மரண அறிவித்தல்

.


              திருமதி சிவநேசரத்தினம் குணரத்தினம் (ரதி)
மறைவு - 16.04.2019

இளைப்பாறிய பிரதி அதிபர் (கொக்குவில் இந்தக் கல்லூரி), முன்னாள் ஆசிரியர் யா/இந்துக் கல்லூரி, அனு /விவேகானந்தா கல்லூரி

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும், கொக்குவில் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி, சிவநேசரெத்தினம் .சி.குணரட்ணம் 16.04.2019 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவபாத சுந்தரம் - இரத்தினம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசம்பு குணரட்னத்தின் (விளையாட்டுத்துறை உதவிப்பணிப்பாளர்) அன்பு மனைவியும், பார்த்தீபன் (பொறியியலாளர்), பிரதீபன் (பொறியியலாளர்), சுகந்தீபன்  (முன்னாள் மருத்துவபீட மாணவன்), தர்சிகா (முன்னாள் உதவி முகாமையாளர் - மக்கள்வங்கி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், துஷ்யந்தி, யசீல (ஆசிரியர்), தயாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பேராசிரியர் மகேஸ்வரன் (இரசாயனத்துறை - யாழ் பல்கலைக்கழகம்), ஞானேஸ்வரன் (பொறியியலாளர்), சுதந்திரேஸ்வரன் (தொழில்நுட்ப உதவியாளர்), இராஜேஸ்வரன் (பொறியியலாளர் - பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) மற்றும் திருமதி சிவநேசராணி பத்மநேசன் (ஒய்வு நிலை ஆசிரியர் - யா/திருக்குடும்ப கன்னியர் மடம்) திருமதி சிவநேசமலர் ஜெயபாலன் (ஒய்வு நிலா உப அதிபர் - வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), திருமதி சிவநேசஜோதி சிவானந்தராஜா (பொறியியலாளர் நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜேஸ்வரி (ஒய்வு நிலை பேராசிரியர் இரசாயனத்துறை) ருக்மணிதேவி (நியூசிலாந்து) காலஞ்சென்ற ரஞ்சினி (தொழில்நுட்ப உதவியாளர்) மற்றும் பத்மநேசன் (ஒய்வு நிலை முகாமையாளர்- இலங்கை வங்கி ) சிவாஜினி ஜெயபாலன் (ஓய்வுநிலை ஆசிரியர் - யா/இந்துக்கல்லூரி) சிவானந்தராசா (பொறியியலாளர் - நியூசிலாந்து) காலஞ்சென்றவர்களான நயினாதீவு நடராஜா, பாக்கியலட்சுமி, பரமசாமி, பத்மநாதன் மற்றும் பழனிவேல், சோதீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும், கேதாரன், ஆபிராம், சீவகன், வாதாபன், கேசிகன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் (குளக்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு) காலை 8 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
071856133 / 0718561334

No comments: