11/04/2019 விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே  லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார்
லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில்வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சுவீடனிற்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்புவதற்காக ஏழு வருடங்களிற்கு முன்னர்  லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில்  அசெஞ்சே தஞ்சமடைந்திருந்தார்.
விக்கிலீக்ஸ் தொடர்பான விசாரைணைகளிற்காக தான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என தெரிவித்து அவர் தூதரகத்திலிருந்து வெளியேற மறுத்துவந்தார்
இந்நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில் சரணடைய தவறியமைக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சாஜிட் டேவிட்டும் இதனை உறுதி செய்துள்ளார்.
சர்வதேச பிரகடனங்களை ஜூலியன்  அசெஞ்சே தொடர்ச்சியாக மீறியதை தொடர்ந்து அவரிற்கு வழங்கப்பட்டிருந்த புகலிடத்தை விலக்கிக்கொண்டுள்ளதாக ஈக்குவடோர் தெரிவித்துள்ளது
எனினும் ஈக்குவடோர் சர்வதேச சட்டங்களை மீறி சட்டவிரோதமாக அரசியல் புகலிடத்தை விலக்கிக்கொண்டுள்ளது என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது  நன்றி வீரகேசரி