இலங்கைச் செய்திகள்


தியாகி பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள்

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி

இந்திய நிதி உதவியில் 300 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்

காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

நுண்நிதிக்கடனால் வடக்கில் 59 தற்கொலைகள்

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிதியாகி பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள்

05/06/2018 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நேற்று இடம்பெற்றது. 

இதன்போது பொன். சிவகுமாரனுக்கு முன்பாக அவரது சகோதரி சிவகுமாரி சுடர் ஏற்றின அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அங்கிருந்தவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி 

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி

05/06/2018 மாற்றிக்களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைகளை குறைப்போம்” எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில்  பிளாஸ்ரினால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிப்போம், பொலித்தீன் பாவனையை தடுப்போம், காடழிப்பை தடுத்து சுத்தமான காற்றை சுவாசிப்போம், போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு  மாகாண அலுவலகமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன. நன்றி வீரகேசரி 
இந்திய நிதி உதவியில் 300 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
04/06/2018 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கென நிர்மாணிக்கப்படவுள்ள 300 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 
 மடல்கும்புர பிரதேசத்தில் 250 வீடுகளும், ஹட்டன் வெளிஓயா பிரதேசத்தில் 50 வீடுகளும் நிர்மானிக்கபடவுள்ளதுடன் இந்த வீடுகள் மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கும் வீடுகள் இல்லாது வாழ்பவர்களும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளன.
ஏழு பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த வீடுகளுக்கு இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியனும், மலைநாட்:டு புதிய கிராமங்கள் சமூதாய அபிவிருத்தி அமைச்சு 60 மில்லியனும் செலவிடப்படவுள்ளன.
இந்திய அரசாங்கம் ஒரு வீட்டுக்காக பத்து லட்சம் ரூபாவும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சு இரண்டு லட்சம் ரூபாவும் செலவிட்டுவுள்ளன.
.முற்று முழுதாக தோட்டத்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த வீடுகள் அனைத்துக்கும் மின்சாரம், குடிநீர், கழிவறை, குளியலறை வீதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளடங்களாக இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த வீடமைப்பு திட்டத்தின் மூலம் மடல்கும்புர மற்றும் வெளிஓயா தோட்டங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் நன்மையடையவுள்ளனர்.
இந்திய அரசாங்கம் பதுளை மொனராகலை, கண்டி, நுவரெலியா உள்ளிட்டு மாவட்டங்களில் இவ்வாறான 14000 வீடுகள் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், இலங்கைக்கான இந்திய கடமை தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்சி, கண்டி இந்திய உதவி தூதுவர் திரேந்திரசிங், உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை, நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  நன்றி வீரகேசரி 

இலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்

04/06/2018 உலகளாவிய ரீதியில் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. 
இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம்.
இரண்டாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி 188 நாடுகளுக்கு செல்லலாம். மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளும் உள்ளன. இதனை பயன்படுத்தி இந் நாடுகள் 187 நாடுகளுக்கு விசா இனறி செல்லாம்.
புதிய தரவுக்கு அமைய 93 ஆவது இடத்தில் இலங்கை மற்றும் எத்தியோப்பிய நாடுகள் உள்ளன. இந் நாடுகளின் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி விசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 

காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

04/06/2018 காங்கேசன்துறை  கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
வடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தவேளை ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரையும்இரண்டு பெண்கள் குழந்தை  உட்பட ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து 11 கடல்மைல் தொலைவில் கைதுசெய்துள்ளோம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 


நுண்நிதிக்கடனால் வடக்கில் 59 தற்கொலைகள்

09/06/2018 வடமாகாணத்தில் நுண்நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் சௌகரியங்களை எ திர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்;மேளனத்தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார.
நுன்நிதிக்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று கிளிநொச்சியில்  நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் வடமாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குநுண்நிதிக்கடன் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
அதாவது வடமாகாணத்தில் இந்த நுண்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இ ற்கும் மேற்பட்ட தறகொலைகள் இடம்பெற்;றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு நுண்நிதிக்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 14ம்திகதி வடமாகாணத்தின்        அனைத்து மாவட்;டங்களிலும் விழிப்புணர்வுப்பேரணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் கிளிநெர்சி மாவட்டத்தின் விழிப்புணர்வுப்பேரணி கரடிப்போக்குச்சந்தியில்  இருந்து மாவட்டச்செயலகம் வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை இதன்போது கடன்பொறிக்குள் சிக்கித்தவிர்க்கும் மக்கள் கடன்களை மீளச்செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் காலஅவகாசத்தை வழங்குவதுடன், அதற்கான வட்டிகளையும் இரத்துச்செய்து மீளச்செலுத்த அனுமதிக்கப்படவேண்டும்.
கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்தமுடியாமல் வட்டிக்கு வட்டியும் எடுத்த கடன்தொகைக்கு மேலான தொகையை அறவிடுவதை நிறுத்தவேண்டும்,
நுன்கடன் நிதி நிறுவனத்தின் வட்டி வீதங்களைக்குறைக்கவேண்டும்.
அரச வங்கிகள் ஊடான கடன்களுக்கு நிபந்தனைகளை குறைக்கவேண்டும்.
கிராம மட்டங்களில் இருக்கின்ற அமைப்புக்கள் ஊடாக கடன்களைப் பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

08/06/2018 வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சிவாஜிலிங்கத்திற்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைப் பெற்று வரும் சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி No comments: