம் படத்திற்கு பிறகு இயக்குனரும், எடிட்டர் ஆண்டனியும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் இப்படத்தில் இணைந்து படத்தின் காட்சிகளை தெளிவாகவும், சரியாகவும் கொண்டுசென்றுள்ளார்கள்.
கிளாப்ஸ்
படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரசியமான நகர்வு.
யோகி பாபுவின் கவுண்டர், காமெடி, தியேட்டரை சிரிப்பு களமாக்கியது.
ஒரு திரில்லர் படத்திற்கான பின்னணி இசை ரியலான ஒரு ஃபீல்.
பல்பஸ்
தொடர் டிவிஸ்ட் காட்சிகளை உடனே புரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
பாடல்களுக்கு, லவ் காட்சிகளுக்கு இயக்குனர் No சொன்னதேனோ?
மொத்தத்தில் வாட்ச்மேன் நம்மை கண்களை முழுமையாக படத்தை வாட்ச் பண்ண வைத்துள்ளது.
கதைக்கும் டைட்டிலும் சரியான பொருத்தம். எல்லோரும் பார்க்கலாம்.
நன்றி CineUlagam
No comments:
Post a Comment