இலங்கைச் செய்திகள்

.

தேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – டலஸ் அழகப்பெரும

மீண்டும் தேசிய அரசாங்கம் உதயமாகும் - ரணில் விக்ரமசிங்க

தேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – டலஸ் அழகப்பெரும

தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளதாகக் கூறப்படும் பிரேரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.சபாநாயகரிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பில், 46 (5) ஆம் சரத்தை மீறுவதாகத் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, 30க்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தேசிய அரசாங்கம் உதயமாகும் - ரணில் விக்ரமசிங்க

பரந்தளவிலான கூட்டணியுடன் எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் களமிறங்கி ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிவாகை சூடும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெரும்பான்மை ஆதரவினை பெற்று மீண்டும் தேசிய அரசாங்கமொன்றினை உருவாக்குவோம். ஆகவே எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணையலாம் எனவும் அழைப்பு விடுத்தார். 


2019 ஆம் ஆண்டுக்கான கம்பெரலிய மற்றும் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டங்களின் அறிமுக விழா அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
நாடடின் பொருளாதாரத்தை உறுதியான நிலைமைக்கு கொண்டுவர வேண்டுமானால் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதிகளை அதிகரிப்பதனூடாகவே பொருளாதார நிலைகளில் மாற்றத்தை கொண்டுவரமுடியும். அதற்கான நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments: